ஆளுங்கட்சிக்கு... பூஸ்ட் தர்ற 200 லேடீஸ்!| Dinamalar

ஆளுங்கட்சிக்கு... 'பூஸ்ட்' தர்ற 200 லேடீஸ்!

Added : டிச 31, 2018
Share
காலையில் கண் விழித்தபோது, ஆண்டிராய்டு போன், செல்லமாக சிணுங்கியது. எடுத்துப்பேசினால் மித்ராவேதான்.''உங்க அபார்ட்மென்ட் கீழேதான் நிற்கிறேன். காலையில பிளாஸ்டிக் அவேர்னெஸ் ராலியில கலந்துக்க போகணும்னு, சொல்லியிருந்தேனே மறந்துட்டியா'' என்றாள்.அப்போதுதான், முந்தைய இரவு போட்ட புரோகிராம் நினைவுக்கு வந்தது.''அட ஆமா இல்ல...சாரி. நீ வாட்ஸ்ஆப் அப்டேட் பண்ணி
 ஆளுங்கட்சிக்கு... 'பூஸ்ட்' தர்ற 200 லேடீஸ்!

காலையில் கண் விழித்தபோது, ஆண்டிராய்டு போன், செல்லமாக சிணுங்கியது. எடுத்துப்பேசினால் மித்ராவேதான்.''உங்க அபார்ட்மென்ட் கீழேதான் நிற்கிறேன். காலையில பிளாஸ்டிக் அவேர்னெஸ் ராலியில கலந்துக்க போகணும்னு, சொல்லியிருந்தேனே மறந்துட்டியா'' என்றாள்.அப்போதுதான், முந்தைய இரவு போட்ட புரோகிராம் நினைவுக்கு வந்தது.''அட ஆமா இல்ல...சாரி. நீ வாட்ஸ்ஆப் அப்டேட் பண்ணி முடிக்கறதுக்குள்ளே வந்துர்றேன். வெயிட் பண்ணு'' என்று கூறிய சித்ரா, போனை 'ஆப்' செய்து விட்டு டாய்லெட்டுக்குள் புகுந்தாள்.சொன்னது போலவே, பத்து நிமிடத்தில் ஜீன்ஸ், டாப்ஸ்சுக்குள் நுழைந்து, மித்ரா முன் நின்றாள். இருவரும் ரேஸ்கோர்ஸ் சென்றடைவதற்குள், அந்த மெல்லோட்ட ராலி துவங்கியிருந்தது. இருவரும் மெல்ல ஜாகிங் செய்தவாறு, ராலியில் இணைந்து கொண்டனர்.''ரேஸ்கோர்ஸ் ரோடு என்ன இப்படி ஆயிருச்சு... வி.ஐ.பி.,க்கள் இருக்கற ஏரியான்னுதான் பேரு'' என்றாள் மித்ரா.''இந்த ரோடு இப்படி பொத்தலாகி, வருஷம் ஒண்ணாயிருச்சு. மாநகராட்சி சுத்தமா கண்டுக்கறதில்லை'' என்றாள் மித்ரா.''ஓட்டு வாங்கி ஜெயிச்ச தொகுதி எம்.எல்.ஏ., தினமும், இங்கதான் வாக்கிங் வர்றாரு. அவருக்கு இது தெரியாதா என்ன''''அதை விடு. லோக்சபா தேர்தல்ல, பொள்ளாச்சி தொகுதியில், அ.தி.மு.க., கேன்டிடேட்டா நிற்கப்போறது, வி.ஐ.பி.,யோட உடன்பிறப்புதானாம். அதுக்காக இப்பவே, ஆறு தொகுதியிலயும் வேலையை ஆரம்பிச்சிட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.''அப்படிப்போடு அருவாள...''தொடர்ந்த மித்ரா, ''அதுக்கு பிள்ளையார் சுழி போடுற மாதிரி, தொண்டாமுத்தார் தொகுதியில, 200 லேடீசை, 'டோர் பை டோரா' களம் இறக்கியிருக்காங்களாம். அவங்க ஒவ்வொரு வீட்டுலயும், அரசாங்க சலுகை தொடர்பா என்னென்ன குறைகள் இருக்குன்னு லிஸ்ட் எடுக்குறாங்களாம். தொகுதி முழுக்க 'கவர்' பண்றதுக்குதான் இந்த ஏற்பாடாம்'' என்றாள்.''விசிட் போற லேடீஸ் எப்படி இதுக்கு சம்மதிச்சாங்களாம்...அலைச்சல் பொழப்பாச்சே'' என்று கேட்டாள் மித்ரா.''சும்மாவா... தினசரி படி 300 ரூபா, மூணு வேளை சாப்பாடு கொடுக்கிறாங்களாம். தொண்டாமுத்துார முடிச்சிட்டு, அடுத்தடுத்து மத்த 'அசெம்ப்ளி' தொகுதிக்கும், விசிட் அடிக்குறாங்களாம். பொள்ளாச்சி தொகுதியில பிரதர எப்படியாவது ஜெயிக்க வச்சிரணும்னு தொண்டர்களுக்கு உத்தரவாம்'' என்றாள்.அதற்கு மித்ரா, ''வர்ற எலக் ஷன்ல ஜெயிப்போமா, தோத்து போயிருவோமான்னு பயந்துட்டிருக்கற, ஆளுங்கட்சி தொண்டருங்களுக்கு, லேடீஸ் விசிட் மேட்டரால, 'பூஸ்ட்' குடிச்ச தெம்பு வந்துருக்காம்'' என்றாள்.''இப்பல்லாம், போட்டின்னாலே பணபலமும், செல்வாக்கும் உள்ளவங்களுக்குதான் வெற்றி வாய்ப்புன்னு ஆகிப்போச்சு... இல்ல'' என்று பொடி வைத்தாள் சித்ரா.''எதையோ சொல்ல வர்றே... சீக்கிரம் சொல்லு'' என்றாள் மித்ரா.''நம்ம அக்ரி யுனிவர்சிட்டியில பதிவாளர், டீன், இயக்குனர்னு, 27 முக்கிய பணியிடங்களை நிரப்பப் போறாங்க. யுனிவர்சிட்டியில நிறையப் பேரு போட்டி போடுறாங்க. செல்வாக்கு அதிகமுள்ளவங்களுக்குதான், சான்ஸ் கிடைக்கும்னு புரபசருங்க மத்தியில ஒரு 'டாக்' ஓடுது. இதனால, ஆள் தேர்வுல வெளிப்படைத்தன்மை இருக்குமான்னு, கேண்டிடேட்ஸ் பீல் பண்றாங்க'' என்றாள் சித்ரா.''ராங் ரூட்டுல ஆள் எடுக்கறதுக்கு, புது 'விசி' விட்ருவாரா என்ன'' என்று சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.''ரூட்டுன்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது... நம்மூர்ல இருந்து, போத்தனுார் - பொள்ளாச்சி வழியா, தென் மாவட்டங்களுக்கு ஏற்கனவே ஓடிட்டிருந்த ரயில்களை, மறுபடியும் இயக்கணும்னு பாசஞ்சர்ஸ்லாம், சேலம் கோட்டத்துக்கு லெட்டர் அனுப்பிட்டிருக்காங்க'' என்று ரயில் மேட்டருக்கு தாவினாள் சித்ரா.''ஆமா... நானும் கேள்விப்பட்டேன்...''''அதைதான் சொல்ல வர்றேன். பிரைவேட் பஸ்காரங்களுக்கு இதனால செம அடியாம். அதான் அந்த ரயில்களுக்கு நிரந்தரமா முட்டுக்கட்டை போட, சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிங்களை 'கவனிக்கற' முயற்சியில இறங்கியிருக்காங்களாம்'' என்றாள் சித்ரா.இதற்குள் ராலி, ரேஸ்கோர்சை ஒரு ரவுண்டு வந்திருந்தது. அனைவரும் கலைந்து செல்ல, சித்ராவும் மித்ராவும், ஷூ லேஸ்களை தளர்த்தியபடி, அங்கிருந்த சிமென்ட் பென்ஞ்சில் அமர்ந்தனர்.இடது பக்கமாக பார்த்த சித்ரா, சடாரென அங்கிருந்து எழுந்தாள். மித்ராவின் கையை பிடித்து இழுத்தபடி, அங்கிருந்து நகர்ந்தாள்.''ஏன்... என்னாச்சு'' என்றாள் மித்ரா.''அங்க ஒருத்தர் தண்ணிய போட்டுட்டு, அசிங்கமா மல்லாந்து கிடக்குறார்'' என்றாள் சித்ரா.''இப்பல்லாம் வீட்டுக்கு வீடு, சரக்கு சேல்ஸ் வந்துருச்சு. அதான், குடிச்சுட்டு இப்படி கிடக்குறாங்க. முக்கியமா வெள்ளலுார், குப்புச்சாமி தேவர் வீதியில, 24 மணி நேரமும் ஒரு வீடு, டாஸ்மாக் கடையாவே மாறிருச்சாம். லைன்ல நின்னு சரக்கு வாங்கிட்டுப் போறாங்களாம்''''இப்படி சிட்டில நிறைய இடங்க இருக்கு மித்து''''என்னை முடிக்க விடுக்கா... அந்த வீதியில குடிகாரங்க பண்ற அட்டகாசத்தால, லேடீஸ், குழந்தைங்க நடமாட முடியலையாம்... அதிகாரிங்க சப்போர்ட் இல்லாம, இப்படி ஓப்பனா சரக்கு விக்க முடியாதுன்னு, ஜனங்க பேசிக்கறாங்க'' என்றாள் மித்ரா.''எல்லாமே குண்டக்க மண்டக்க போயிட்டிருக்கு'' என்ற சித்ரா, ''நம்ம ஜி.எச்..,ல ஒரு சுவாரஸ்யமான மேட்டர்'' என்று சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினாள்.''இதுல சஸ்பென்ஸ் வேறயா...சொல்லுக்கா....டைம் ஆகுது'' என்றாள் மித்ரா.''போன வாரம் ஜி.எச்.,ல பார்க்கிங் ஏரியால, ஒருவர் டூவீலரை 'தள்ளிட்டு' போறத பிடிச்சாங்க. போலீஸ்காரங்க வந்ததும்தான், அவன் பழைய குற்றவாளின்னு தெரிஞ்சது''''ம்ம்...''''போலீசை பார்த்ததும் பயந்துருவான்னு நினைச்சா, அவன் சந்தோஷத்தோட, என்னை சீக்கிரம் ஸ்டேஷனுக்கு கூட்டீட்டு போங்கன்னு சொன்னானாம்''''என்னது... சந்தோஷப்பட்டானா?''''ஆமா... போலீஸ்காரங்களுக்கு ஒண்ணும் புரியலையாம். அப்புறமா ஸ்டேஷனுக்கு கூட்டீட்டு போய் விசாரிச்சதுல, அந்த திருடன் ரெண்டு வாரங்களுக்கு முன்னாலதான், ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகியிருக்கான்னு தெரிஞ்சது''''சரி...''''அவனுக்கு வேலை செய்ய மனசில்லாததால, மறுபடியும் ஜெயிலுக்கு போக பிளான் பண்ணி, வண்டி திருட டிரை பண்ணியிருக்கான். போலீஸ்காரங்க அவனை நல்லா 'கவனிச்சு', மறுபடியும் உள்ளே அனுப்பியிருக்காங்க'' என்று முடித்தாள்.அதைக் கேட்ட மித்ரா, வாய் விட்டு சிரித்தபடியே, ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X