பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டாவும் பாயாது... உயிரும் போகாது... : குடந்தை இன்ஜி., கண்டுபிடித்த துப்பாக்கி

Updated : டிச 30, 2018 | Added : டிச 30, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 தோட்டாவும் பாயாது... உயிரும் போகாது... : குடந்தை இன்ஜி., கண்டுபிடித்த துப்பாக்கி

தஞ்சாவூர்: துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பதிலாக, வேறு வகையில் கலவரத்தை கட்டுப்படுத்தும் புதிய ரக துப்பாக்கியை, கும்பகோணத்தைச் சேர்ந்த இன்ஜினியர் கண்டுபிடித்துள்ளார்.தஞ்சாவூர், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சரவணன், 26. இவர் ரஷ்யாவில், 'அவனிக்ஸ்' என்ற தொழில்நுட்ப படிப்பில், இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். நண்பர்களுடன் சேர்ந்து, பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு, புதிய தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த கருவிகளை கண்டுபிடித்து வருகிறார்.இந்நிலையில், ஓராண்டுக்கு முன், துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியான சம்பவம், சரவணன் மனதை பாதித்தது. கலவரத்தின்போது உயிர் சேதம் இல்லாமல், சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர, மூன்று மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு, 7 அடி நீளமுள்ள புதிய துப்பாக்கியை கண்டுபிடித்துள்ளார்.
சரவணன் கூறியதாவது:இந்த துப்பாக்கியை கையாள்வது எளிது. இதில், உருண்டை வடிவில் உள்ள உருளை கிழங்கு, களிமண் ஆகியவற்றை செலுத்தி, எலக்ட்ரானிக் மற்றும் வாயு அழுத்தம் மூலம் இயக்கினால், உள்ளே உள்ள குண்டு, 500 மீட்டர் வரை வேகமாக சென்று, எதிரில் உள்ளவர்களை தாக்கும்.இதனால், அந்த இடத்தில் வலிக்கும். உயிர் சேதாரமாகாது. ஒரு சில நாட்களில் சிகிச்சை மூலம் அந்த காயம் சரியாகும். இந்த கண்டுபிடிப்பை மாநில அரசு, மத்திய பாதுகாப்பு துறையின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul - COIMBATORE,இந்தியா
05-ஜன-201919:59:35 IST Report Abuse
Arul உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
Kannan Iyer - Bangalore,இந்தியா
05-ஜன-201916:57:41 IST Report Abuse
Kannan Iyer நீளத்தை வெகுவாக குறைக்க முயற்சிக்க வேண்டும். இல்லையேல் கையாள்வதில் சிரமம் இருக்கும். இதுக்கு ஸ்டாண்ட் தேவை என்றால் இன்னொரு மைனஸ் விஷயம்
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
03-ஜன-201908:32:00 IST Report Abuse
Subramanian Arunachalam இந்த மாணவரின் யோசனை படி, அரசாங்கம் உடனடியாக பூக்கள் , பஞ்சு, ரப்பர் குஷன் , தெர்மோகோல் போன்ற பொருள்களை பயன் படுத்தி தயாரிக்க பட்ட குண்டுகளை தயாரித்து நம் ராணுவம் மற்றும் காவல் துறைக்கு கொடுத்து நம் போராட்டக்காரர்களை பாதுகாக்க வேண்டும் . இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் , மனித உரிமைக்கான நோபல் பரிசும் வழங்க வேண்டும்
Rate this:
Share this comment
Arul - COIMBATORE,இந்தியா
05-ஜன-201919:53:32 IST Report Abuse
Arulநீங்கள் புகழாரம் சூட்டுகிறீர்களா??? இல்லை இகழ்ந்து நகைச்சுவை செய்கிறீரா???...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X