அயோத்தி வழக்கு: ஜன.,10க்கு ஒத்திவைப்பு

Added : ஜன 04, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
Ayodhya, Supreme Court, Justice Ranjan Gogoi, அயோத்தி, சுப்ரீம் கோர்ட்,  ராம ஜென்மபூமி, ராமர் கோவில் , அயோத்தி வழக்கு, நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி கவுல், ram janmabhoomi, Rama temple, Ayodhya case,  Justice Kaul,உச்சநீதிமன்றம்,

புதுடில்லி: அயோத்தி வழக்கை ஜன., 10ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.அயோத்தியில், சர்ச்சைக்குரிய, 'ராம ஜென்மபூமி' தொடர்பான வழக்கை விசாரித்த, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தீர்ப்பு அளித்தது. அதில், 'சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை, மூன்று பாகங்களாக பிரிக்க வேண்டும். அதில் ஒரு பகுதி, ராமர் கோவில் கட்டுவதற்காக, ஹிந்து மஹா சபாவுக்கு அளிக்கப்பட வேண்டும். மற்றொரு பங்கு, சன்னி வக்பு வாரியத்துக்கும், மீதமுள்ள பங்கு, ஹிந்து மத அமைப்பான, நிர்மோகி அகாராவுக்கும் வழங்கப்பட வேண்டும்' என, கூறப்பட்டது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், 'ராம ஜென்மபூமி வழக்கு, அடுத்தாண்டு ஜனவரியில், பொருத்தமான அமர்வு முன், விசாரணைக்கு அனுப்பப்படும். வழக்கின் போக்கை புதிய அமர்வு முடிவு செய்யும்' என, கடந்த அக்டோபரில் தெரிவித்தது.


விவாதம் இல்லை:இந்நிலையில், அயோத்தி வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜன.,4) தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதி கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு பொருத்தமான அமர்வில் ஜன.,10ம் தேதி விசாரணை நடத்தப்படும் என கோர்ட் அறிவித்தது. 1 நிமிடம் மட்டுமே நடந்த விசாரணையில், எந்த வாதமும் நடக்கவில்லை. ஜன.,10ம் தேதிக்கு முன்னர் பொருத்தமான அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
04-ஜன-201916:57:45 IST Report Abuse
ஆரூர் ரங் WHO IS THE FATHER OF Justice GOGOI?
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
04-ஜன-201915:25:11 IST Report Abuse
Raj Judge may be sick today
Rate this:
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
04-ஜன-201914:24:19 IST Report Abuse
Selvaraj Thiroomal எந்த தீர்ப்பும் இருதரப்பிலும் ஏற்றுக்கொள்வார் இல்லாத நிலையில் எப்படி விசாரித்து தீர்ப்பை சொல்லமுடியும்.. ஒரேஇடத்தில் ராமருக்கு கோவிலும் மசூதியும் இருந்தால், இந்தியாவின் புகழ் ஓங்காதா ?? தூணிலும் துருப்பிலும் இருக்கும் நாராயணின் அவதாரத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிறந்ததாக பிதற்றுவதே சகிக்கவில்லை..ராம ராம,.
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
04-ஜன-201915:31:40 IST Report Abuse
ShivRam ShivShyamநாராயணன் ராமராக அவதரித்தது அங்கே தான் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X