பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ரூ.80,000 கோடி வாராக்கடன் மீட்பு
மார்ச்சுக்குள் மேலும் ரூ.70,000 கோடிக்கு வாய்ப்பு

புதுடில்லி : ''இதுவரை, என்.சி.எல்.டி., எனப்படும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ரூ.80000 கோடி,வாராக்கடன்,மீட்பு,மார்ச்சுக்குள்,மேலும்,ரூ.70000 கோடி,வாய்ப்பு


அவர், முகநுாலில், 'நொடிந்த நிறுவனங்கள் மற்றும் திவால் சட்டத்தின் இரண்டு ஆண்டுகள்' என்ற தலைப்பில் கூறியிருப்பதாவது: முந்தைய, காங்., ஆட்சியில் அறிமுகமான, காலத்திற்கு உதவாத, அரதப் பழசான வணிக சட்டங்கள், தோல்வியைத் தான் தழுவின. நலிவடைந்த நிறுவனங்களின் புனரமைப்பிற்கு, 1980ல், 'சிகா' சட்டத்தை, காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இது, படுதோல்வி அடைந்தது.

கடன் மீட்பு தீர்ப்பாயம்:


நலிவடைந்த பல நிறுவனங்கள், கடனை திரும்பத் தராமல், இந்த சட்டத்தை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டன. அடுத்து, வங்கிகள், அனைத்து வாராக் கடன்களையும் வசூலிக்க உதவும் நோக்கில், கடன் மீட்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இந்த தீர்ப்பாயம்,

வாராக்கடனை வசூலிப்பதில் சிறப்பாக செயல்பட்டது குறித்து எந்த நிரூபணமும் இல்லை.

இதையடுத்து, நிறுவனம் சாராத திவால் நடவடிக்கைக்கு, பி.ஐ.ஏ., சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும், துருப்பிடித்த சட்டமாக பயன்படுத்தப்படாமல் வழக்கொழிந்தது. இது போன்ற திறனற்ற சட்டங்களை இயற்றிய, காங்., ஆட்சியில், 2008 -- 14 வரை, வங்கிகள் பாரபட்சமின்றி தாராளமாக கடன்களை வாரி வழங்கின. இதன் காரணமாகவே, வாராக்கடன் அதிகரித்ததாக, ரிசர்வ் வங்கியின் சொத்து மதிப்பீட்டு அறிக்கை தெரிவிக்கிறது.

திவால் சட்டம்:


ஆனால், பா.ஜ., அரசு பொறுப்பேற்றதும், வாராக்கடனை வசூலிக்க, வலுவான திவால் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த, 2016, மே மாதம், பார்லி.,யின் இரு சபைகளிலும், இந்த சட்டம் நிறைவேறியது. நான் கண்ட வரையில், பார்லி.,யில் மிக விரைவாக நிறைவேற்றப்பட்ட சட்டம் இது எனக் கூறலாம். இதைத் தொடர்ந்து, அதே ஆண்டு இறுதியில், திவால் நடவடிக்கைகளை விசாரிக்க, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

இதுவரை, இந்த தீர்ப்பாயத்தில், நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை கோரி, 1,322 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில், 260 வழக்குகளில், நிறுவனங்களின் சொத்துக்களை விற்று, கடனை செலுத்த தீர்ப்பாகியுள்ளது. இதில், 66 வழக்குகள் மூலம், கடன் கொடுத்தோருக்கு,

Advertisement

80 ஆயிரம் கோடி ரூபாய் திரும்பக் கிடைத்துள்ளது. என்.சி.எல்.டி., விசாரணைக்கு முன், 4,452 வழக்குகளில், சமரச உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இதில், 2.02 லட்சம் கோடி ரூபாய் திரும்ப கிடைத்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

பூஷன் பவர் அண்டு ஸ்டீல் மற்றும் எஸ்ஸார் ஸ்டீல் இந்தியா நிறுவனங்களின் வழக்குகள், இறுதிக் கட்டத்தில் உள்ளன. மார்ச்சுக்குள் இந்த வழக்குகள் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், கடன் கொடுத்த வங்கிகளுக்கு, மேலும், 70 ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., அரசின் அதிரடி நடவடிக்கைகளால், நிறுவனங்களை திவால் நிலைக்கு தள்ளியவர்கள், நிர்வாகத்தில் இருந்து வெளியேறி விட்டனர். புதிதாக தேர்வு செய்யப்படும் நிர்வாகக் குழு, நேர்மையாக, வெளிப்படை தன்மையுடன் செயல்படுகிறது. இதில், அரசியல் அல்லது அரசு தலையீடு எதுவும் கிடையாது.

அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சர்


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul rahim - Thanjavur,இந்தியா
04-ஜன-201919:44:49 IST Report Abuse

Abdul rahimசொல்லித்தானே இருக்கிறார்

Rate this:
04-ஜன-201915:51:02 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்அருமை , இதற்காக தான் அடிமைகள் கூவிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் எஜமானர்களை காப்பாற்ற வேண்டாமா ? பிரியாணி , குவாட்டர் கொடுப்பவர் ஆச்சே.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
04-ஜன-201912:26:24 IST Report Abuse

ganapati sbஅருமை நிதிஆயோக் முதல் ஜந்தன் உயர்ப்பண நீக்கம் GST ரயில்வேயை பட்ஜெட் இணைப்பு ஆதார் இணைப்பு வங்கிகள் இணைப்பு என திவால் சட்டம் வரை தொடர்ந்து நிதித்துறையில் அடுத்த தலைமுறைக்கான பல சீர்திருத்தம் பல சாதனை புரிந்த அருண் ஜெட்லீ மோடிக்கு பாராட்டுக்கள்

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X