பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
Disaster Management Fund,  Gaja Storm, CM Palanisamy,PM Modi,கஜா புயல், மத்திய அரசு, தமிழக அரசு, கஜா புயல் பாதிப்பு , புயல் பாதிப்பு , டெல்டா மாவட்டங்கள், புயல் சேதம், முதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி,பேரிடர் மேலாண்மை நிதி, அமைச்சர் ராஜ்நாத்சிங் ,Central Government, Tamilnadu Government, Gaja Storm Damage, Storm Damage, Delta Districts, Storm Damage, Chief Minister Palanisamy, Prime Minister Narendra Modi, Minister Rajnath Singh,

'கஜா' புயல் நிவாரணத்திற்காக, தமிழகத்திற்கு ஏற்கனவே, 173 கோடி ரூபாய் அளித்த நிலையில், நேற்று, 1,146 கோடி ரூபாயை விடுவித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புயல் சேதத்திற்காக கேட்ட இடைக்கால நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசும், பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில், நவ., 16 அதிகாலை, 'கஜா' புயல், கரையை கடந்தது. புயலால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது.
டெல்டா மாவட்டங்கள், முழுமையாக பாதிக்கப்பட்டன.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், பல லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மக்கள், தங்களின் வாழ்வாதாரங்களை இழந்தனர். புயல் சேதங்களை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, நவ., 20ல், டில்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தார்.'புயலால்

பாதிக்கப்பட்ட பகுதிகளில், தற்காலிக புனரமைப்புக்கு, 1,431 கோடி ரூபாய்; நிரந்தர புனரமைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்கு, 14 ஆயிரத்து, 910 கோடி ரூபாய் வழங்க வேண்டும். புயல் சேதங்களைப் பார்வையிட, மத்திய குழுவை அனுப்ப வேண்டும்' என, பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.
இதையேற்று, மத்திய குழுவை அனுப்ப, பிரதமர் உத்தரவிட்டார். மத்திய குழுவினர், நவ., 23 முதல், 27 வரை, புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று, சேதங்களை பார்வையிட்டனர். அவர்களிடம், தமிழக அரசு சார்பில், இடைக்கால நிவாரணமாக, 2,700 கோடி ரூபாய் வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, மத்திய குழுவினர் ஆய்வு முடித்தபின், புயல் நிவாரணப் பணிகளுக்கு

உதவ, மாநிலங்களுக்கான பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து, மத்திய அரசின் பங்காக, 353.70 கோடி ரூபாயை, மத்திய அரசு விடுவித்தது. அதன்பின், மத்திய வேளாண்மைத் துறை சார்பில், தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 173 கோடி ரூபாய், விவசாயிகளுக்கு உதவுவதற்காக வழங்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில், நேற்று, உயர்நிலைக் கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர், அருண்ஜெட்லி, வேளாண்துறை அமைச்சர், ராதா மோகன் சிங், நிதி ஆயோக் துணைத் தலைவர், ராஜிவ்குமார் மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கஜா புயல் நிவாரணமாக, தமிழகத்திற்கு, 1,146 கோடி

ரூபாய் ஒதுக்க, அனுமதி அளிக்கப்பட்டது. மத்திய அரசு, இடைக்கால நிவாரணமாக, 1,146 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது, தமிழக அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த உதவியால், தங்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான சலுகைகள் கிடைக்கும் என, டெல்டா மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கூடுதல் தொகை


தமிழகத்தில், வர்தா புயலால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளானபோது, தமிழக அரசு, மத்திய அரசிடம், 22 ஆயிரத்து, 573 கோடி ரூபாய் நிதி கேட்டது. மத்திய அரசு, 266.17 கோடி ரூபாய் ஒதுக்கியது.ஒக்கி புயலால், தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசிடம், 5,255 கோடி ரூபாய் நிவாரணம் கோரியது. இதற்கு, 133 கோடி ரூபாயை மட்டும், மத்திய அரசு வழங்கியது. தற்போது, கஜா புயல் நிவாரணத்திற்கு, இடைக்கால நிவாரணமாக, 1,431 கோடி ரூபாய் கேட்ட நிலையில், இரண்டு கட்டமாக, 1,319 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravisankar K - chennai,இந்தியா
01-ஜன-201923:08:18 IST Report Abuse

ravisankar Kசமீபத்தில் தமிழகத்துக்கு வர இருந்த சிறந்த இரெண்டு தனியார் பல்கலைக்கழங்கள் இங்குள்ள பிரச்சனைகளால் ஆந்திர ஸ்ரீ சிட்டி சென்றுவிட்டது . சென்னை IIT யில் தமிழக மாணவர்களே கிடையாது என்ற நிலைமை . எல்லாம் ஆந்திர மாணவர்கள் . தமிழக மாணவர்கள் போட்டி தேர்வுகளில் ஏன் தோல்வி என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது . தமிழக மாணவர்களுக்கு இருந்த ஆங்கில திறமை இப்போது அதல பாதாளத்தில் உள்ளது . வெறும் இலவசங்கள் மக்களை வாழ வைக்காது . அது அவசியமும் இல்லை . கல்வி மற்றும் வேலை என்பதே மக்களின் கோரிக்கையாய் இருக்க வேண்டும் .

Rate this:
S.kausalya - Chennai,இந்தியா
01-ஜன-201918:49:57 IST Report Abuse

S.kausalyaமோடியின்கையிலிருந்து கொடுக்கவில்லைதான். அப்படி கையிலிருந்துகொடுத்தCm, pm யாராவது இருந்தால் சொல்லுங்கள். பார்ப்போம்கொ டுத்தாலும், ஏதாவது சொல்வதுகொடுக்கவில்லை எனில் அதற்கும்ஏ தாவது சொல்வது. உங்களின் நோக்கம்தான் என்ன?Manila அரசு கேட்கும் நிதி முழுமையாக மத்திய அரசு கொடுத்தாலும்வேறு ஏதாவது சொல்லுங்கள். எப்படியும்அ ரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள்தா ன் சாப்பிட போகிறார்கள். எலும்பு துண்டு தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு போகும். அவர்களும் தேர்தலின் போது கொடுக்கும் இலவசம், பணம் போதும் என உள்ளார்கள்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
01-ஜன-201918:39:07 IST Report Abuse

Pugazh V"இலவசம் என்ற பெயரில் அடிக்கப்படும் கொள்ளையை தடுத்து நிறுத்தினாலே நிதிநிலைமை அதிகரித்து விடும்"- இதை மாயவன், வட இந்தியாவில், இலவச சமையல்வாயு, இலவச வீடுகள் தருகின்ற பாஜக அரசுக்கு சொல்கிறார் தானே? நகரங்களில் உட்கார்ந்து கொண்டு, புயலால் பாதிக்கப்பட்ட வர்கள் பற்றி அறியாமல், நிவாரணம் தரக்கூடாது என்று எழுதும் அளவிற்கு பாஜகவினரிடம் மனிதம் மறைந்து விட்டது அதிர்ச்சியான நிஜம்.

Rate this:
nanbaenda - chennai,இந்தியா
01-ஜன-201922:13:47 IST Report Abuse

nanbaendaஅள்ளிக்கொடுத்தாலும், கிள்ளிக்கொடுத்தாலும் மக்களுக்கு போவது கொஞ்சமே. இவர்கள் மத்திய அரசிடம் அதிகம் தொகை கேட்பது இவர்கள் பாக்கெட்டை நிரப்பிக்கொள்ளத்தான். புயல் ஒரு காரணம் அவ்வளவுதான். இந்த நிதியை இலவச அறிவுப்புக்கும், அரசு ஊழியர் சம்பள உயர்வுக்கும் பயன்படுத்தி சாதாரண மக்கள்தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள். திராவிட சித்தாந்தம் என்பது இதுதான். இங்கு தேசிய கடசிகள் ஆட்ச்சிக்கு வந்தால்தான் நிலைமை மாறும். ...

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X