லோக்சபா தேர்தலில் பிரகாஷ்ராஜ் போட்டி

Updated : ஜன 02, 2019 | Added : ஜன 02, 2019 | கருத்துகள் (33)
Advertisement
பிரகாஷ்ராஜ், லோக்சபா தேர்தல்,

பெங்களூரு: லோக்சபா தேர்தலில், சுயேச்சையாக போட்டியிடப் போவதாக, நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும், பா.ஜ., அரசை கடுமையாக விமர்சித்து வரும், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட, சில கட்சிகள் ஏற்கனவே வலைவிரித்தன. ஆனால், அரசியலில் ஆர்வம் இல்லை எனக்கூறி ஒதுங்கிய அவர், பா.ஜ.,வை விமர்சிப்பதில் இருந்து பின்வாங்கவில்லை. எனவே, ரஜினி, கமலை போல, அவரும் தனிக்கட்சி தொடங்குவார் என, பேசப்பட்டது.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு, டுவிட்டரில் வாழ்த்து கூறிய, பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளதாவது:அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய துவக்கம் ஆரம்பமாகி விட்டது; அதிக பொறுப்புகள் வந்துள்ளன. அனைவரின் ஆதரவுடன், லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட உள்ளேன். எந்தத் தொகுதி என்பதை, விரைவில் தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balasubramanian - coimbatore,இந்தியா
02-ஜன-201914:39:51 IST Report Abuse
balasubramanian நல்ல நடிகர்.அதுவும் ஒரே ஸ்டைலில் நடிப்பதில் வல்லவர்.ஆனால் இவர் இந்தியாவில் இருக்க வேண்டியவர் இல்லை .அரசியலுக்கு வருவதைவிட தேவாலயங்களில் தொண்டு செய்யச்செல்வது நல்லது.செல்லம் ,டெபாசிட் பத்திரம்.
Rate this:
Share this comment
Cancel
R S GOPHALA - Chennai,இந்தியா
02-ஜன-201914:24:22 IST Report Abuse
R S GOPHALA . ஒரு வாட்டி தேர்தல்ல நின்னு ஓத வாங்கினா சரியாய்டுவான். நாலு ஒட்டு கூட விழாது இவனுங்களுக்கெல்லாம்...
Rate this:
Share this comment
Cancel
metturaan - TEMA ,கானா
02-ஜன-201914:14:27 IST Report Abuse
metturaan ஓட்டுப்போட தகுதியானவங்க எல்லோருமே அரசியலுக்கு வரலாம் ..யாராரோ வராங்க நீங்களும் தான் வாங்களேன் . உங்களுக்கு பிரபல்யமும் இருக்கு தாராளமா வாங்க .. வாய்ப்பு கிடைச்சா....., எதிர்ப்பு அரசியல் , கூப்பாடுனு ..பொழுதை வீணடிக்காம மக்களுக்கு என்ன செய்யலாம்னு எதிர்பார்ப்போட வாங்க.... வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X