பொது செய்தி

இந்தியா

பிறந்தது புத்தாண்டு:நாடு முழுவதும் உற்சாகம்

Updated : ஜன 01, 2019 | Added : டிச 31, 2018
Advertisement
பிறந்தது, புத்தாண்டு

புதுடில்லி: 2019-ம் ஆண்டு புத்தாண்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2019-புத்தாண்டு இன்று உலகில் முதன்முதலாக நியூசிலாந்தில் பிறந்தது. இந்திய நேரப்படி இன்று ( டிச. 31) மாலை 4.30 மணியளவில் நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது.சிட்னி துறைமுகம் அருகே கண்ணை கவரும் வான வேடிக்கையுடன், இசை நிகழ்ச்சிகளுடன் சிட்னிவாசிகள் ஒன்று கூடிய மக்கள் புத்தாண்டை ஆடிப்பாடி வரவேற்றனர்.
இந்தியாவில் புதுடில்லியில் இந்தியா கேட் பகுதியில் இப்போத பொதுமக்கள் குவிய துவங்கியுள்ளனர். கடும் குளிர் நிலவிய போதிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தியா கேட்டில் குவிந்துள்ளனர். இதற்காக இந்தியா கேட் மின் விளக்கில் ஜொலித்தது.
இதே போன்று மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் மக்கள் குவிந்துள்ளனர். மேலும் இசைக்கலைஞர்கள் பலர் ஆடிப்பாடி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்க காத்திருக்கின்றனர். மேலும் இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஏராளமான பொதுமக்கள் கூடி புத்தாண்டை கொண்டாட உள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை செல்லும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன. 2019 ஆம் ஆண்டை வரவேற்க சென்னை மெரினாவில் பொதுமக்கள் குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X