பதிவு செய்த நாள் :
காரசாரம்!
'ரபேல்' விவகாரத்தில் லோக்சபாவில் வாதம்
மத்திய அரசு மீது ராகுல் சரமாரி குற்றச்சாட்டு

புதுடில்லி : 'ரபேல்' போர் விமானம் வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக, லோக்சபாவில், மத்திய அரசு மீது, காங்கிரஸ் தலைவர் ராகுல், நேற்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார். ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு, நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி ஆவேசமாக பதில் அளித்தார்; இதனால், சபையில் காரசாரமான வாதங்கள் நடந்தன.

ரபேல்,விவகாரம்,லோக்சபா,வாதம்,காரசாரம்!


ஐரோப்பிய நாடான, பிரான்சிடமிருந்து, ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், மோசடி நடந்துள்ளதாக, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த பிரச்னையை, காங்கிரஸ் தலைவர் ராகுலும், தொடர்ந்து எழுப்பி வருகிறார். ரபேல் போர் விமானம் தொடர்பாக, பார்லி.,யின் கூட்டுக் குழுவின் ஆய்வு கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு, ஆளும், பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 'இந்தப் பிரச்னை குறித்து, பார்லி.,யில் விவாதிக்கத் தயாராக உள்ளோம். ஆனால், காங்கிரஸ் ஓடி ஒழிகிறது' என, ஆளும் கட்சி தரப்பில், சமீபத்தில், லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 'இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கத் தயார்' என, காங்கிரஸ் கூறியது. அதன்படி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, லோக்சபாவில் நேற்று, நீண்ட நேரம், கடுமையான வாக்குவாதம் நடந்தது.

குற்றம் சாட்டவில்லை:


காங்கிரஸ் தலைவர் ராகுல் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். விவாதத்தை துவக்கி வைத்து, ராகுல் பேசியதாவது: செய்தி நிறுவனத்துக்கு, 95 நிமிடங்கள் பேட்டிஅளித்த பிரதமர் நரேந்திர மோடி, 'ரபேல் விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் என் மீது தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவில்லை. அரசு குறித்தே கேள்விகள் எழுப்புகின்றன' என, கூறியுள்ளார். இந்த நாட்டு மக்களின் சுட்டு விரல், தன்னை நோக்கித் தான் உள்ளது என்பது அவருக்கு எப்படி தெரியாமல் போனது.

இந்தப் பிரச்னை குறித்து, இன்று விவாதம் நடக்கும் நிலையில், சபைக்கு அவர் ஏன் வரவில்லை? எங்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லும் தைரியம் இல்லாமல், தன் அறையில், ஒழிந்து கொண்டுள்ளார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, கோவாவைச் சேர்ந்த ஒரு அமைச்சர் பேசிய ஆடியோ, எங்களிடம் உள்ளது. அதை இங்கு ஒலிபரப்ப அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு, ஆளும் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. ''இது பொய்யான, திரிக்கப்பட்ட ஆடியோ. இதன் நம்பகத்தன்மையை, ராகுல் உறுதி செய்வாரா... அவ்வாறு இல்லாவிட்டால், உரிமை மீறல் நடவடிக்கையை சந்திக்க நேரிடும்,'' என, அருண் ஜெட்லி கூறினார். ''ஆடியோவை ஒலிபரப்ப அனுமதிக்க முடியாது,'' என, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறினார்.

தொடர்ந்து, ராகுல் பேசியதாவது: நான் இந்த ஆடியோவை ஒலிபரப்ப மாட்டேன். ரபேல் தொடர்பான ரகசிய கோப்புகள் தன்னிடம் உள்ளதாக, கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் கூறியதாக, கோவா அமைச்சர் விஷ்வஜித் ரானே, மற்றொரு நபரிடம் கூறிய இந்த ஆடியோவை ஒலிபரப்பிவிடுவேனோ... என, ஆளும்கட்சி பயந்துவிட்டது.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தை, பார்லி.,யின் கூட்டுக் குழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதனால், பா.ஜ.,வினர் பயப்பட வேண்டாம். இந்த விவகாரத்தில் நடந்துள்ள உண்மை, நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தன் பேச்சின்போது, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் துணை ஒப்பந்தம் செய்துள்ள, 'ரிலையன்ஸ் டிபன்ஸ்' நிறுவனத்தின் தலைவர், அனில் அம்பானி குறித்து, ராகுல் குறிப்பிட்டார். ஆனால், ''சபையில் இல்லாத ஒருவரை பற்றி பேசக் கூடாது,'' என, சபாநாயகர் குறிப்பிட்டார். ராகுலின் பேச்சுக்கு, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி பதிலளித்து பேச எழுந்தார். அப்போது, காங்., - எம்.பி.,க்கள், 'பேப்பர் ராக்கெட்'களை பறக்க விட்டனர்.

பின், அருண் ஜெட்லி பேசியதாவது: 'இந்த ஒப்பந்தத்தில் எந்த மோசடியும் நடக்கவில்லை' என, உச்ச நீதிமன்றே கூறியுள்ளதால், பார்லி.,யின் கூட்டுக் குழு ஆய்வு தேவையற்றது.

20 சதவீதம் குறைவு:


ஹெலிகாப்டர் பேர ஊழல், பீரங்கி ஊழலில் சிக்கிய காங்கிரஸ் கட்சியால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மீது எந்தக் குற்றமும் கூற முடியவில்லை. அதனால், ஒன்றை உற்பத்தி செய்து பேசுகின்றனர். பல்வேறு ஊழல்களில், பார்லி.,யின் கூட்டுக் குழுவால் கண்டிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர், தற்போது, அரசு மீது பொய்யான குற்றச்சாட்டைக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

போர் விமானத்தின் விலை குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளோம். விமானத்தின் விலை, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நிர்ணயித்த விலையைவிட, 9 சதவீதம் குறைவு. ஆயுதங்களுடன் கூடிய விமானத்தின் விலை, 20 சதவீதம் குறைவு. காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, உண்மை பேசுவது என்றால் பிடிக்காது. அவர் எது கூறினாலும், அது பொய்யாகவே உள்ளது.

மிகப் பெரும் தலைவர்கள் எல்லாம் இருந்த காங்கிரஸ் கட்சியின் நிலைமை, தற்போது

Advertisement

மிகவும் மோசமாக உள்ளது. 'போர் விமானம் என்றால் என்ன' என்பது கூட தெரியாதவர், அக்கட்சிக்கு தலைவராக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

'ஆடியோ' வெளியிட்டது காங்.,

ரபேல் தொடர்பான ஆடியோவை வெளியிட, லோக்சபாவில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பார்லி., வளாகத்தில், அந்த ஆடியோவை, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: ரபேல் தொடர்பான முக்கிய கோப்புகள், தன் படுக்கையறையில் உள்ளதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, கோவா முதல்வர், மனோகர் பரீக்கர், மாநில அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார். மற்றொருவருடன் பேசும்போது, கோவா அமைச்சர் விஷ்வஜித் ரானே, இதை கூறியுள்ளார். அதுதான் இந்த ஆடியோவில் பதிவாகி உள்ளது. இந்தப் பிரச்னையால் தான், பார்லி.,யின் கூட்டுக் குழு ஆய்வுக்கு, இந்தப் பிரச்னையை அனுப்புவதற்கு, பா.ஜ., தயங்குகிறது. முன்னாள் ராணுவ அமைச்சரான, மனோகர் பரீக்கர் வீட்டில் பதுக்கப்பட்டுள்ள அந்த கோப்புகள் வெளியானால், இந்த ஒப்பந்தத்தில் நடந்துள்ள மோசடிகள் குறித்து தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.


நேரில் விவாதிக்க தயாரா!

லோக்சபாவில் நடந்த விவாதங்களுக்கு பின், நேற்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, காங்கிரஸ் தலைவர், ராகுல் கூறியதாவது: ரபேல் ஒப்பந்தம் உட்பட, ராணுவ ஒப்பந்தங்கள் குறித்து, என்னுடன் விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு தைரியம் உள்ளதா? எனக்கு, 20 நிமிடங்கள் மட்டும் போதும்; இது தொடர்பாக, நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன். ரபேல் ஒப்பந்தத்துக்கு, ராணுவ அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்ததா... போர் விமானத்தின் விலை, 526 கோடி ரூபாயில் இருந்து, 1,600 கோடி ரூபாயாக உயர்ந்தது எப்படி. இந்த ஒப்பந்தத்துக்கு, விமானப் படை எதிர்ப்பு தெரிவித்ததா என்பது போன்ற கேள்விகளுக்கு, பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


விரக்தியின் வெளிப்பாடு!

தாங்கள் கூறி வந்த பொய்யை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிப்படுத்தி விட்டதே என்ற விரக்தியில், இந்த ஆடியோவை, காங்கிரஸ் உருவாக்கியுள்ளது. அமைச்சரவை கூட்டத்திலோ அல்லது வேறு எந்தக் கூட்டத்திலும், இது தொடர்பாக, நான் எதையும் பேசவில்லை.

-மனோகர் பரீக்கர், கோவா முதல்வர், பா.ஜ.,


Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
03-ஜன-201916:34:38 IST Report Abuse

Nakkal Nadhamuniபப்புவை உண்மை என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்த்துவிட்டார்கள்... நேரு குடும்பம் தங்களை ஒரு அரசர் குடும்பம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது... சுற்றி இருக்கும் காக்கைகளை சுட்டு விரட்டினால் இளவரசரும், ராணியும் சிறையில் கஞ்சி சாப்பிடவேண்டியதுதான்...

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-ஜன-201910:31:36 IST Report Abuse

Malick Rajaபப்பு என்று சொல்லிக்கொண்டே போக வேண்டியதுதான் .. அதற்க்கு பதிலாக பிஜேபிக்கு நல்ல ஆப்பு வைக்கிறார்கள் எதிர்க்கட்சிகள் ..இனி பிஜேபிக்கு கோவிந்தாதான் ...

Rate this:
blocked user - blocked,மயோட்
03-ஜன-201914:42:48 IST Report Abuse

blocked userஜெட்லீ இளவலை மட்டுமல்ல... இளவலின் குடும்பத்தயும் சேர்த்து கிழித்து தொங்கவிட்டு விட்டார்...

Rate this:
தமிழன்பன் - tamilnadu,இந்தியா
03-ஜன-201914:22:12 IST Report Abuse

தமிழன்பன்மோதிக்கு எதிர்ப்பு தெரிவிக்க போய் வின்சிக்கு வக்காலத்து வாங்கும் கேவல நிலையில் இங்கே பலர் இருக்கின்றனரே? கொடுமை. தமிழர் போர்வையில் கிருத்தவர்கள், நான்கு தலைமுறைகளுக்கு பின் தமிழனை முழு கிருத்துவனாக்கி ஐந்தாவது தலைமுறயில் தமிழில் கிருத்துவ மொழியை கலந்து ஆறாவது தலைமுறையில் தமிழை முழுவதும் கொன்றுவிட கணக்கு செய்திருக்கும் கும்பல் தமிழை அழிக்க பிஜேபி முயல்கிறதாக கூவுகிறது. கோர்ட்டில் கேஸ் போட்டு பார்த்தார்கள், பப்பு வேகவில்லை, இப்பொழுது சபையில் ஓலமிடுகிறார்கள். தேர்தல் வருகிறதல்லவா? எவ்வாறிருப்பினும் எங்கள் ஒட்டு பிஜேபிக்கே.

Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X