பதிவு செய்த நாள் :
'ரபேல்' விமான ஒப்பந்தம்
ராகுலின் நான்கு கேள்விகள்

புதுடில்லி : 'ரபேல்' போர் விமான ஒப்பந்தம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியிடம், காங்., தலைவர் ராகுல், நான்கு கேள்விகளை கேட்டுள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரான்சிடமிருந்து, ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்காக, மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில், ஊழல் நடந்துள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ரபேல்,விமான ஒப்பந்தம்,ராகுலின்,நான்கு கேள்விகள்


லோக்சபாவில் நேற்று முன்தினம், ரபேல், போர் விமான ஒப்பந்தம் குறித்து நடந்த விவாதத்தில், காங்., தலைவர் ராகுல் பேசினார்.அப்போது, 'ரபேல் விவகாரத்தில், என் கேள்விகளை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாமல், அறையில் பதுங்கியுள்ளார், பிரதமர். ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன். அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் பின், ஒளிந்திருக்கிறார்' என்றார்.

கோவா முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மனோகர் பரீக்கர், ரபேல் குறித்து பேசியதாக கூறப்படும் ஆடியோ பற்றியும், ராகுல் பேசினார். ராகுல் பேச்சுக்கு, நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி பதில் அளித்தார்.

இந்நிலையில், சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, நான்கு கேள்விகளை எழுப்பி, அதற்கு, பிரதமர் மோடி பதில் அளிக்கும்படி, ராகுல், நேற்று குறிப்பிட்டிருந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, நான் கேட்கும்

கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், பஞ்சாப் பல்கலை மாணவர்களிடம் பேச, பிரதமர் மோடி செல்கிறார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, பார்லிமென்டில், பிரதமர் மோடிக்கு, திறந்த புத்தகத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான கேள்விகள் முன்கூட்டியே கொடுக்கப் பட்டுள்ளன.

● ரபேல் போர் விமானங்கள், 126 தேவைப்பட்ட நிலையில், அதை, 36 விமானங்களாகக் குறைத்தது ஏன்?

● ரபேல் போர் விமானம் ஒன்றின் விலை, 560 கோடி ரூபாயாக, முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது; ஆனால், அதை, 1,600 கோடி ரூபாயாக மாற்றியது ஏன்?

● எச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம், அனில் அம்பானி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு, பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். பிரதமர் பதில் அளிக்காவிட்டால், அவரிடம், இது பற்றி மாணவர்கள் கேட்க வேண்டும். இவ்வாறு ராகுல் பதிவிட்டிருந்தார்.

இதற்கு, ராணுவ அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, நிர்மலா சீதாராமன், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் அளித்த பதிலில், 'பள்ளி வகுப்பறையில் தோல்வி அடைந்த மாணவர், வெளியே வந்து சவால் விடுகிறார்' என, கூறியிருந்தார்.

இதையடுத்து, ராகுல் தெரிவித்திருந்ததாவது: நான்கு கேள்விகள் என குறிப்பிட்டு விட்டு, மூன்று கேள்விகளை மட்டுமே கேட்டிருந்தேன். ஏனெனில், லோக்சபா சபாநாயகர், 'கோவா ஆடியோ டேப் குறித்து பேசக்கூடாது' என, தெரிவித்தார். அதனால் தான், மூன்று கேள்விகளை கேட்டிருந்தேன். தற்போது, மீதமுள்ள கேள்வியையும் கேட்டு விடுகிறேன்; அது, மிகவும் சிக்கலான கேள்வி.

Advertisement

'ரபேல் விமானக் கொள்முதல் தொடர்பான ஆவணங்களை, முன்னாள் ராணுவ அமைச்சரான, பரீக்கர், தன் படுக்கை அறையில் வைத்துள்ளார். அதில் என்ன இருக்கிறது என்பதை, மோடி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.

முன்கூட்டியே தயாரித்ததா?

பிரதமர் மோடி, சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி, அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. இது பற்றி ராகுல் கூறுகையில், 'ரபேல் விமான ஒப்பந்தம் பற்றி பேச மறுக்கும் பிரதமர் மோடி, முன் கூட்டியே தயாரிக்கப்பட்ட கேள்வி, பதில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மோடியின் பேட்டி, ஒரு நாடகம் தான். அதை, வளைந்து கொடுக்கும் பத்திரிகையாளர் ஒருவர் நடத்தியுள்ளார்' என்றார். இதற்கு பிரதமர் மோடியை பேட்டி எடுத்த, ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்தின் ஆசிரியர், ஸ்மிதா பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் பேட்டியை, நாடகம் என கூறுவதன் மூலம், விளம்பரம் தேட, ராகுல் முயற்சிக்கிறார். அரசியல் ரீதியாக, மோடியை, அவர் எதிர்க்கட்டும்; அதில், எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், வளைந்து கொடுக்கும் பத்திரிகையாளர் என, ராகுல் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பிரதமரின் பேட்டியை, ராகுல் முழுமையாக பார்த்தாரா அல்லது மற்றவர்கள் கூறியதை வைத்து பேசுகிறாரா... என, புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


பிரதமரின் பேட்டியை, நாடகம் என, கூறியுள்ளதன் மூலம், தன் மரபணுவை ராகுல் வெளிபடுத்தியுள்ளார்.

-அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,


Advertisement

வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
05-ஜன-201910:32:43 IST Report Abuse

Manianராணுவம் உடனே 126 விமானம் நாளளைக்கே வேணும்னு சொன்னதா, இல்லை உடணி பாதுகாப் அவசரத்துக்கு 36, பாக்கி அப்புறம் என்று சொன்னதா? மந்திரத்தில் உடனே எல்லாமே உற்பத்தி செய்ய முடியும்னு சொன்னாங்களா? அவற்றிக்கு ஏதாவவதுஉதிரி பாகம் பழுது நீக்க பாகங்கள் தேவை, உடனே ரெடியயா வச்சிருப்போம், இல்லை ராவொடு ராவா செய்து தருவார்களா? அப்போ உதிரி பாக உற்பத்தி இந்தியாவிலே வேண்டாம்,உடனே எல்லா பணமும் கொடுக்காணுமா?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஜன-201922:48:29 IST Report Abuse

Pugazh Vஏன் ஓடி ஒளிகிறார் என்று பட்டவர்த்தனமாக ராகுல் காந்தி கேட்கிறார். அவருக்கு பதில் சொல்ல அவசியமில்லையாம். வேற யாருக்கு பதில் சொல்வார்? ஆப்கானிஸ்தான் பிரதமருக்கா? அல்லது அமெரிக்க அதிபருக்கா? செம நழுவல்.

Rate this:
Anandan - chennai,இந்தியா
05-ஜன-201906:47:07 IST Report Abuse

Anandanகேள்விக்கு பதில் சொல்ல தெரியாது அதான் ஒளியிறார் என்ன செய்ய முடியும்? ...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஜன-201921:08:15 IST Report Abuse

Pugazh Vஇவர்களின் வாதம் பலவீனமானது

Rate this:
மேலும் 84 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X