கம்பம்: மாவட்டத்தில் 8 ஒன்றியங்களிலும் ஊராட்சிகளின் அடிப்படை தேவைகள் குறித்து அறிக்கை தர அதிகாரிகளை கலெக்டர் நியமனம் செய்துள் ளார்.மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, கடமலை- மயிலை, கம்பம், உத்தமபாளையம், போடி, சின்னமனுார், பெரியகுளம்ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலும் 10 க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. கம்பத்தில் மட்டும் மிக குறைவாக 5 ஊராட்சிகள் உள்ளன.அவற்றில் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பறை, சாக்கடை கழிவுநீர், தெருவிளக்குகள், மயானம்,துணை சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றில் பிரச்னைகள் இருந்து வருகின்றன.குறைதீர் கூட்டங்களில் பெரும்பாலும் மனுக்கள் அடிப்படை வசதிகள்தொடர்பாகவே வரு கிறது. எனவே ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு நோடல் ஆபீசரை கலெக்டர் பல்லவிபல்தேவ்நியமித்துள்ளார். அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்து அறிக்கை தரவலியுறுத்தப்பட்டுள்ளனர். கம்பம் மற்றும் உத்தமபாளையம்ஒன்றியங்களுக்கு சப்கலெக்டர் வைத்யநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.கோகிலாபுரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண் டார்.அவர் கூறுகையில், 'கோகிலாபுரத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி,கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட 6 விஷயங்கள் தொடர்பாக கலெக்டருக்கு அறிக்கை தந்துள்ளேன். கிராமங்களில்தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும். ராயப்பன்பட்டி உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளின் குப்பைக்கிடங்கு பிரச்னைக்குதீர்வு காணப்படும்,'' என்றார்.