பொது செய்தி

இந்தியா

பிறந்தது 2019: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

Updated : ஜன 01, 2019 | Added : ஜன 01, 2019 | கருத்துகள் (23)
Advertisement
பிறந்தது , 2019,  நாடு, முழுவதும், உற்சாக, கொண்டாட்டம்

புதுடில்லி: 2019-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் புத்தாண்டை ஆடி,பாடி வரவேற்று கொண்டாடினர்.

2019-புத்தாண்டு இன்று உலகில் முதன்முதலாக நியூசிலாந்தில் பிறந்தது. இந்தியாவில் புதுடில்லியில் இந்தியா கேட் பகுதியில் இப்போத பொதுமக்கள் குவிய துவங்கியுளளனர். கடும் குளிர் நிலவிய போதிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தியா கேட்டில் குவிந்துள்ளனர். இதற்காக இந்தியா கேட் மின் விளக்கில் ஜொலித்தது.

இதே போன்று மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் பொதுமக்கள் தங்கள் குவிந்துள்ளனர். மேலம் இசைக்கலைஞர்கள் பலர் ஆடிப்பாடி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்க காத்துள்ளனர்.மேலும் இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஏராளமான பொதுமக்கள் கூடி புத்தாண்டை கொண்டாடினர்.


சென்னை



புத்தாண்டையொட்டி சென்னை மெரினா கடற்கரை செல்லும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன. 2019 ஆம் ஆண்டை வரவேற்க சென்னை மெரினாவில் பொதுமக்கள் குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர்.மேலும் தமிழகத்தில் மதுரை , கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பெரு நகரங்களில் தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் புத்தாண்டை ஆடிப்பாடி கொண்டாடினர்.கோயில்கள், சர்ச்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


சத்தீஷ்கர்


சத்தீஷ்கர் மாநிலத்தில் ரிசரவ் போலீஸ் முகாமில் போலீசார் ஆடிப்பாடி புத்தாண்டை வரவேற்றனர்.


கோவா


கோவா மாநில தலைநகர் பானாஜியில் கடற்கரையில் ஒன்று கூடி பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்தியாவில் சிம்லா, பெங்களூர், ஆமாபாத் உள்ளிட்டநகரங்களிலும் புத்தாண்டை மக்கள் கொண்டாடி வரவேற்றனர்

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
01-ஜன-201915:57:46 IST Report Abuse
இந்தியன் kumar நல்லவர்கள் ஆட்சி மீண்டும் வரட்டும் இந்தாண்டில் தினமலருக்கு வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
01-ஜன-201915:55:57 IST Report Abuse
இந்தியன் kumar மார்கழி மாதம் முழுவதுவும் திருவெம்பாவை , திருப்பாவை பாடி இறைவன் அருள் பெறுவோம் .
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
01-ஜன-201915:55:00 IST Report Abuse
இந்தியன் kumar நல்லவர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X