அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., மரணத்தில் சந்தேகம் இருப்பது உறுதி :
அமைச்சர் பேட்டியால் சசி கும்பல் அலறல்

'ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த, தமிழக அரசு, விசாரணைக் குழு அமைக்க வேண்டும்' என, தமிழக சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் அதிரடியால், சசி கும்பல் அலற துவங்கியுள்ளது.

ஜெ., ஜெயலலிதா மரணம், அமைச்சர், சண்முகம், சசி கும்பல்,  சுகாதார செயலர், ராதாகிருஷ்ணன், TN Law minister,  Jayalalithaa,deathஜெ., மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. சமீபத்தில், விசாரணை கமிஷன் வழக்கறிஞர், ஜாபருல்லாகான், கமிஷனில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், முன்னாள் தலைமை செயலர், ராமமோகனராவ், தற்போதைய சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் ஆகியோரை, எதிர் மனுதாரராக சேர்க்க கோரியுள்ளார். இம்மனு, நாளை விசாரணைக்கு வர உள்ளது.இந்நிலையில், சட்ட அமைச்சர், சி.வி.சண்முகம் அளித்த பேட்டி, தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி:
ஜெயலலிதா திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து, இரண்டு நாட்களில் திரும்பி விடுவார் என நினைத்து, தொண்டர்கள் மருத்துவமனை முன் காத்துக் கிடந்தனர். டாக்டர்கள் கூறியதை, அனைவரும் நம்பினோம். திடீரென, மாரடைப்பால் இறந்து விட்டார் என்று, மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தனர்.

மருத்துவமனையில், 75 நாட்கள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் யாரும், ஜெ.,வை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. காலை முதல் இரவு வரை, மருத்துவமனையில் இருந்தோம்.தற்போது, 'இட்லி சாப்பிட்டார்; உப்புமா சாப்பிட்டார்' எனக் கூறி, 1.17 கோடி ரூபாய், ஜெயலலிதா மருத்துவ செலவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜெ.,வால் விரட்டி அடிக்கப்பட்ட, சசிகலா குடும்பம் மொத்தமும், அங்கு தங்கி இருந்தது.
அவர்கள், மருத்துவமனையை விடுதியாக்கி, 1.17 கோடி ரூபாய்க்கு சாப்பிட்டுள்ளனர். ஜெ., இறப்பில் மர்மம் உள்ளது. இதுகுறித்து விசாரிக்க, கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.விசாரணையில், அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்துள்ளன. தற்போது, கமிஷன் வழக்கறிஞர், கமிஷனில் ஒரு மனு அளித்துள்ளார்.ஏற்கனவே, எதிர் மனுதாரர்களாக, சசிகலா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது, மாஜி தலைமை செயலர், ராமமோகனராவ், சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் ஆகியோரை, எதிர்மனுதாரராக சேர்த்துள்ளனர்; அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.

கமிஷனில், முன்னுக்கு பின் முரணான தவறான தகவலை தந்துள்ளனர்; ஆவணங்களை மறைத்துள்ளனர்.முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், ஜெ., வை காப்பாற்றி இருக்கலாம். டாக்டர்கள் மூன்று முறை கூறியும், ஆஞ்சியோகிராம் செய்யப்படவில்லை. ஆஞ்சியோகிராம் செய்ய விடாமல் தடுத்தது யார்; தவறான சிகிச்சை கொடுத்தது யார்; மருத்துவமனை நோக்கம் என்ன; மருத்துவமனையை ஆட்டி படைத்தது யார் என்ற உண்மை தெரிய வேண்டும்.'ஜெ.,க்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்' என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.


மத்திய அரசு, ஏர் ஹெலிகாப்டர் உட்பட, அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக கூறியுள்ளது. இந்த முயற்சியை தடுத்துள்ளனர்.சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன், 'ஜெ.,க்கு வெளிநாட்டில் சிகிச்சை அளித்தால், இந்திய டாக்டர்களின் மதிப்பு கெட்டுவிடும்' என்று கூறியுள்ளார். 'ஜெ., உயிரை காப்பதை விட, டாக்டர்கள் கவுரவம் முக்கியம்' எனக் கூறியுள்ளார். அவரின் பின்னணி குறித்து, அரசு விசாரிக்க வேண்டும்.

முன்னாள் தலைமை செயலர், ராமமோகனராவ், 'ஜெ.,க்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கம்படி அமைச்சரவையில் கூறினேன்; ஏற்கப்படவில்லை' என, தவறான தகவலை கூறியுள்ளார். அமைச்சரவை கூட்டத்தில், அவரை அழைத்து விசாரிக்க வேண்டும்.மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்டதில் இருந்து, அவர் இறக்கும் வரை, அமைச்சரவை கூடவில்லை. ஜெ., மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது. ஆணையம் முழுமையான அறிக்கை தரும் முன், இடைக்கால அறிக்கையை, அரசுக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசு, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து, இதை விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.ஜெ., மரணம் குறித்து ஆறுமுகசாமி கமிஷன்

Advertisement

விசாரித்து வரும் நிலையில், சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்ற அமைச்சரின் அதிரடி பேட்டி, சசி கும்பலை அலற வைத்துள்ளது.

'சி.பி.ஐ., விசாரணை?'தமிழக மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் அளித்த பேட்டி:'சுகாதாரத்துறை செயலரை விசாரிக்க வேண்டும்' என, அமைச்சர், சி.வி.சண்முகம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அவரது கருத்துக்களை, விசாரணை கமிஷன் கவனத்தில் எடுத்து விசாரிக்க வேண்டும். மாநில அரசு, விசாரணைக்குழுவை அமைக்கலாம்.
ஜெ., சிகிச்சை பெற்ற மருத்துவமனையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் தங்கவில்லை; சசிகலா குடும்பம்தான், பல அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியது. ஜெ., சாப்பிடவில்லை; சசி கும்பல் சாப்பிட்டதில் தான், 1.17 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக, ஜெயின் கமிஷன் விசாரித்தபோதும், சி.பி.ஐ., விசாரித்தது. 'அதேபோல், விசாரணைக் குழு வேண்டும்' என, சட்ட அமைச்சர் கூறியுள்ளார். இது குறித்து, அரசு முடிவெடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வருடன்செயலர் சந்திப்பு'ஜெ., மரணம் தொடர்பாக, சுகாதாரத்துறை செயலரிடம், விசாரிக்க வேண்டும்' என, சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம் பேட்டி அளித்தார். பேட்டி அளித்த சிறிது நேரத்தில், முதல்வர் பழனிசாமியை, அவரது இல்லத்தில், சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். விசாரணை கமிஷன் வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனு, அமைச்சர் பேட்டி குறித்து, முதல்வரிடம் அவர் பேசியதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சுகாதார செயலர் ஆஜராக, 'சம்மன்'

ஜெ., மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், விசாரித்து வருகிறது. குறுக்கு விசாரணைக்கு, நாளை ஆஜராகும்படி, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான, ஷீலாபாலகிருஷ்ணன், சாந்தாஷீலாநாயர் ஆகியோருக்கு, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன், ஜன., 4ல், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே, இரு முறை ஆஜராகி உள்ளார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
07-ஜன-201915:58:15 IST Report Abuse

madhavan rajanவெளிநாட்டில் சிகிச்சை அளித்தால் இந்திய மருத்துவர்களின் மதிப்பு குறைந்துவிடும் என்றால், அவரை தலைமை அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை அளித்திருக்க வேண்டும். அப்போல்லோவில் சிகிச்சை அளித்ததால் அரசு மருத்துவர்களின் மதிப்பு குறைந்துவிட்டதல்லவா? அதற்கு அரசும் சுகாதாரத்துறை செயலரும் என்ன கூறப்போகிறார்கள். எம் ஜீ ஆருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டதே. அப்போது இந்திய மருத்துவர்களின் மதிப்பு குறையவில்லையா? அப்போல்லோவில்கூட வெளி நாட்டு மருத்துவர்களை அழைத்து ஆலோசனை கேட்கப்பட்டதே. அது சரியா?

Rate this:
oce - tokyo,ஜப்பான்
02-ஜன-201907:29:01 IST Report Abuse

oceமிஸ்டர் ஆனந்தன் கேமராக்களை நீக்க சில அதிமுக கட்சி அலுவலர்களை நிர்ப்பந்தித்திருக்கலாம். அவர்களை கண்டு பிடித்து விசாரித்தால் ஒரு வேளை உண்மை தெரியும்.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
02-ஜன-201907:21:52 IST Report Abuse

oceIt is seen that the Chief Minister Jaya lalitha was want only admitted in Appollo Hospital which was put into dark and kept isolated during her stay for seventy five days entirely from outside contact. Who was then held responsible for those misbehavior. The top level authorities must have frequent watches over the hospital and find out as to what is going on in the inner side of hospital and justify the routine and normal activities committed by some other irrelevant persons towards the treatment of bed ridden Chief Minister even though they might have acted as an apex body over ruling rather than the Chief Minister’s super power.

Rate this:
மேலும் 54 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X