அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 CM Palanisamy,TN Government,Plastic barrier,மஞ்சப்பை, தமிழகம், பிளாஸ்டிக் தடை, பாலித்தீன் பைகள் , முதல்வர் பழனிசாமி, பிளாஸ்டிக் பொருட்கள்,  சுற்றுச்சூழல் பாதிப்பு, பிளாஸ்டிக், தமிழக அரசு,  polythene bags, chief plasticine, plastic products, environmental damage, plastic,Chief Minister Palanisamy, 
Tamil Nadu Government,Yellow bag,manjapai,

தமிழகம் முழுவதும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, நாளை முதல் அமலுக்கு வருகிறது. பாலித்தீன் பைகள் உட்பட, 14 பொருட்களுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இனி, துணியால் ஆன, 'மஞ்சப்பை'க்கு மவுசு அதிகரிக்கும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, இருப்பு வைத்திருப்போர், உள்ளாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்படைக்காதவர்களிடம், பறிமுதல் செய்ய, அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் கடைக்கு, பொருட்கள் வாங்கச் சென்றால், துணிப்பை எடுத்து செல்வது வழக்கம். தற்போது, கை வீசி செல்கின்றனர். கடைக்காரர் தரும் பிளாஸ்டிக் பைகளில், பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால், பிளாஸ்டிக் குப்பை அதிகரித்துள்ளது.மக்காத பிளாஸ்டிக் பொருட்களால், சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. நிலத்தின் மீது குவிந்து கிடக்கும், பிளாஸ்டிக் பைகளால், மழை நீர் பூமிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இயற்கை ஆர்வலர்கள்


இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, 'பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்' என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.இதையேற்று, பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி, இதர, மக்காத, பிளாஸ்டிக் பொருட்களுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986ன் கீழ், தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிளாஸ்டிக்கால் ஆன, தாள்கள், தட்டுகள், டீ கப்புகள், தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள்,

உறிஞ்சு குழல், கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட, 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை தயாரித்தல், விற்பனை செய்தல், இருப்பு வைத்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கான அறிவிப்பை, உலக சுற்றுச்சூழல் தினமான, ஜூன், 5ல், சட்டசபையில், முதல்வர் பழனிசாமி, 110 விதியின் கீழ், வெளியிட்டார்.
அதன் பின், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டது; மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாளை அமல்


அரசு உத்தரவின்படி, மக்காத, ஒரு முறை பயன்படுத்தி, துாக்கி வீசும் பிளாஸ்டிக் பை போன்ற பொருட்களுக்கான தடை, நாளை முதல் அமலுக்கு வருகிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் பொறுப்பு, மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள், பிளாஸ்டிக் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதை, உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்போர், உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம் என, அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு ஒப்படைக்காமல், பதுக்கி வைத்திருந்தால், அவற்றை பறிமுதல் செய்யவும், அதிகாரிகளுக்கு, அரசு அதிகாரம் அளித்துள்ளது. பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருவதால், நாளை முதல் பொதுமக்கள், கடைகளுக்கு செல்லும் போது, துணியால் ஆன, மஞ்சப்பை போன்ற துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டியது அவசியம்.

தடை செய்யப்பட்ட பொருட்கள்


உணவுப் பொருட்களை மடிக்க பயன்படுத்தும், பாலித்தீன் அல்லது பிளாஸ்டிக் தாள்; 'தெர்மாகோல்' தட்டுகள்; பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள்; பிளாஸ்டிக் குவளைகள்; நீர் நிரப்ப பயன்படும் பைகள்; பிளாஸ்டிக் கேரி பேக்; பிளாஸ்டிக் கொடிகள்; பிளாஸ்டிக் விரிப்புகளை பயன்படுத்தக் கூடாது.
மேலும், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள்; டீ குவளைகள்; உறிஞ்சு குழல்கள்; பிளாஸ்டிக் பூச்சுள்ளபைகள்; நெய்யாத பிளாஸ்டிக் பைகள்

போன்றவற்றுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.

'மக்கள் ஒத்துழைக்க வேண்டும்


'சென்னையில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:பிளாஸ்டிக் பொருட் களுக்கான தடை, ஜன., 1 முதல் அமலுக்கு வருகிறது. பக்கெட் உட்பட, சில வகையான பிளாஸ்டிக்கிற்கு தடையில்லை; 14 வகையான பொருட்களுக்கு தான் தடை. பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் பாதிக்காதிருக்க, அரசு நடவடிக்கை எடுக்கும்.
பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் பாதிக்கப் படுகிறது; கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படு கின்றன; மழைநீர் பூமிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இயற்கையை பாதுகாப் பதற்காக, வேறு வழியின்றி, பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்புக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மாற்று பொருட்கள் என்ன?


தடை செய்யப்பட்ட, பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக, தாமரை இலை, மந்தாரை இலை, வாழை இலை, தேக்கு மர இலை, அலுமினியத் தாள், காகிதச் சுருள், கண்ணாடி அல்லது உலோகத்தால் ஆன குவளைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.மேலும், மூங்கில் மற்றும் மரப் பொருட்கள்,காகித குழல்கள், துணி, காகிதம், சணல் பைகள், காகித, துணி கொடி கள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள், மண் குவளைகள் போன்றவற்றை பயன்படுத்த, அரசு அறிவுறுத்தி உள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
31-டிச-201821:58:05 IST Report Abuse

Krishnamurthy Venkatesanசரவணா ஸ்டோர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ், பெரிய பெரிய டெக்ஸ்டைல்ஸ் கடைகள் எல்லாம் பிளாஸ்டிக் பைகளைத்தான் உபயோகிக்கிறார்கள். ஜனவரிக்கு பின்னர் அங்கெல்லாம் RAID போவார்களா?

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
31-டிச-201820:55:10 IST Report Abuse

Bhaskaranஒரு மஞ்சப்பையும் ஒரு ஜோல்னாப்பையும் எப்போதும் வைத்திருப்பேன் கடைக்குச்சென்றால் அதில் பொருட்கள் வாங்கிக்கொள்வேன் ஆனால் சென்னையில் இளைஞர்கள் தபால்காரர் என்று கேலிசெய்கிறார்கள் அதனால் கவலைப்படுவதில்லை

Rate this:
skv - Bangalore,இந்தியா
09-ஜன-201909:48:34 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>என்ன தப்புங்க இதுலே யு ARE GREAT AND WELL WISHER OF OUR பூமி என்பேன் BEST WISHES FUNTAAAAAASTIK ...

Rate this:
Diya -  ( Posted via: Dinamalar Android App )
31-டிச-201815:50:11 IST Report Abuse

DiyaRice, lentils, milk, oil, butter, flour, nuts, cereals, pasta, hand wash, cleaning products can be sold using vending machines with little technology which measures, delivers, and auto cleans. Standard shape and size containers to be allowed for vending machines. Proper disposing cover should be provided along with waste napkins for segregation. Electronic items hardware s should be in a frequency of atleast once in three years.

Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X