பதிவு செய்த நாள் :
தன்னிச்சையாக செயல்படும் எம்.பி.,க்கள்?
அ.தி.மு.க., மீது பா.ஜ., மேலிடம் சந்தேகம்

'முத்தலாக்' விவகாரத்தை மையமாக வைத்து, பார்லிமென்டில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால், அக்கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையிலான உறவில், திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.

A.D.M.K,ADMK,B.J.P,BJP,Bharatiya Janata Party,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,பா.ஜ.தன்னிச்சையாக,செயல்படும்,எம்.பி.க்கள்?, அ.தி.மு.க., பா.ஜ., மேலிடம்,சந்தேகம்


முஸ்லிம்களில், மூன்று முறை, 'தலாக்' கூறி, மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு எதிராக, லோக்சபாவில், சமீபத்தில், முத்தலாக் தடை மசோதா, தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது, முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமுல், எம்.பி.,க்கள், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினர்.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரும், ஆவேசமாக பேசக் கூடியவருமான, அகில இந்திய மஜ்லிஸ் - இ - இதெஹதுல் முஸ்லிமின் கட்சியின், ஒவைசி, மார்க்சிஸ்ட், எம்.பி., சலீம் பேச்சு, எல்லைக்குள் இருந்தது. ஆனால், அ.தி.மு.க., - எம்.பி.,யான, அன்வர் ராஜாவின் பேச்சு, பா.ஜ., வை மட்டுமல்லாது, அனைத்து தரப்பையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது.

'பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தான், மூன்று மாநிலங்களிலும், பா.ஜ.,வை தோற்கடித்து இருப்பதாக கூறி, கெடுவான் கேடு நினைப்பான்' என, சாபமிட்டார்.

சபைக்குள் இதை கவனித்த, அ.தி.மு.க.,வின் பிற, எம்.பி.,க்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், கடும் அதிருப்தியடைந்த, பா.ஜ., தரப்பு, அ.தி.மு.க., பார்லிமென்ட் தலைமையை தொடர்பு கொண்டு, 'என்ன நடக்கிறது?' என, கேட்கவே, விஷயம் சென்னைக்கு சென்றது. அதன்பின் தான், நிலைமையின் தீவிரம், உணரப்பட்டது. இதையடுத்து, 'அன்வர் ராஜா பேசியது, அவரது சொந்தக் கருத்து; கட்சியின் கருத்தல்ல' என கூறி, சமாதான முயற்சிகள் துவங்கின.

'சுயேச்சை, எம்.பி., தான் சொந்தக் கருத்தை பேச முடியுமே தவிர, அன்வர் ராஜாவின் பேச்சை, அ.தி.மு.க., கருத்தாக தானே கருத முடியும்' என, பா.ஜ., பதில் அளித்துள்ளது. இந்த, 'பஞ்சாயத்து' முடிவதற்குள், ராஜ்யசபாவில், அ.தி.மு.க., மற்றொரு குண்டை வீசியது. அங்கு, முத்தலாக் விவகாரத்தில், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, பா.ஜ.,வை வெறுப்பேற்றும் நடவடிக்கைகளை, அ.தி.மு.க., துவங்கியது.

'மசோதாவை, தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த தீர்மான நோட்டீசில், முதல் ஆளாக, ராஜ்யசபா, அ.தி.மு.க., தலைவர், நவநீத கிருஷ்ணனும் கையெழுத்துப் போட்டுஇருந்தார். இதைப் பார்த்த, பா.ஜ., தலைவர்கள், மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

விவாதத்தின் போது மசோதாவை எதிர்த்துப் பேசி, கடைசியில் வெளிநடப்பு செய்வது தானே, அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் வழக்கம். அதை விட்டு, எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தில் கையெழுத்திட வேண்டிய அவசியம் என்ன என, பலருக்கும் குழப்பம்.

அப்படியெனில், 'பார்லிமென்டில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் தன்னிச்சையாக செயல்படுகின்றனரா அல்லது கட்சித் தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுகின்றனரா...' என்ற கேள்வியும், பா.ஜ., தரப்பில் எழுப்பப்பட்டது.

மேலும், 'தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களுக்காக, தங்கள், எம்.பி.,க்களை வைத்து, பார்லிமென்டில் உரசிப் பார்த்து, ஆழம் பார்க்கிறதா, அ.தி.மு.க., தலைமை' என்ற சந்தேகமும், பா.ஜ.,வுக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையிலான உறவில், விரிசல் ஏற்பட்டுள்ளதாக, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஜன-201919:12:38 IST Report Abuse

Pugazh Vஇங்கே பாஜகவினர், போகவர இஸ்லாமியர்களை அவமரியாதை யாக அநாகரிகமாக அரபிஅடிமை பச்சை குல்லா, மூர்க்கன் என்றெல்லாம் எழுதிவிட்டு திடீரென்று இஸ்லாமிய மகளிர் மீது என்ன அக்கறை? பாசம்? எல்லாம் வேஷம். போலிகளின் கூடாரம் தான் பாஜக என்று நிரூபணமாகிறது.

Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
02-ஜன-201918:31:48 IST Report Abuse

கல்யாணராமன் சு.என்னை கேட்டால், பாஜக எந்த ஊழல் கழகங்களுடனும் கூட்டணி வைக்காமல், ஊழல் செய்யாத கட்சிகளுடனோ, அல்லது தனி நபர்களுடனோ சேர்ந்து தேர்தலை சந்திப்பது அவர்களுக்கு நல்லது எனத் தோன்றுகிறது............ தமிழ்நாட்டில் இப்போது இல்லையென்றாலும், அடுத்த முறை வருவதற்கு வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள வேண்டுமே தவிர, ஊழல், திருட்டு கட்சிகளுடன் சேர்ந்து கிடைக்கவேண்டிய நல்ல பேரை கெடுத்துக்கொள்ளகூடாது.............. திருடர்களை அடித்துக்கொள்ளவிட்டு. ஒழிக்கும் யுக்தியைத்தான் இப்போது பயன்படுத்த வேண்டும்........... இப்போதுள்ள எந்த திருட்டு கட்சி வேட்பாளர்களுக்கும் தாம் இந்த முறை ஜெயிப்போம் என்றோ............ இல்லை தப்பி தவறி ஜெயித்துவிட்டால் மீண்டும் தேர்தல் வந்தால் ஜெயிப்போம் என்றோ நம்பிக்கை இருக்காது........எனவே மத்திய அரசை கவிழ்க்க மாட்டார்கள்...............

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
02-ஜன-201916:33:40 IST Report Abuse

Jaya Ramஏன் பாரதீய ஜனதா கட்சியின் வேறொரு மானில பொறுப்பாளராக இருக்கும் ஒருவர் இங்க வந்து தகாத வகைகளில் விமர்சனம் வைக்குபோதுமட்டும் அது தனிப்பட்ட கருத்தாகிவிடும், அதிமுக உறுப்பினர் பேசினால் மட்டும் மாற்றுக்கருத்து கூறினால் மட்டும் அதிமுக கருத்தாகிவிடுமா, விரிசல் ஏற்பட்டால் ஏற்படட்டுமே இப்போ நட்டம் அதிமுகவிற்கு கிடையாது

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X