லோக்சபா தேர்தல் களத்தில் மீண்டும் அத்வானி, ஜோஷி | Dinamalar

லோக்சபா தேர்தல் களத்தில் மீண்டும் அத்வானி, ஜோஷி

Added : டிச 31, 2018 | கருத்துகள் (74)
Advertisement
L K Advani, Murli Manohar Joshi, Lok Sabha Elections 2019, PM Modi, லோக்சபா தேர்தல் 2019,  லால் கிருஷ்ண அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அத்வானி, ஜோஷி, பா.ஜ.,  பிரதமர் மோடி, அமித்ஷா, சட்டசபை தேர்தல் 2018, பாரதிய ஜனதா, Lok Sabha Elections 2019, Lal Krishna Advani, Advani, Joshi, BJP, Prime Minister Modi, Amit Shah, Assembly Election 2018, Bharatiya Janata,

புதுடில்லி: பாஜவில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பழம்பெரும் தலைவர்கள் அத்வானியும் ஜோஷியும் வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாஇந்த இரு தலைவர்களுக்கு 75 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த ஒரு காரணத்திற்காகவும், கட்சியில் இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், இந்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். அவர்களும் தீவிர கட்சிப் பணியில் ஈடுபடாமல், பட்டும் படாமலும் இருந்தனர். சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல், இவர்களுக்கான கதவை திறந்துவிட்டுள்ளது. விமர்சனம் செய்பவர்களின் வாயை அடைக்கவும், கட்சியினரை திருப்திப்படுத்தவும் இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க பிரதமர் மோடியும் கட்சி தலைவர் அமித்ஷாவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

1998 முதல் காந்திநகர் (குஜராத்) தொகுதியில் தொடர்ந்து 5 முறை தேர்வு செய்யப்பட்டவர் அத்வானி. கான்பூர் தொகுதியின் எம்பியாக தற்போது ஜோஷி இருக்கிறார். மோடி போட்டியிடுவதற்கு வசதியாக, 2014 தேர்தலில் வாரணாசியில் இருந்து கான்பூருக்கு ஜோஷி நகர்த்தப்பட்டார்.


91, 85 வயதிலும் ஆர்வம்இப்போது 91 வயதானாலும், இன்னமும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார் அத்வானி. 85 வயதாகும் ஜோஷியும் தேர்தலுக்கு தயார் என்கிறார். ஆனால், 2014 தேர்தலில் தங்களுக்கான முக்கியத்துவத்தை மோடி தரவில்லை என்ற ஆதங்கம் இவர்களுக்கு இருந்தது. வரும் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இளம் தலைமுறைக்கு இடம் கொடுத்துவிட்டு, பெரியவர்களை புறம் தள்ள கட்சி தயாராக இல்லை. எந்த பரீட்சார்த்த முயற்சியையும் விட, தேர்தலில் வெற்றி பெறுவது தான் முக்கியம் என கட்சி கருதுகிறது.


மகளுக்கு சீட்


போட்டியிட வயது இடம் கொடுக்காவிட்டால், மகள் பிரதீபாவுக்கு அத்வானி சீட் கேட்பார் என்கிறார்கள். கட்சியின் மற்ற முன்னணி தலைவர்களான சுஷ்மா சுவராஜ் (66), உமா பாரதி (59), லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் (76) ஆகியோர், உடல்நிலையை காரணம் காட்டி, வரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என ஏற்கனவே தெரிவித்து விட்டார்கள். இதில் 2014 தேர்தலில் சுமித்ரா, 8 வது முறையாக லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர்.கட்சியின் முடிவால் மாஜி தலைவர்கள் மீண்டும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
31-டிச-201822:09:13 IST Report Abuse
Bhaskaran தமிழகத்திலேஒரு தாத்தா 90 வயதுக்குமேல் தேர்தலில் நிக்கலியா அத்தைமாதிரின்னு நினச்சுக்குவோம்
Rate this:
Share this comment
Cancel
31-டிச-201821:49:28 IST Report Abuse
 முடியட்டும் விடியட்டும் தான் ஜெயிக்க மாட்டோம் என்கிற பயத்தில் வயசான ஆடுகளை முன்னிறுத்துகிறார் இது அவரின் ராஜ தந்திரம்
Rate this:
Share this comment
Cancel
kadhiravan - thiruvaroor,இந்தியா
31-டிச-201820:59:32 IST Report Abuse
kadhiravan வேறுவழி..,இவர்கள் போட்டியிட்டுதான் ஆகவேண்டும்..,பி .எஸ் .பி..,எஸ் .பி ..,காங்கிரஸ் ஒன்றிணைந்து போட்டியிட்டால் பழையத்தலைவர்கள் டெபாசிட் வாங்குவார்கள் ..,புதியவர்கள் நோட்டாவுக்கும் கீழே சென்றுவிடுவார்கள்..,இதுதான் உ .பி இல் இன்றைய நிலை..,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X