பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் நுழைந்த பெண்கள்: பரிகார பூஜைக்குப் பின் நடை திறப்பு

Updated : ஜன 02, 2019 | Added : ஜன 02, 2019 | கருத்துகள் (133)
Advertisement
Sabarimala, Bindu, Kanakadurga, சபரிமலை, பெண்கள் சாமி தரிசனம், பிந்து , கனகதுர்கா ,சபரிமலை சன்னிதானம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு,   சபரிமலை தீர்ப்பு, சபரிமலை ஐயப்பன் கோவில்,  சபரிமலை பெண்கள் அனுமதி , 
 Womens Sami Darshan,  Sabarimalai Santhanaman, Supreme Court verdict, Sabarimala judgment, Sabarimalai Ayyappan temple,
Sabarimala women allowed,

சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் 40 வயது உடைய, பிந்து மற்றும் கனகதுர்கா என்ற 2 பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடை சாற்றப்பட்டு, பரிகார பூஜைக்கு பின்னர் திறக்கப்பட்டது.


சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, சபரிமலைக்கு செல்ல,அனைத்து வயது பெண்களும் முயன்றனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுவதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சபரிமலை செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு பெண்கள், இன்று (ஜன.,2) அதிகாலை 3.45 மணியளவில் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் கேரளாவை சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா எனவும், இரண்டு பேருக்கும் வயது 40 ஆவதும் தெரியவந்துள்ளது. இரண்டு பேரும் எந்தவித முன்னறிவிப்பின்றி, சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். இவர்கள், தேவஸ்தான ஊழியர்கள் சென்று வரும் வழியாக அழைத்துச் செல்லப்ட்டனர். 18 படி வழியாக ஏறவில்லை. பாதுகாப்புக்கு வந்த போலீசார் சிலர் சீருடையிலும், சாதாரண உடையிலும் உடன் சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.


பாதுகாப்பு


இதனையடுத்து மலப்புரத்தில் உள்ள பிந்துவின் வீட்டிற்கும், கோழிக்கோட்டில் உள்ள கனகதுர்கா வீட்டிற்கும் போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். இதற்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.


நடை அடைப்பு



பெண்கள் தரிசனம் செய்ததை தொடர்ந்து, கோயிலின் தலைமை தந்திரி ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து, சபரிமலை சன்னிதானத்தின் நடை திடீரென அடைக்கப்பட்டுள்ளது. பரிகார பூஜைக்கு பின்னர் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (133)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
03-ஜன-201915:10:01 IST Report Abuse
Gnanam இவர்களை பெண்கள் என்று எப்படி சொல்வது? மிகவும் கீழ்த்தரமான சாதனை படைத்துவிட்டார்கள். திருட்டுத்தனமாக சென்று சாமி கும்பிடுவது சாதனையல்ல, சாமிக்கு ஏற்றதுமல்ல. ஸ்ரீ ஐயப்பனை மனதில் நினைத்து தியானித்து மகிழ்ந்தாலே நேரில் தரிசித்த நிறைவு கிடைக்கும். இனியும் பினராய் விஜயனின் மூர்கத்தனத்திற்கு பெண்கள் செவிசாய்க்காமல் இருப்பது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஜன-201919:42:23 IST Report Abuse
Pugazh V "கனகதுர்கா மற்றும் பிந்து இன்னும் 48 நாட்களில் ஐயப்பன் தண்டனை உறுதி."/ எதுக்கு வர அனுமதித்துவிட்டு, வந்து போனபிறகு 48 நாள் கழித்து தண்டிக்கணும். வர முயன்ற போதே ஐயப்பன், தடுத்திருக்க வேண்டியது தானே?
Rate this:
Share this comment
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
02-ஜன-201920:16:43 IST Report Abuse
Dr.T.SenthilsigamaniPugazh V - Coimbatore / Cochin,இந்தியா.மிக சரியான கேள்வியை கேட்டு விட்டீர்கள் .ஆனால் நீங்கள் ஹிந்து மனு தர்மம் பற்றிய புரிதல்கள் இல்லாததால் தான் இத்தகைய கேள்வியை முன்வைத்துள்ளீர்கள் .மஹாபாரதத்தில் கம்சனை கொல்ல ஸ்ரீகிருஷ்ணர் எட்டாவது பிள்ளையாக ஆம் எட்டாவது பிள்ளையாக தான் அவதரிக்க வேண்டியிருந்தது .ராமாயணத்திலும் ஸ்ரீராமர் பதினான்கு வருடங்கள் முடிய போகும் நிலையில் தான் ராவணனை வதம் செய்தார் .நரசிம்ம அவதாரம் எடுத்து ரணியகசிபை கொல்ல பிரகலாதன் வளரும் வரை விஷ்ணு பகவான் பொறுமை காக்க வேண்டியிருந்தது .சூரபன்மனை கொல்ல முருகன் அவதாரம் எடுத்தது கூட தேவர்கள் பல ஆண்டுகள் சிறையில் தவித்தபின்பு தான் .காரணம் நாம் தீயவர்கள் என உருவகம் செய்பவர்கள் அது கம்சன் ,ராவணன் அல்லது ரணியகசிபு ஆகட்டும் அவர்களின் கர்ம பலன் /அவர்கள் முற்ப்பிறவியில் செய்த புண்ணியங்கள் .அதுபோக தேவர்கள் செய்த பாவங்கள் அதற்க்கேற்பத்தான் இறைவன் தண்டனையளிப்பார் .அப்படி பார்த்தால் பிள்ளையார் சிலைகளை உடைத்த ,அயோத்தி ராமர் கொடும்பாவி எரித்த மற்றும் ,ஸ்ரீராமர் படித்தவனா ? என்று கேட்ட திக திராவிட தலைவர்களை கடவுள் ஏன் இன்னும் தண்டிக்கவில்லை என்று நீங்கள் கேட்ப்பீர்கள் .இதற்க்கு பதிலாக என் உறவினர் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வை தருகிறேன் .இதை போன்று தமிழகத்தில் பிரபலமான ஒவ்வொரு திராவிட தலைவர்குடும்பங்களிலும் இறைவன் தண்டனை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறான் .அரசன் அன்று கொல்வான்.தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி .அது குறித்த பதிவு என் உறவினர் -தெய்வங்களை இகழ்ந்தவரின் குடும்பம் அனுபவிக்கும் தண்டனைகளை இதோ தருகிறேன் .என் நெருங்கிய உறவினர் ( அவர் பெயர் அன்பு செல்வ மூர்த்தி - பெயர் மாற்றப்பட்டுள்ளது ) தற்போது 89 அகவை .திராவிட கருணாநிதியின் கடவுள் மறுப்பு கொள்கையில் மிகவும் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்து , என் சொந்த ஊரில் பல ஹிந்து விரோத செயல்களை செய்து வந்தார். அந்த காலத்தில் 1971 ம் ஆண்டு நடந்த திக திராவிட சேலம் மாநாட்டில் ஹிந்து கடவுள் ராமரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது .மேலும் ஸ்ரீராமர் படங்களுக்கு திகவினர் செருப்பு மாலைகள் போட்டு ,சாக்கடை நீரால் அபிஷேகம் செய்து ,பின்பு ,துடைப்பத்தால் அடித்து அதனை தீயிட்டு கொளுத்தி மகிழ்ந்தனர். அதில் என் உறவினர் கலந்து கொண்டு ,அவரும் அவர் பங்கிற்கு ராமர் கொடும்பாவி எரித்ததை பெருமையுடன் சொல்லி சொல்லி மகிழ்ந்தார். மேலும் திக கும்பல்கள் பிள்ளையார் சிலை உடைப்பு நடத்தியபோது எங்களூரில் நிறைய பிள்ளையார் சிலைகளை உடைத்த பெருமை அவருக்கு உண்டு.ஆனாலும் இறைவன் கணக்கை அவர் அறிந்திருக்க வில்லை .கால சக்கரம் சுழன்றது .தற்போது அவர் முதுமை அடைந்து தன் நிலையை தானுணராத நிலையில் பேசக்கூடட முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்.கட்டிலை விட்டு இறங்கமுடியவில்லை .அவரின் மூத்த மகன் நாடகத்தில் நடித்தவர். பார்ப்பதற்கு புரட்சி தலைவர் எம்ஜியார் போலவே இருப்பார் . எம்ஜியார் சினிமாவில் நடித்ததை நாடகத்தில் அவர் போன்றவாறு நடிக்க முயற்சித்தார் .ஆயினும் இளமையிலே குடிக்கு அடிமையாகி சுயத்தை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டன .அவரது மூத்தமகனின் இருப்புத்தன்மையை ஊரார் மனதில் காணமுடியவில்லை .ஆம் வைரம் என ,மாணிக்கம் என ,முத்துஎன ஆம் முத்து என ஜொலிக்க வேண்டியவர் தடம் மாறினார் .மற்றொரு மகன் படிப்பு ஏறாமல் கூலி படை தலைவனாக ,உள்ளூர் ரௌடியாக அவதாரம் எடுத்தது தான் மிச்சம். அவன் அடியாட்கள் ஒருவருடன் ஒருவர் மோதி கொண்டு வெட்டி கொண்டு சாகும் சம்பவங்கள் - கொலைகள் - தமிழ் வளர்த்த - கோவிலுக்கு புகழ் பெற்ற ஊரில் -பாண்டியன் தலைநகரில் வசிப்போரை அடிக்கடி அச்சுறுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக அடுத்த மகன் மேல் பெண்களிடம் அடிக்கடி வம்பு செய்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டதால் தற்போது ஊர் பக்கமே வருவதில்லை .தலைநகர் வாசம் தான்.தீவிர அரசியலில் உள்ளதாக கேள்விப்பட்டேன் . ஆனாலும் தமிழக அரசியலில் ராசியில்லாதவராக முத்திரை குத்தப்பட்டவர் என ஊரார் சொன்னார்கள். கடைசியாக அவரின் ஒரே மகள் கூட சீட்டு கம்பெனி நடத்தி பல லட்ச ரூபாய்கள் மோசடி செய்த வழக்கில் ஜெயிலில் ஒரு வருடம் இருந்து விட்டு ,இப்போது தான் விடுதலையாகி உள்ளார் .தமிழில் பல கவிதைகளை எழுதியுள்ளார் .என்ன பிரயோசனம் கணவனை விவாகரத்து பண்ணிவிட்டார் .அந்த திராவிட தொண்டர் அவரது வாரிசுகளுக்கு சீர்திருத்த திருமணங்களாக ராகு காலத்தில் நடத்திவைத்தார் .ஆயினும் அவரின் குடும்ப ஏழ்மை மேன்மை பெற்றது தான் மிச்சம் .மிகவும் பரிதாபமான வாழ்க்கை இது .யாருக்கும் இப்படிப்பட்ட வாழ்வு அமையக்கூடாது .இந்த நிகழ்வை பார்க்கும் பொழுதில் அனைவருக்கும் புரிந்திருக்கும். கடவுளின் பாப/சாப நஷ்ட கணக்குகளை யாராலும் புரிந்து கொள்ள முடியவே முடியாது .மனிதனின் மெய் ஞான அறிவினாலும் ,தர்க்க சாஸ்திரங்களாலும் ,நுண்ணறிவு பயிற்சியாலும் கூட புரிந்து கொள்ள முடியாத வாழ்வின் புதிர் முடிச்சுக்கள் போடுபவர் கடவுள் .ஆத்திகனானாலும்,நாத்திகனானாலும் கடவுளின் கருணை பார்வை ஓன்று தான் . நூலாய்ந்து, ,சொல்லாய்ந்து ,அறமாய்ந்து,நெறியாய்ந்து ,மரபாய்ந்து பொற்கால ஆட்சி செய்தவர்களுக்கும் சரி ,குல மூத்தோர் ,நீத்தோர் ,வான் ஏகியோர் ,விண்ணுறை தெய்வங்கள் சாட்சியாக ஆட்சி பரிபாலனம் செய்த மன்னர்களுக்கும் சரி - ஸ்ரீராமனின் தந்தை தசரதன் ஆகட்டும் -கடவுளின் தீர்ப்பு மாறாதது .கடேசியாக வாழ்ந்து முடிந்த உலக கொடுங்கோலர்கள் ஹிட்லர் முதலியோர் எப்படி செத்தார்கள் என்று வரலாறு படித்தாலே போதும் கடவுள் யார்பக்கம் என்பது. இது தமிழகத்தை ஆண்ட அனைத்து முதலமைச்சர்களுக்கும் மிக சரியாக பொருந்தும் .ஆதலால் கனகதுர்கா மற்றும் பிந்து இன்னும் 48 நாட்களில் ஐயப்பன் தண்டனை உறுதி."/ எதுக்கு வர அனுமதித்துவிட்டு, வந்து போனபிறகு 48 நாள் கழித்து தண்டிக்கணும். வர முயன்ற போதே ஐயப்பன், தடுத்திருக்க வேண்டியது தானே? என ஹிந்து விரோத கருத்துக்களை இனியும் பேச வேண்டாம் .இது தான் எனது வேண்டுகோள்...
Rate this:
Share this comment
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜன-201904:59:55 IST Report Abuse
இந்தியன்... விவசாயி மகன்உறவினரின் குருவுக்கு நடந்ததை சொல்ல மறந்துவிட்டிர்கள் தள்ளாத வயதில் மூத்திர சட்டி சுமந்ததை, செத்த பின் இன்றும் செருப்பு மாலை மரியாதை கிடைக்க பெறுவதை,...
Rate this:
Share this comment
KSK - Coimbatore,இந்தியா
06-ஜன-201915:39:25 IST Report Abuse
KSKவிவசாயி அவர்களே, "பரமார்த்த குரு" இன்னும் ஊரில் உலவி கொண்டு அவ்வப்போது பினாத்துவதும்ப்மாக தான் இருக்கிறார்...
Rate this:
Share this comment
Cancel
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
02-ஜன-201919:25:40 IST Report Abuse
Dr.T.Senthilsigamani இன்று சபரிமலை விஷயத்தில் கம்யூனிஸ்ட்கள் செயலை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் கூர்முனை வாதங்கள் யாவும் இருவகையானவை .ஓன்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது .ஆதலால் மறுபேச்சுக்கே இடமில்லை .பேரரசரின் படைசேர் ஆணையை ஏற்கும் சிறுபடைவீரனாய் ,கல்வியறிவித்த புலமை மிகு குருவின் ஆணையை ஏற்கும் கீழ்ப்படிதல் சீடனாய்,கற்புக்கரசி மாதர் வகுத்த தொன்மை நெறிகளை ஆணையென நிகர் செய்து பின்பற்றும் குலமாதராய் உச்சநீதிமன்றம் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை அதன் வழிகாட்டுதலில் கேரளா கம்யூனிஸ்ட் மதசார்பற்ற அரசு ஆம் மதசார்பற்ற அரசு அதனை அமுல்படுத்துவதில் என்ன தவறு ? அமுல்படுத்தாவிட்டால் அரசியல் சட்ட சிக்கல்கள் நேரும் என வாதிடுவார்கள் .அவைகள் யாவும் பொருளின்மை வாதங்கள் ..பிறழ்முரண் வாதங்கள் .அறியாமையின் முடிவிலி உச்சம் காண விழையும் நோக்கு கொண்டவை .பயனற்றவை .முதலில் இதே போன்று உத்திர பிரதேசத்தில் இந்த வருடம் ஒரு சிறுபான்மை வழிபாடு தலத்தில் - நெடுங்காலமாக பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட அந்த வழிபாட்டு தலத்தில் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமுல்படுத்த முதலவர் ஆதித்யநாத் யோகி இதே போன்ற கெடுபிடிகளை செய்வாரானால் இந்நேரம் மதச்சார்பின்மைக்கு ஆபத்து ,மதநல்லிணக்கத்திற்கு கேடு ,மதநேசத்திற்கு பூட்டு ஆரிய வாதம் ,காவி மதவாதம் என போலிமதச்சார்பின்மை வாதிகளால் ஒற்றைக்குரலில் கண்டங்கள் எழுந்திருக்கும் .பல இடது /வலது சாரி எழுத்தாளர்கள் தங்களின் பதக்கங்களையும் விருதுகளையும் திருப்பி அளித்திருப்பார்கள் .முதல்வர் யோகி பதவி விலகவேண்டும் என விண்ணதிர முழக்கங்கள் எழுந்திருக்கும் .ஆனால் சபரிமலை விஷயத்தில் ஹிந்துவிரோத செயல்களை நிகழ்த்துவது போலிமதச்சார்பின்மை கம்யூனிஸ்ட்கள் என்பதால் அனைவருமே அடக்கி வாசிக்கிறார்கள் .முதலில் சபரிமலை விஷயத்தில் தலையிட்ட உச்சநீதிமன்றம் மத கோட்ப்பாடுகளில் தான் அளித்த வரலாற்று தீர்ப்புகளை கூட கருத்தில் கொள்ளவில்லை என்பது தான் ஹிந்துக்கள் வருத்தமளிக்கும் செய்தி .தினமலர் வாசகர்களுக்காக அந்த உண்மைகள் . 1970ம் வருடம் ஆரிய எதிர்ப்பு திராவிட கருணாநிதி வழிகாட்டுதலில் l திமுக அரசு, கோவில்களில் நடைமுறையில் இருந்த பரம்பரை அர்ச்சகர் உரிமையை ரத்து செய்யும் சட்டத் திருத்தம் கொண்டுவந்து அமுல் செய்தது .சட்டத் திருத்தத்தை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாஸன அமர்வு (Constitutional Bench) “ஆகம விதிகள் மத நம்பிக்கையின்பாற்பட்டவை. ஆகவே, அர்ச்சகர் நியமனம் கோவில் கட்டப்படுவது முதல் விக்ரகங்கள் பிரதிஷ்டை, பூஜைகள், வழிபாட்டு முறைகள் வரை அனைத்தையும் வரையறை செய்யும் ஆகம சாஸ்திரங்கள் சொல்லிய படிதான் அர்ச்சகர்களையும் நியமனம் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்தது. அதாவது பல நூறாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் பாரம்பரியத்தை மாற்ற முனைவது, குறிப்பிட்ட மதக்குழுவின் மதச் சுதந்திரத்திலும் உரிமையிலும் தலையிடுவதாகும் என்பதோடு மட்டுமல்லாமல் அரசியல் சாஸன க்ஷரத்துக்களை (25, 26) மீறுவதாகும் என்றும் தீர்ப்பளித்தது. மேலும் அதே திராவிட கருணாநிதி ஆட்சியில் 2006-2011 ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழக அரசு “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்கிற அவசரச்சட்டம் ) கொண்டுவந்தது. அதனையும் எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் ,தென்னிந்திய பர்பாலன சபை, மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் சிவாச்சாரியார்களும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் "அரசியல் அமைப்புச் சட்டத்தின், 25, 26வது க்ஷரத்துக்கள், மத நம்பிக்கை மற்றும் மதச் சடங்குகளை கடைபிடிப்பதற்கான சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதி செய்கின்றன. மேலும், 16 வது க்ஷரத்தின் 5 வது பிரிவு, ஒரு மத நிலையத்தில் ஏற்கனவே உள்ள மத விஷயமான அல்லது மதப்பிரிவின் வழிபாடு தொடர்பான அலுவல்கள் பதவிகள், குறிப்பிட்ட மதத்தினர்தாம் இருக்கவேண்டும் என்பதோ, அல்லது, குறிப்பிட்ட தனிப்பிரிவினர்தாம் இருக்க வேண்டும் என்பதோ, அரசின் கீழ் உள்ள வேலைவாய்ப்புகளில் பாகுபாடு இன்மை என்கிற கோட்பாட்டின் கீழ் வராது என்று சொல்கிறது. அதாவது ஆகம விதிகளின்படி வழிபாடுகள் நடக்கும் இடங்களில், அந்த ஆகமங்களில் சொன்னபடி, அர்ச்சகர்களை நியமிக்கும் உரிமையை உறுதிப்படுத்துகின்றது. இது, அரசியல் சாஸனத்தின் 14வது க்ஷரத்தை மீறுவதாகவும் ஆகாது என தீர்ப்பளித்தது .சுதந்திர இந்தியாவில் 1954-ல் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஷிரூர் மடம் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான வழக்கில் (Commissioner, HR & CE Madras Vs. Sri Lakshimindra Thirtha Swamiar of Shri Shirur Mutt - SPA 1954) இந்திய உச்ச நீதிமன்றம், “அரசியல் சாசனத்தின் 26வது க்ஷரத்தின்படி மதவழிபாட்டு தலங்களான கோவில் அல்லது மடத்தின் வழிபாட்டு முறைகளையும் மற்ற சம்பிரதாயங்களையும் /சடங்குகளையும் தீர்மானிக்கும் முழு உரிமை சம்பந்தப்பட்ட மத உட்பிரிவினருக்கு (Religious Denomination) மட்டும்தான் உண்டு. அதில் தலையிட வெளியில் உள்ள அதிகார மையங்களுக்கு உரிமை இல்லை. அம்மையங்களின் அதிகார எல்லைக்குள் அம்மடமோ, கோவிலோ வராது” என்று தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது கேரளாவில் 1985ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம். கேரளாவில் உள்ள பள்ளியில் மூன்று சிறுமிகள் தேசிய கீதத்தை பாட மறுத்தனர். எழுந்து நிற்கவும் மறுத்தனர். ஆதலால் அவர்கள் தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததாக குற்றம் சாட்டி அவர்களை பள்ளியை விட்டு நீக்கியது பள்ளி நிர்வாகம். விஷயம் கோர்ட்டுக்கு சென்றது. பள்ளி மாணவியரின் பெற்றோர்கள் தாங்கள் யகோவாவின் சாட்சிகள் (Jehovah's Witnesses) என்ற மத அமைப்பை சார்ந்தவர்கள். Jehovah's Witnesses is a millenarian restorationist Christian denomination with nontrinitarian beliefs distinct from mainstream Christianity. இந்த அமைப்பினர் உலகெங்கும் உள்ளனர். இவர்கள் எந்த நாட்டிலும் பள்ளியில் தேசிய கீதம் பாடுவதில்லை . அதனை அந்த மதப்பிரிவு மதவிரோதமாக கருதுவதால், அவர்களின் மதநிகழ்ச்சியில் கடவுள் துதிக்கு மட்டுமே அவர்கள் எழுந்து நிற்பர் மற்றும் துதி ஸ்தோத்திரங்கள் பாடுவார்கள் என வாதிட்டனர். ஆனால் இவர்களின் வாதங்களை கேரளா உயர்நீதி மன்றம் நிராகரித்து இவர்கள் தேசிய கீதத்தை அவமதித்தது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதலால் அந்த மாணவியர்களை பள்ளியை விட்டு நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்தது. ஆனால் அந்த யகோவாவின் சாட்சிகள் என்ற மத அமைப்பை சார்ந்த பெற்றோர்கள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் மதசம்பிரதாயங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் சட்டம் மத சம்பிரதாயங்களில் தலையிட கூடாது என மாணவியர்களுக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கியது. ஆசிய கண்டத்தில் உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் தான் இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதே நாட்டில் உள்ள உச்ச நீதி மன்றம் சபரிமலை விஷயத்தில் மட்டும் பாலின பாகுபாடு என தவறான வாதங்களை கூறி ஹிந்து மத நம்பிக்கையில் தலையிடுகிறது .மேலும் கம்யூனிஸ்ட்கள் ஒன்றும் உச்சநீதிமன்றம் அளித்த அனைத்து தீர்ப்புகளையும் மதித்ததாக வரலாறு கிடையாது. அது பற்றிய செய்திகளும் நம்ம தினமலர் வாசகர்களுக்காக . 1967 ம் வருடம் அடிப்படை உரிமைகளை மாற்றும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்திற்கு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது .அதனை கம்யூனிஸ்ட்கள் மிக கடுமையாக எதிர்த்தார்கள் என்பது தான் வரலாறு .1970 ம் ஆண்டுகளில் முன்னாள் ராஜாக்களுக்கு வழங்கிய மானியங்களை ரத்து செய்தது தவறு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது .அதனையும் கம்யூனிஸ்ட்கள் மிக கடுமையாக எதிர்த்தார்கள் என்பது தான் சரித்திரம் . மேலும் 1970 ஆண்டுகளில் இந்திய வங்கிகளை மத்திய காங்கிரஸ் தேசியமயமாக்கியது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது .அதனை கூட கம்யூனிஸ்ட்கள் மிக கடுமையாக எதிர்த்தார்கள் என்பது தான் வரலாறு.1989 ம் ஆண்டு சமஸ்கிருதம் கற்றுக்கொடுப்பது மதச்சார்பின்மைக்கு அதாவது செகுலரிதிற்க்கு எதிரானதல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது .அதனை கூட கம்யூனிஸ்ட்கள் மிக கடுமையாக எதிர்த்தார்கள் .இன்றும் எதிர்க்கிறார்கள் .1995 ம் ஆண்டு ஹிந்துத்வம் வகுப்புவாதம் இல்லை என உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பளித்தது .அதனை கம்யூனிஸ்ட்கள் இன்றுவரை மதிக்கவில்லை என்பது தான் சரித்திரம் .2005 ம் வருடம் சிறுபான்மை என்ற ஒரு பிரிவு இல்லாத நாடாக வேண்டும் ஒரே நாடு ஓரே மக்கள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது .அதனை கம்யூனிஸ்ட்கள் சிறுபான்மை மக்களின் உரிமை பாதிக்கும் என பொய்யான வாதங்கள் செய்து எதிர்த்தார்கள் /எதிர்க்கிறார்கள் என்பது தான் வரலாறு. மேலும் 2015 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பொது சிவில் சட்டம் ,முத்தலாக் ஆகிய வழக்குகளில் தீர்ப்பளித்தது .அதனையும் கம்யூனிஸ்ட்கள் சிறுபான்மை ஒட்டு வங்கிக்காக மிக கடுமையாக எதிர்த்தார்கள் என்பது தான் வரலாறு.மேலும் முல்லை பெரியாறு அணை விஷயத்தில் இன்றுவரை உச்சநீதிமன்ற தீர்ப்பை கம்யூனிஸ்ட் அரசு மதிக்கவில்லை .மேலும் ,பம்பா -அச்சன் கோவில் வைப்பாறு திட்டம் - ஆம் .தென் தமிழகம் காவேரி பாயும் மாவட்டங்கள் போன்று நெற்களஞ்சியங்களாக மாற்ற வைக்கும் திட்டம் .இந்த திட்டத்தின்படி, அருப்புக்கோட்டை ,கமுதி சங்கரன் கோவில், கோவில்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் /வட்டங்களில், 2.06 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தவும், அதற்காக, 22 டி.எம்.சி., நீரை கேரளாவில் இருந்து, தமிழகத்துக்கு திருப்பவும் முடிவு செய்யப்பட்டது. திருப்பி விடப்படும் நீரில் இருந்து, அதிகபட்சமாக, 500 மெகா வாட் மின் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தை, மத்திய அரசின், தேசிய நீர் மேம்பாட்டு ஏஜன்சி, வரையறை செய்தது.இதனை உச்சநீதிமன்றமே 2002 m ஆண்டு முன்னுரிமை கொடுத்து செய்ய தீர்ப்பளித்தது .அதனையும் இன்றுவரை கம்யூனிஸ்ட்கள் எதிர்க்கின்றனர் .இதனை அனைவரும் உணர வேண்டும் .சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற பிடிவாதம் காட்டி வரும் கேரள மாநில கம்யூ., அரசு, கேரளாவில் பழமையான சர்ச் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்துவதை தாமதப்படுத்தி வருகிறது. கேரள அரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டை ஐகோர்ட் கண்டித்துள்ளது நம்ம தினமலர் செய்தி நவம்பர் மாதம் . 2017 ம் ஆண்டு ஜூலையில், சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, 1,100 சர்ச்களின் கட்டுப்பாடு ஆர்தோடக்ஸ் சர்ச் நிர்வாகத்தின் கீழ் வர வேண்டும். ஆனால், ஜாகோபைட் சிரியன் சர்ச் ஆதரவாளர்கள் இதை ஏற்க மறுத்து வருகின்றனர். இதை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற பேரணியும் நடந்தது. இந்த சர்ச் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்க கூடாது என கேரள மாநில அரசே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கோரி, கேரள ஐகோர்ட்டில் ஆர்தோடக்ஸ் சர்ச் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை (நவ., 29) விசாரித்த ஐகோர்ட், சபரிமலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த தீவிரம் காட்டும் கேரள அரசு, சர்ச் வழக்கில் ஏன் தாமதம் செய்கிறது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என கண்டனம் தெரிவித்தது.ஆம் கிறிஸ்துவர்களுக்கு வெண்ணெயையும் ஹிந்துக்களுக்கு சுண்ணாம்பையும் தடவுவதாய் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது .சபரிமலை விஷயத்தில் ஹிந்துக்களின் மரபுகள் பேணப்பட வேண்டும்.கம்யூனிஸ்ட்கள் நடத்தும் கபடநாடகத்தை அய்யப்பன் முடிவுக்கு கொண்டுவருவார் .இது உறுதி .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X