சென்னை: பிரதமர் மோடி குறித்து தவறாக டுவீட் செய்திருந்த நடிகை குஷ்பு, மன்னிப்பு கேட்க தைரியம் உண்டா என கேள்வி எழுந்துள்ளது.
ஒரு பாலத்தில் நடந்து வரும் போது கீழே நின்று கொண்டிருக்கும் ரயிலைப் பார்த்து கையசைக்கும் வீடியோவை அண்மையில் நீங்கள் பார்த்திருக்கலாம். கடந்த சில நாள்களுக்கு முன்னால் சமூக வலைதளங்களில் வைரலாகியது அது குறித்து குஷ்பு டுவிட்டரில் 'வெற்று ரயிலைப் பார்த்து கையசைத்தாரா மோடி?' என பதிவிட்டிருந்தார்.
குஷ்பு டுவீட் செய்ததாவது:ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறீங்க ஜி?
அசாமில் உள்ள போகிபீல் பாலத்தைக் கடந்த 25-ம் தேதி திறந்து வைத்தார் பிரதமர் மோடி. மேலும் அதில் பயணிக்கும் முதல் ரயிலையும் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். அதன் பிறகு பாலத்தில் நடந்து வரும் மோடி கீழே நின்று கொண்டிருக்கும் ரயிலைப் பார்த்து கையசைக்கிறார். ஆனால் அந்த ரயிலில் எவருமே இருந்ததைப் போலத் தெரியவில்லை. மேலும் பாலத்தின் சுவரில் கேமராவின் நிழலும் தெரிகிறது.
10 நொடிகளுக்கும் குறைவாகவே ஓடக்கூடிய அந்த வீடியோவில் இருந்த காட்சிகள் இவ்வளவுதான். மோடிக்கும் கேமராவிற்கும் இடையே உள்ள பந்தம் ஏற்கனவே வைரலான விஷயம்தானே, அதைப் போல இதுவும் ஒன்று என மக்கள் நினைத்துக் கொண்டார்கள். எனவே ரயிலில் யாரும் இல்லையென்றாலும் கேமராவிற்காக மோடி நடிக்கிறார் என்பதே பலரின் எண்ணமாக இருந்தது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் கூடுதலாகவே கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார். 'கற்பனையான கூட்டத்தைப் பார்த்து கை அசைக்கிறீர்களா மோடிஜி. ஆளே இல்லாத கடையில் யாருக்கு ஐயா டீ ஆத்துறீங்க?? நீங்கள் எப்போது உண்மையாகவே வேலை பார்க்கப் போகிறீர்கள்?" என ட்வீட் செய்திருந்தார்.
வைரல் வீடியோவுக்கு பின்னால் இருக்கும் உண்மை:
கீழே நின்ற ரயிலில் ஆட்கள் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. அவர்களைப் பார்த்து மோடி கையசைத்ததும் உண்மை. அதை அந்த நிகழ்வு தொடர்பான வேறு புகைப்படங்களிலோ மற்ற வீடியோக்களிலோ அதைத் தெரிந்து கொள்ள முடியும். வீடியோவில் ரயிலின் உள்ளே ஆட்கள் இருப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஒரு தவறான செய்தி எந்த அளவு வேகமாகப் பரவும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். இந்த விஷயத்தைப் பதிவு செய்த பலர் அந்த வீடியோ உண்மையில்லை என்று தெரிந்த பின்னரும் கூட இன்னும் அதை நீக்காமல் வைத்திருக்கிறார்கள், தவறான செய்தியைப் பதிவு செய்ததற்காக வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE