அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மகுடம்?,அடுத்த கட்டத்திற்கு,தயாரிக்கப்படுகிறார்,உதயநிதி,கருணாநிதி தொகுதி,பேரன்,போட்டி?

சென்னை : தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதியை, தி.மு.க.,வில் அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்தும் வேலைகள் துவங்கி உள்ளன. தாத்தா கருணாநிதி வென்ற, திருவாரூர் தொகுதியில், பேரன் உதயநிதி களமிறங்க ஆதரவாக, கட்சி பிரமுகர்கள், விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். கருணாநிதி - ஸ்டாலின் - உதயநிதி என, குடும்ப அரசியல் கொடி கட்டி பறப்பதாக, தி.மு.க.,வில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

28ல் இடைத்தேர்தல்:


கருணாநிதி மறைவை தொடர்ந்து, காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு, வரும், 28ல், இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பதால், கட்சிகள் இடையே போட்டி ஏற்படுவது, உறுதியாகி உள்ளது. அதனால், அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., கட்சிகள், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுகின்றன.

புத்தாண்டு தினத்தன்று, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, ஸ்டாலின் வீட்டில், திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக, முக்கிய ஆலோசனை நடந்துள்ளது. அதில், பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலர், டி.ஆர்.பாலு, மகளிர் அணி செயலர் கனிமொழி உள்ளிட்ட, கட்சியின் முக்கிய புள்ளிகள் மட்டும் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், மிக ரகசியமாக, வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டு, முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

ஆலோசனை கூட்டம்:


அதைத் தொடர்ந்து, 'தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து, கட்சி தலைமை அலுவலகமான, சென்னை, அறிவாலயத்தில், விருப்ப மனு பெறப்படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியான அன்று, விருப்ப மனு அளிக்க, கட்சி நிர்வாகிகள் யாரும் முன்வரவில்லை.

மாலையில், அறிவாலயத்தில், எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அக்கூட்டம் முடிந்த பின், மாவட்ட செயலர்களை மட்டும் தனித் தனியாக அழைத்து, ஸ்டாலின் பேசினார். பின், வெளியே வந்த அவர், ''தி.மு.க., வேட்பாளர் குறித்து, 4ம் தேதி அறிவிக்கப்படும்,'' என்றார்.

இந்நிலையில், நேற்று காலை, அறிவாலயத்தில், விருப்ப மனுக்கள் பெறும் பணி துவங்கியது. கட்சி அலுவலக மேலாளர் பத்மநாபன், மனுக்களை பெற்றார். திருவாரூர் மாவட்ட செயலர்

கலைவாணன், 'சீட்' கேட்டு, விருப்ப மனு தாக்கல் கொடுத்தார். அவருக்கு ஆதரவாக, ஆதரவாளர்கள் சிலரும் மனு அளித்தனர்.

திடீர் திருப்பம்:


அதைத் தொடர்ந்து, 'திருவாரூர் தொகுதியில், உதயநிதி போட்டியிட வேண்டும்' என, கலைவாணன், தனியாக ஒரு மனு அளித்தார். இந்த தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு, கலைவாணனுக்கே கிடைக்கும் என, தி.மு.க.,வினர் நம்பும் நிலையில், அவர், உதயநிதியை நிறுத்துமாறு மனு கொடுத்தது, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதை வலுப்படுத்தும் விதமாக, திருவாரூர் மாவட்ட உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரும், 'திருவாரூர் தொகுதியில், உதயநிதி போட்டியிட வேண்டும்' என, விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், அவர்கள் கூறியுள்ளதாவது: உதயநிதிக்கு வயது, 41;

'முரசொலி' நாளிதழ் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். அவர் பிறந்த ஆண்டான, 1977 முதல், கட்சி உறுப்பினராக உள்ளார். சமூக ஆர்வலராக இருக்கிறார். கட்சி நடத்திய, அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று, சிறை சென்றுள்ளார். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று மாலை வரை வந்த விருப்ப மனுக்களில், உதயநிதிக்கு ஆதரவாகவே, அதிகம் பேர் மனு தாக்கல் செய்திருப்பது, தெரிய வந்துள்ளது. எனவே, அவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு, அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

இது குறித்து, தி.மு.க.,வினர் சிலர் கூறியதாவது: 'சீட்' கேட்டு, விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து, ஸ்டாலின், இன்று நேர்காணல் நடத்துகிறார். அது முடிந்ததும், வேட்பாளர் யார் என்பதை, அவர் அறிவிப்பார். ஆனால், விருப்ப மனுக்கள் அதிகளவில், உதயநிதிக்கு ஆதரவாகவே வந்துள்ளன.

சாத்தியமில்லை:


இது, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கருணாநிதி மறைவுக்கு பின், அவரது மகன் ஸ்டாலின், இப்போது தான் தலைவராகி இருக்கிறார். அதற்குள், அடுத்த வாரிசாக, உதயநிதி முன்னிறுத்தப்படுவது ஏன் என்பது தெரியவில்லை. தலைமையின் ஆசி இல்லாமல், அவரது பெயரில், மாவட்ட செயலரே, மனு கொடுப்பது, தி.மு.க.,வில் சாத்தியமில்லை. இது, குடும்ப அரசியல், தி.மு.க.,வில் கொடி கட்டி பறக்கிறது என்ற விமர்சனத்தை தான் கிளப்பும்; தேர்தலில், வெற்றியை பாதிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (119)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
04-ஜன-201922:06:02 IST Report Abuse

Krishnamurthy Venkatesanசாதாரண தொண்டனையும் தனது கட்சியின் councillor, MLA, MP என உயர்த்தி காட்டியவர் திரு mgr அவர்களே. அவரின் வழியில் அம்மா அவர்கள் நடந்து காட்டினார். ஆனால் திமுகவில் சாதாரண தொண்டன் டீயை உறிஞ்சி கொண்டே கள பணீ ஆற்றுவான்.

Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
05-ஜன-201909:22:59 IST Report Abuse

RAMAKRISHNAN NATESAN     குடும்பம் இல்லா தலைவர் என்ன செய்ய உங்கள் A 1 கூட குடும்பம் இல்லை என்ன செய்வது ...

Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
05-ஜன-201917:49:53 IST Report Abuse

THENNAVANகுடும்பம் இல்லாதவர்கள் தான் நாட்டிடை கொள்ளை அடிக்கமாடடார்கள். ...

Rate this:
04-ஜன-201921:59:38 IST Report Abuse

VIJAIAN CThambi pugazh DMK oru kudumba katchi!!!!!

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஜன-201920:51:59 IST Report Abuse

Pugazh V. பலரும் கலைஞர் குடும்பத்தைப் பார்த்து வயத்தெரிச்சல் படுவது ஏன்? இதோ இப்போது பூண்டி கலைவாணனை நிறுத்தி யாச்சு. குடும்ப அரசியல் என்று கூவியவர்கள் இப்போது தான் திமுக வின் தீர்மானத்தை பாராட்டுவார்களா? இல்லை யல்லவா?

Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
04-ஜன-201921:53:03 IST Report Abuse

Matt Pகலைவாணனை நிறுத்தியிருக்கிறார்கள் என்றால் ..இணையத்தளத்தின் .வசைபாடல்கள் அவர்கள் மனதை புண்படுத்தியிருக்க வேண்டும் . இனிமேலும் அவர்கள் யாபாரம் எடுபடாது என்று புரிந்திருக்க வேண்டும் . திமுக தொண்டர்களின் மனதை உணர்ந்திருப்பார்கள் . ...

Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
05-ஜன-201917:52:43 IST Report Abuse

THENNAVANஏற்கனவே ஒரு திருட்டு கழக குண்டர் சாரி தொண்டர் ,உனக்கு என்ன தகுதி இருக்கு மேடைல வந்து உட்க்காருகிறாய் என கேள்விகேட்டாப்பவே உதயநிதிக்கு உரைத்திருக்கணும் இல்லையே , ...

Rate this:
மேலும் 112 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X