பொது செய்தி

இந்தியா

பெண்கள் தரிசனத்தை பக்தர்கள் எதிர்க்கவில்லை: பினராயி பிடிவாதம்

Updated : ஜன 03, 2019 | Added : ஜன 03, 2019 | கருத்துகள் (76)
Advertisement
சபரிமலை பெண்கள், பினராயி விஜயன், சபரிமலை பக்தர்கள் , கேரள முதல்வர் பினராயி விஜயன், சபரிமலை, சபரிமலை போராட்டம் , பெண் பக்தர்கள், சபரிமலை ஐயப்பன் கோவில், 
Sabarimala women, Pinarayi Vijayan, Sabarimala devotees, Kerala Chief Minister Pinarayi Vijayan,Sabarimala, Sabarimala protest, women devotees, Sabarimala Ayyappan temple,

திருவனந்தபுரம்: சபரிமலையில் 2 பெண்கள் வழிபாடு செய்த போது, பக்தர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.


கடமையை செய்தோம்:


நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சபரிமலை விவகாரத்தில் போராட்டம் நடத்துவதை கைவிட வேண்டும். ஐய்யப்பனை தரிசனம் செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. கோர்ட் உத்தரவை பின்பற்ற வேண்டியது போலீசாரின் கடமை. கேரள அரசும் தனது கடமையை தான் செய்தது.சபரிமலை வரும் பக்தர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பர். இரண்டு பெண்களும் தரிசனம் செய்த போது பக்தர்கள் யாரும் எதிர்க்கவில்லை. அப்போது எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. பெண்கள் வழிபாடு நடத்தி சென்று விட்டு திரும்பிய பின்னர் தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எந்த உண்மையான ஐய்யப்ப பக்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.


பெயர் தெரியாது


சபரிமலையில் பெண்களை அழைத்து சென்ற விவகாரத்தில் எதையும் ரகசியமாக செய்யவில்லை. சபரிமலை சென்ற பெண்களின் பெயர் கூட எனுக்கு தெரியாது. இந்த விஷயம் பெரிதானபிறகு தான், அவர்களின் பெயர் எனக்கு தெரியவந்தது. அதற்கு முன்னர், இரண்டு பெண்கள் மட்டும் தான் அழைத்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். இந்த பெண்களை ஹெலிகாப்டரில் அழைத்து வரவில்லை. அவர்கள், மற்ற பக்தர்கள் அழைத்து சென்ற பாதையில் தான் அழைத்து சென்றோம். அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் எதையும் வழங்கவில்லை.


பதவி விலகலாம்


ஐய்யப்பனை தரிசனம் செய்ய விரும்பும் பெண்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த நிலையிலிருந்து நாங்கள் மாற மாட்டோம். இதனை, மத உணர்வுகளை புண்படுத்துவதாக கருத வேண்டும். அரசியல் சட்ட விதிகளின் படி தான் நடக்கிறோம். தந்திரி குடும்பத்தினரும் சபரிமலை வழக்கில் ஒரு அங்கத்தினர் தான். அவர்களின் வாதங்களையும் கோர்ட் கேட்டுள்ளது. தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்க அவருக்கு உரிமை உள்ளது. அதேநேரத்தில்,அவர் தந்திரி பொறுப்பில் தொடர்வதால், தீர்ப்பிற்கு கட்டுப்பட வேண்டியது அவரது கடமை. கோர்ட் உத்தரவு பிடிக்காவிட்டால், அவர் பதவி விலகலாம்.


நடவடிக்கை


பரிகார பூஜைக்காக சபரிமலை நடை அடைக்கப்பட்டது குறித்து தேவசம்போர்டிடம் தந்திரி பேசவில்லை. இதனால், தந்திரியின் செயல், கோர்ட் உத்தரவை மீறிய செயல் மட்டுமல்ல. தேவசம் போர்டு விதிகளை அவமதிக்கும் செயல்.போராட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறைக்கு பா.ஜ.,வே காரணம். பெண் பக்தர்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


மறுப்பு

சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்தியதை தொடர்ந்து, நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டது. இதனையடுத்து தந்திரிகள் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Anantha subramanian - krikland, washington state,யூ.எஸ்.ஏ
04-ஜன-201901:20:30 IST Report Abuse
S.Anantha subramanian It is sad to note that two ladies who are not at all dovetees were sent for dharshan with their bodies cmpletely covered with black clothes in the wee hours with the help of police personel, hurting regious sentiments of hindus. Is it the way that a cheif minister should behave? Then how can he expect an ordinary citizen to behave better than him.
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
03-ஜன-201922:48:27 IST Report Abuse
s t rajan ராயி அனுப்பியவர்கள் பக்தர்கள் இல்லையே... இருந்தால் ஏன் திருட்டுத்தனமாக போலீஸ் உதவியுடன் நடைமுறைகளை மீற வேண்டும். நம்ம "உச்ச" நீதிமன்றமே பெரும்பான்மையினரின் உணர்வுகளுக்கூ மதிப்பு கொடுக்க வில்லை.
Rate this:
Share this comment
Cancel
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
03-ஜன-201922:07:23 IST Report Abuse
T M S GOVINDARAJAN இங்கு இந்துமத பெயரில் கருத்து எழுதுகிறேன் என்று ஒரு தமிழ் மூடன் பிரனாயிக்கு ஆதரவாக எழுதுகிறான் அவன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தொண்டனாக இருப்பான் போல் தெரிகிறது அவனுக்கும்,அவன் சார்ந்த கட்சியம் என்ன செய்வது என்று தெரியாமல் இறை சக்தியோடு மோதி பார்க்க வேண்டும் ஆசை படுகிறார்கள் அவர்களுக்கு தக்க பாடமாக இயற்கை சமீபத்தில் 80அணைகள் நிரம்பி கேரளா துவம்சம் செய்த வரலாறு மறந்து விட்டது போல் தெரிகிறது. அநேகமாக இந்தியா வரலாற்றில் கடைசியில் காணாமல் போகும் கம்யூனிஸ்ட் கட்சி பினராயின் ஆட்சி ஆக இருக்கும். இவருக்கு பக்தர்களை பற்றி என்ன தெரியும் இவர் ஆட்சி செய்யும் கேரளாவில் இரண்டு பெண்கள்மட்டும் தான் இருக்கிறார்களா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X