பதிவு செய்த நாள் :
ஜெய் அனுசந்தான்..
பிரதமரின் புதிய கோஷம்

புதுடில்லி : ''ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான் ஆகிய கோஷங்களுடன், ஆராய்ச்சிகளை பிரபலப்படுத்தும் வகையில், 'ஜெய் அனுசந்தான்' என்ற கோஷத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஜெய் அனுசந்தான்,பிரதமரின்,புதிய கோஷம்


பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான. காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜலந்தரில், 106வது, இந்திய அறிவியல் மாநாடு நேற்று துவங்கியது.

மாநாட்டை துவக்கி வைத்து, 'எதிர்கால இந்தியா; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்'

என்ற தலைப்பில், பிரதமர் மோடி பேசியதாவது: நம் முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி, ராணுவ வீரர்களையும், விவசாயிகளையும் போற்றும் வகையில், 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற கோஷத்தை பிரபலப்படுத்தினார்.

இந்த கோஷத்தில், அறிவியலை ஊக்கப்படுத்தும் வகையில், 'ஜெய் விஞ்ஞான்' என்ற வார்த்தையை, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சேர்த்தார். தற்போது, ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில், இந்த கோஷத்தில், 'ஜெய் அனுசந்தான்' என்ற வார்த்தையை சேர்க்க விரும்புகிறேன்.

நாட்டின் வளர்ச்சியில், அறிவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் விஞ்ஞானிகள் ஆற்றி வரும் பங்கு மகத்தானது. தொழில்நுட்ப வளர்ச்சியில், நாம் முன்னணியில் உள்ளதற்கு, நம் விஞ்ஞானிகள் தான் காரணம். நம் நாடு இன்று அடைந்துள்ள வளர்ச்சிக்கும், எதிர்காலத்தில் அடையப் போகும் வளர்ச்சிக்கும், அறிவியல் தான் காரணம். புதிய கண்டுபிடிப்புகளுக்காக, ஆராய்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


'கமல்நாத்துக்கு பதவியா?'

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரில் நேற்று நடந்த, பா.ஜ.,பொது கூட்டத்தில், பிரதமர் மோடி பேசிய தாவது: டில்லியில், 1984ல் நடந்த, சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் கமல்நாத். அவரை தற்போது, மத்திய பிரதேச முதல்வராக்கியுள்ளது, காங்கிரஸ் மேலிடம். அவர் பதவியேற்றதும் செய்த முதல் காரியம், 'வந்தே மாதரம்' பாடுவதை தடை செய்தது தான். 'இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Solvathellam Unmai - Chennai,இந்தியா
04-ஜன-201923:07:05 IST Report Abuse

Solvathellam Unmaiஎன்ன காவடி எடுத்தாலும் நடக்காது

Rate this:
RAMAKRISHNAN NATESAN - South Carolina. Columbia,யூ.எஸ்.ஏ
04-ஜன-201920:20:16 IST Report Abuse

RAMAKRISHNAN NATESAN     ஜெய் அனுசந்தான்..பிரதமரின் புதிய வேஷம்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஜன-201919:57:42 IST Report Abuse

Pugazh V"அனுசந்தான்" என்றால் என்ன? அனு. .எதித்தாத்து பொண்ணு தெரியும். சந்தான் யாரு? நம்ம காமெடி நடிகர் சந்தானமா?

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X