ஆர்.டி.ஓ., இல்லாததால் ஆளாளுக்கு நாட்டாமை... அப்பட்டமா.. பணம் வசூலிச்ச அதிகாரியின் கொடுமை!

Added : ஜன 01, 2019
Share
Advertisement
புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க, சித்ரா, மித்ராவும், சிட்டியில் ரவுண்ட் சென்றனர்.அப்போது, கொடி நாள் வசூல்ல ஒரு 'லிமிட்' இருந்தா பரவாயில்லை,'' என்றாள் மித்ரா.''இஷ்டப்பட்டுத்தானே நிதி கொடுப்பாங்க...'' என்றாள்சித்ரா.''அந்த உண்டியல், அதிகாரிங்க டேபிளில் இருக்கும். என்ன விவரம்னு சொன்னா, மக்கள் பணம் போடுவாங்க. வடக்கு, தெற்கு தாலுகாவுல, ஓ.ஏ.பி.,
 ஆர்.டி.ஓ., இல்லாததால் ஆளாளுக்கு நாட்டாமை... அப்பட்டமா.. பணம் வசூலிச்ச அதிகாரியின் கொடுமை!

புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க, சித்ரா, மித்ராவும், சிட்டியில் ரவுண்ட் சென்றனர்.அப்போது, கொடி நாள் வசூல்ல ஒரு 'லிமிட்' இருந்தா பரவாயில்லை,'' என்றாள் மித்ரா.''இஷ்டப்பட்டுத்தானே நிதி கொடுப்பாங்க...'' என்றாள்சித்ரா.''அந்த உண்டியல், அதிகாரிங்க டேபிளில் இருக்கும். என்ன விவரம்னு சொன்னா, மக்கள் பணம் போடுவாங்க. வடக்கு, தெற்கு தாலுகாவுல, ஓ.ஏ.பி., கேட்டு வர்ற முதியோர்கள் கிட்டயும், உண்டியல்ல பணம் போடச்சொல்றாங்களாம்''''பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், கோர்ட் ஜாமீன் கேட்டு வர்றவங்க கிட்ட, கொடிநாள் நிதி வாங்கினா பரவாயில்லை. வயசானவங்கிட்ட பணம் கேட்கறாங்களே அதுதான் கொடுமையா இருக்கு,''''முன்னாடியெல்லாம், சர்டிபிகேட் சும்மா கிடைச்சுது. இப்ப, 60 ரூபா காசு கொடுத்துதான், வாங்கறோம். ஏதோ, கவர்மென்ட் பணத்தை வைச்சு வாழ்க்கையை ஓட்றோம். எங்ககிட்டயும் கண்டிஷன் போட்டு வாங்கறாங்க... இவங்கள என்னன்னு சொல்றது?ன்னு, பெரியவங்க புலம்பறாங்களாம்,'' என்று மித்ரா சொன்னதும், ''கோடி வருஷம் ஆனாலும், இதுபோன்ற ஆட்களை திருத்தவே முடியாது,'' என, சித்ரா ஆவேசப்பட்டாள்.''குறுநில மன்னர்கள் பத்தி தெரியுமா?'' என்று சித்ரா சொன்னதும், ''அக்கா.. புதிர் போடாதீங்க. விஷயத்தை சொல்லுங்க,''''கார்ப்ரேஷனில் உதவி கமிஷனர்களாக உள்ள நால்வரும், குறுநில மன்னர்களாக வலம் வருகின்றனர். 15 நாட்களுக்கு மேலாக குப்பை அள்ளாதது, தண்ணீர் வினியோகம் முறைப்படுத்தாததுனு, பல பிரச்னை இருந்தும், எந்த ஏரியாவுல இருந்து பிரச்னை வரும். போராட்டம் நடத்த மக்களை யார் அழைத்து வருவர்? என முழு 'அப்டேட்'டில், உள்ளனராம். இதுல, புதுசா வந்த கமிஷனர் ரொம்ப 'ஸ்டிரிக்ட்'ன்னு சொல்லி, நிறைய பக்கம், இந்த 23ம் புலிகேசிகள், நல்லாவே, 'கல்லா' கட்றாங்களாம்டி மித்து,'' என்றாள் சித்ரா.''அக்கா... இது பரவாயில்லை. அதிகாரி இல்லாததால், தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரங்களாகி விட்டனராம்.''''அது எங்கடி..?''''அக்கா.. வடக்கு ஆர்.டி.ஓ., ஆபீசில, ரெண்டு மாசமா ஆர்.டி.ஓ., இல்லாததால, டிரைவிங் ஸ்கூல்காரங்க ஆட்டம் ஜாஸ்தியாயிடுச்சாம். 'இன்ஸ்பெக்டர்களை எங்களுக்கு தெரியும்,'ன்னு சொல்லி, ஆபீசுக்குள்ளயே ஆளாளுக்கு நாட்டாமை பண்றாங்களாம். இந்த அட்டகாசத்துக்கு யார் 'புல்ஸ்டாப்' வைக்கிறாங்கன்னு தெரியலையே,'' என்றாள்மித்ரா.ரயில்வே மேம்பாலத்தில் வண்டி மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.அப்போது, ''மித்து, இதைக்கேளுடி. காங்கயம் பி.டி.ஓ., ஆபீஸ் மேட்டர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வரைக்கும் போயிருக்காம்,'' என்றாள் சித்ரா.''ம்... சொல்லுங்க...''''அங்கே, புதிய வீட்டுமனை 'லே-அவுட்' ஏராளமா வந்திருக்கு. தனி மனை வாங்கினவங்களும், 'டி.டி.சி.பி.,' அனுமதிக்கு விண்ணப்பிச்சு, காத்திருக்காங்க. ஆனா, யூனியன் ஆபீஸில், அஞ்சாயிரம் கப்பம் கட்டித்தான், 'அப்ரூவல்' வாங்க முடியுமாம்,''''2.75 சென்ட் உள்ள, ஒரு சைட்டுக்கு, அப்ரூவல் வாங்க, ஏழாயிரம் ரூபாதான் செலவாகுது. ஆனா, கமிஷன் மட்டும், அஞ்சாயிரம் கொடுக்க வேண்டியிருக்குனு பலரும் கம்ப்ளைன்ட் பண்றாங்களாம்,''''அப்ரூவல் வாங்காம, லோன் கெடைக்காதுன்னு மிரட்டியே, அங்க துணையா இருக்கற ஒருத்தர் பணத்த 'கறார்' வசூல் செஞ்சடறாராம். பி.டி.ஓ.,கிட்ட சொல்லியும் பிரயோஜனம் இல்லாம போனதால, சிலர் லஞ்ச ஒழிப்பு போலீசு காதுல போட்டுட்டாங்க. அந்த பிரச்னைதான், இப்ப 'ஹாட்' டாபிக்,'' சித்ரா கூறியதும், அவளது மொபைல்போன் 'மூர்த்தி காலிங்' என்று எழுத்து பளிச்சிட்டது.பதில் பேசிவிட்டு வைத்த சித்ரா, 'சரி... சரி... வா கிளம்பலாம்,'' என்று வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.அப்போது, அங்கிருந்த ஒரு போஸ்டரில், 'பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லையா? விசாகா கமிட்டியில் புகார் கூறுங்கள்,' என, வாசகம் தென்பட்டது. அதைப்படித்த மித்ரா, ''எங்க கண்டுக்கிறாங்க? இந்த கமிட்டியே ஒரு கண்துடைப்பு போல...'' என்றாள்.''ஏய்.. எதை சொல்கிறாய்?''''ஜி.எச்.,ல் நர்சிங் டிரெய்னிங் மாணவிக்கு, ஒருத்தர், பாலியல் தொந்தரவு கொடுத்திருக்காரு. பாதிக்கப்பட்ட மாணவி, விசாகா கமிட்டியில புகார் செஞ்சிருக்காங்க. புகார் வாங்கின கமிட்டி, இன்னும் விசாரணை நடத்திட்டே இருக்காம்,''''ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய விசாரணையை, அனுமார் வால் மாதிரி நீட்டிட்டே போறாங்களாம்.இப்படியே போனா, நீதி கிடைக்குமாங்கறது சந்தேகம்தான். மருத்துவமனை அதிகாரிங்க மவுனமா இருந்தாலும், கலெக்டர் தலையிட்டு, சமூகநலத்துறை மூலமாக, நியாயம் வழங்கனும்னு, நர்சிங் மாணவிங்க சொல்றாங்க்கா,'' என, ஆதங்கப்பட்டு கூறினாள் மித்ரா.''இல்லப்பா.. நீ வேணுமின்னா... பாரேன். கலெக்டர் கண்டிப்பா நடவடிக்கை எடுப்பார்,'' என்ற சித்ரா, வழியில் தென்பட்ட பழக்கடையில் வண்டியை நிறுத்தினாள்.அப்போது, அரசு பஸ் ஊழியர்கள், பேசியபடி சென்றனர். அவர்களை பார்த்த, மித்ரா, ''அக்கா... அரசு டிப்போவில், மூட்டை மூட்டையாக டிக்கெட் எரித்த கதை தெரியுமா?'' என்றாள்.''தெரியலையே... சொல்லு...''''கோவை கோட்டத்துக்கு உட்பட்ட பல கிளைகளிலிருந்தும், ஸ்டாக்கில் உள்ள டிக்கெட்டில், குறிப்பிட்ட தொகை கொண்டதை எல்லாம், ெஹச்.ஓ.,வுக்கு அனுப்புமாறு கடந்த வாரம் வாய்மொழி உத்தரவு போட்டாங்களாம்,''''அப்படி பல பிராஞ்சிலிருந்து அனுப்பிய டிக்கெட் பண்டல் பூராத்தையும், தீ வைச்சு எரிச்சுட்டாங்களாம்,'' மித்ரா சொன்னதும், ''ராத்திரியில் யாருக்கும் தெரியாமல் தீ வைக்கிறாங்கன்னா, ஏதோ வில்லங்கமாத்தான் இருக்கும். பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு,'' என்ற சித்ரா, பழம் வாங்கசென்றாள்.சில நிமிடங்களில் அழகான துணிப்பையில் பழங்களை வாங்கி வந்த சித்ராவை பார்த்த மித்ரா, ''அட.. பரவாயில்லீங்களே? பிளாஸ்டிக் கவருக்கு பதிலா, துணிப்பை தர ஆரம்பிச்சுட்டாங்களா? புத்தாண்டில் வரவேற்கத்தக்க புதுமாற்றம்... சூப்பர்க்கா,'' என்றாள்.வண்டியை கிளப்பி, அவிநாசி ரோட்டிலுள்ள பேக்கரிக்குள் இருவரும் சென்றனர். அங்கே விதவிதமான வடிவங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, புத்தாண்டு கேக் வகைகளை பார்த்தவாறே சித்ரா, ''எல்லாம் சூப்பரா இருக்குதல்லடி,'' என்றாள்.''கேக்.. சூப்பராதான் இருக்கு. ஆனா, டிரான்ஸ்பரை நினைச்சதான் புத்தாண்டை கொண்டாட முடியாது போலிருக்குன்னு 'பீல்' பண்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.''யாருக்குப்பா.. அந்த கவலை?''''சிட்டியில் பணியாற்றி வந்த இன்ஸ்., எஸ்.ஐ.,க்கள் சிலரை, தென் மண்டலத்துக்கு 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க. அதிர்ச்சியடைந்த, அவர்கள், எப்படியாவது, அதை 'கேன்ஸல்' செய்ய வைக்கணும்னு, அதற்கான வேலையில இறங்கி இருக்காங்களாம்,''''இதற்கு முன், 'டியூட்டி' பார்த்த இடத்திலிருந்து 'ரிலீவ்' பண்ணியும் கூட, இன்னும் போக மனசு வரலையாம். அதனால, சில வி.ஐ.பி., களை தொடர்ச்சியாக பார்த்தாங்களாம். ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட, மினிஸ்டரை பார்க்க, மூணு மணி நேரம் வெயிட் பண்ணாங்கன்னா பார்த்துகோங்க...''''ஸ்டேஷனுக்கு வர்ற மக்களுக்கு பிரச்னைன்னா காது கொடுத்து கேட்க மாட்டாங்க. தனக்குன்னு வந்தங்காட்டி, கால்கடுக்க நிற்கறாங்க பார்த்துக்கோ... இதுதான் 'டைமுன்னு' சொல்றது. சரி மினிஸ்டரை பார்த்தாங்களா... இல்லையா?'' என்றாள் சித்ரா.''ம்ஹூம்... இல்லக்கா. 'சவுத்' மூலமாக காய் நகர்த்துனாங்க... ஆனா, அவரும் கண்டுக்கலை,'' என்ற மித்ரா, ஒரு பெரிய கேக் ஆர்டர் கொடுத்து விட்டு, பில் கட்ட சென்றாள்.கூட்டமாக இருக்கவே, இருவரும் அருகிலிருந்த சேரில் உட்கார்ந்தனர். உடனே, சித்ரா, ''இதே மாதிரிதான், தாராபுரத்திலும் நடக்குது...'' என்றாள்.''அங்க.. என்னக்கா... பிரச்னை?''''தாராபுரம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில், இடப்பிரச்னை இருந்தது. ஒரு தரப்பினர், சப்-கலெக்டர்கிட்ட மனு கொடுத்தாங்களாம். அவரும், விசாரிச்சுட்டு, இடத்தை அளந்து, பிரச்னையை முடிக்க சொல்லி, ஆர்டர் போட்டாராம்.''''அதுக்கு, தேவைப்படும் போலீஸ் பாதுகாப்பையும் கொடுக்க சொன்னார். ஆனா, அங்கிருந்த அதிகாரி கண்டுக்கவே இல்லையாம். வேலையை முடிக்கோணும்னா, இவ்வளவு வேணுமின்னு, அதிகாரி 'கட் அண்ட் ரைட்'டா சொல்லிட்டாராம்,''''ஏக்கா.. இது எந்த ஊரு நியாயமுங்க?''''நாங்களே கஷ்டத்தில் இருக்கோம். இவ்ளோ கேக்கறது நியாயமில்லைன்னு சொல்லி, ஏதோ கொஞ்சம் கொடுத்தாங்களாம். 'இஷ்டமிருந்தா கொடுங்க,'ன்னு எரிஞ்சு விழுகிறாராம்,'' என்று சித்ரா விளக்கிய போது, பக்கத்திலிருந்த ஒருவர், ''வேலுமணி. என்ன இவ்ளோ 'லேட்' பண்றே. பணம் கொடுத்து எத்தனை நாளாச்சு. இப்படி இழுத்தடிக்கலாமா? இது நியாயமா?'' என்று மொபைல் போனில் சத்தம் போட்டார்.''பெரிய அதிகாரிங்க இப்படின்னா... அவங்களுக்கு கீழே வேலை பார்க்கவறங்க அதுக்கு மேல இருக்காங்க''''எங்கே மித்து?''''அனுப்பர்பாளையம் லிமிட்டில், மூணு வாரத்துக்கு முன்னாடி, விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதுவரைக்கும் யாரையும் அரெஸ்ட் பண்ணலை. அந்த கேேஸாட ஐ.ஓ., ஏதோகடமைக்கு விசாரிச்சுவர்றாராம்,''''அவருக்கு கீழ் உள்ள போலீசார், சந்தேகத்தின் பேரில், யாரையாவது விசாரிக்க அழைத்து வந்தாலும், உடனே அனுப்பிடறாராம். இவரின் மந்த விசாரணையால் தான், 'அக் யுஸ்டை' பிடிக்க முடியலைன்னு, சொல்றாங்க,'' சித்ரா சொன்னதும், ''சரி... வாங்கக்கா.. கிளம்பலாம்,'' என, மித்ரா எழுந்தாள்.இருவரும் வெளியேறி, வண்டியில் புறப்பட்டனர். சூரியன் விடைபெற்ற அந்திப்பொழுதில், பல வண்ணங்களில் வாணவேடிக்கை வெடித்தது. அதைப்பார்த்து உற்சாகமான, சித்ராவும், மித்ராவும், 'ேஹப்பி நியூ இயர்,'' என்று சந்தோஷத்தில் கூச்சலிட்டபடியே சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X