தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., முகாம் சத்திரப்பட்டியில் டிச. 24 ல் துவங்கி 30 ல் முடிந்தது. கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் மோகன், திருச்சி அண்ணா பல்கலை பேராசிரியர் மணி பேசினார்.தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் முருகன், பாலகிருஷ்ணன், ராஜமோகன், ஜவஹர், கல்லுாரி இணைச்செயலாளர் காசிபிரபு, முதல்வர் மதளைசுந்தரம், சத்திரபட்டி கிராம தலைவர் பாண்டியன், சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியம் பங்கேற்றனர்.அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், கண் பரிசோதனை முகாம், வீரபாண்டி கால்நடை டாக்டர் சிவரத்னா தலைமையில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. தேனி போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு விதிகள், தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான வீரர்கள் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.நிறைவு விழாவில், மாவட்ட தொழிற்துறை பயிற்சி நிலைய பொது மேலாளர் ராமசுப்ரமணியன், தேனி மகளிர் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி ஆகியோர் பேசினர். மரக்கன்றுகள் நடுதல், 'டெங்கு 'விழிப்புணர்வு உள்ளிட்ட நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்பாடுகளை துணைமுதல்வர்கள் மாதவன், சிவகணேசன், ஒருங்கிணைப்பாளர்கள் பிரதீப்குமார், நாகராஜன் செய்தனர்.