பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம்: எது நியாயம்?

Added : ஜன 02, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை: எந்த போராட்டமும் நடத்தாமல், தங்கள் சம்பளத்தை, ஒரே நாளில் இரு மடங்காக, 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்திக் கொண்டனர், எம்.எல்.ஏ.,க்கள்; அதை, 7.5 கோடி மக்களும் வேடிக்கை தானே பார்த்தனர்!'அரசு அலுவலகங்களில், 30 ஆண்டுகள் பணிபுரிந்தோர் ஓய்வூதியம் கேட்கக் கூடாது' என, வாசகர் கூறியுள்ளார். ஐந்தே ஆண்டுகள் அதிகாரம் மிகுந்த பதவிகளை அனுபவித்து, வருவாய்க்கு மீறி, சொத்து சேர்த்தோருக்கு
அரசு பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஓய்வூதியம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம், 
Government school teachers, teachers pensions, government employees, teachers salary,

சென்னை: எந்த போராட்டமும் நடத்தாமல், தங்கள் சம்பளத்தை, ஒரே நாளில் இரு மடங்காக, 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்திக் கொண்டனர், எம்.எல்.ஏ.,க்கள்; அதை, 7.5 கோடி மக்களும் வேடிக்கை தானே பார்த்தனர்!'அரசு அலுவலகங்களில், 30 ஆண்டுகள் பணிபுரிந்தோர் ஓய்வூதியம் கேட்கக் கூடாது' என, வாசகர் கூறியுள்ளார். ஐந்தே ஆண்டுகள் அதிகாரம் மிகுந்த பதவிகளை அனுபவித்து, வருவாய்க்கு மீறி, சொத்து சேர்த்தோருக்கு ஓய்வூதியம் உண்டாம்; 30 ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கு இல்லை என்றால், என்ன நியாயம்...'

அ.தி.மு.க., ஆட்சியில், கல்வித்தரத்தில், தமிழகம் மிகவும் பின்தங்கி உள்ளது' என்றும், கூறியுள்ளார். அப்படி என்றால், கோளாறு, அரசிடமா, ஆசிரியர்களிடமா... என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.அதிக நேரம் உழைக்கும், தனியார் பள்ளி ஆசிரியர்கள், வெறும், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகின்றனராம்; அது குரலற்றோரின் உழைப்பை சுரண்டும் கொடுமைப் போக்கு என்று தான் கூற வேண்டும். உரிமைகள் மறுக்கப்படும்போதும், ஒடுக்கப்படும்போதும், அரசு ஊழியர்கள் போராடுகின்றனர். அரசு துறைகளில் லஞ்சம் வாங்காத ஒரே பகுதியினர், ஆசிரியர்கள் தான். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை இழிவுபடுத்துவதை, இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கிரானைட், மணல், சிலை கடத்தலை, அரசு வேடிக்கை பார்க்கவில்லையா... என்று தான், அவரிடம் திருப்பி கேள்வி கேட்க வேண்டியுள்ளது. 'போராடுகின்றனர்' என்ற ஒரே காரணத்துக்காக, அதை அடக்க நினைக்காமல், நியாயமான கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றித் தர வேண்டும். அரசு ஊழியர்கள், சங்கங்களுடன் பேச்சு நடத்தி, சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றில், நியாயமான தீர்வை வழங்க வேண்டியது, அரசின் பொறுப்பு!

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-ஜன-201916:43:38 IST Report Abuse
Bhaskaran அரசுஆசிரியர்கள் கணவன் மனைவியாக இருந்தால் கிராமப்புறப்பள்ளிகளில் வட்டிக்கு விடும் l தொழில் மிகச்சிறப்பாக செய்கின்றனர் இவர்களுக்கு ஓய்வூதியம் புதியமுறைப்படி தந்தால் போதும்
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
02-ஜன-201916:22:05 IST Report Abuse
S.P. Barucha வரிக்கு வரி நியாயமான கேள்விகள் , பதில் சொல்ல முடியாத அளவிற்க்கு .
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
02-ஜன-201916:18:41 IST Report Abuse
S.P. Barucha வாத்தியார்கள் கேள்விகளுக்கு அரசு பதில் சொல்லுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X