பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : ஜன 02, 2019
Share
Advertisement
இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு: ப.வேலூர், காவிரிப்பாலம் பிரிவு சாலையில் குப்பை, கட்டடக்கழிவுகள், நோயாளிகள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்திய மெத்தை, தலையணை உள்ளிட்ட பொருட்கள் குவிக்கப்படுகின்றன. மேலும், கோழிக்கடைகளில் தினசரி சேகரமாகும் கழிவுப் பொருட்களும் கொட்டப்பட்டு, தீ வைக்கப்படுகின்றன. இதனால், துர்நாற்றத்துடன் கூடிய புகையால், சுகாதார சீர்கேடு

இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு: ப.வேலூர், காவிரிப்பாலம் பிரிவு சாலையில் குப்பை, கட்டடக்கழிவுகள், நோயாளிகள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்திய மெத்தை, தலையணை உள்ளிட்ட பொருட்கள் குவிக்கப்படுகின்றன. மேலும், கோழிக்கடைகளில் தினசரி சேகரமாகும் கழிவுப் பொருட்களும் கொட்டப்பட்டு, தீ வைக்கப்படுகின்றன. இதனால், துர்நாற்றத்துடன் கூடிய புகையால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

- கே.கமலக்கண்ணன், ப.வேலூர்.

வடிகால் அமைக்க வேண்டும்: குமாரபாளையம் அருகே, வட்டமலை எதிர்மேடு பகுதியில் டீச்சர்ஸ் காலனி உள்ளது. இங்கு, அதிக எண்ணிக்கையில் வீடுகள் உள்ளன. இங்கு, இதுவரை வடிகால் அமைக்கப்படவில்லை. குடியிருப்பு வாசிகள், வீட்டுக்கு பின்புறம் பள்ளம் தோண்டி, கழிவுநீரை தேக்கி வைத்துள்ளனர். அந்த இடங்களில் வாழை மரங்கள் வைத்துள்ளனர். துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் வடிகால் அமைக்க வேண்டும்.

- எஸ்.ஏ.மோகன், குமாரபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X