பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் இலங்கை பெண் தரிசனம்?

Updated : ஜன 04, 2019 | Added : ஜன 04, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
சபரிமலை, ஐய்யப்பன், தரிசனம்,

சபரிமலை: சபரிமலையில், இலங்கையை சேர்ந்த சசிகலா (46) என்பவர் , 18 படியேறி தரிசனம் செய்தது போன்ற வீடியோ காட்சிகள் மாநிலத்தில் ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற சேனலில் வெளியாகின. இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.


போராட்டம்

சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட இரண்டு பெண்கள் (பிந்துமற்றும் கனக துர்கா) ஆகியோர் போலீஸ் உதவியுடன், நேற்று முன்தினம் தரிசனம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது.


மறுப்புஇந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் இலங்கையை சேர்ந்த சசிகலா(46) என்ற பெண் சபரிமலை சென்றதாகவும், 18 படிகள் ஏறி தரிசனம் செய்த பின்னர் பம்பையில் உள்ள முகாமிற்கு பாதுகாப்பாக திருப்பி கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகின.

இது பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இலங்கையை சேர்ந்தச சசிகலா இதனை மறுத்துள்ளார். மேலும் அவர், நான் ஒரு பக்தை. 48 நாட்கள் விரதத்தை முடித்து ஐய்யப்பனை தரிசனம் செய்ய சென்றேன். ஆனால் என்னை தடுத்து விட்டனர்.. என்னை தடுக்க இவர்கள் யார்? எனது கர்ப்பப்பை அகற்றப்பட்டு விட்டது. இதற்கான மருத்துவ சான்றிதழும் என்னிடம் உள்ளது. தரிசனம் செய்ய முழு உரிமையும் உள்ளது என்றார்.


டிவி காட்சிகள்ஆனால், ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற டிவியில், சசிகலா போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதனை உறுதிபடுத்த முடியவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar - tirunelveli,இந்தியா
04-ஜன-201917:47:51 IST Report Abuse
kumar பல நூறு ஆண்டுகளாக இருக்கும் எங்கள் இந்து பாரம்பரியத்தை, மரபை மாற்றுவதா?? நீதிமன்றம் & சட்டம் தலையிடுவதா?? - பார்ப்பனிய வாதிகள் பாசிச ஆதரவாளர்கள் பல நூறு ஆண்டுகளாக இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ள பல்வேறு சாதிகளை இந்து கோயிலினுள் நுழைய விடாதது தான் இங்கே மரபாக இருந்தது.. பல நூறு ஆண்டுகளாக சூத்திரர் மற்றும் பஞ்சமர்களை தொட்டாலே தீட்டு, பார்த்தால் தீட்டு என்பது தான் இந்து சனாதான மரபாக இருந்தது... பல நூறு ஆண்டுகளாக நரபலி கொடுக்கும் பழக்கம் இந்து மரபாக இருந்தது.. பல நூறு ஆண்டுகளாக யாகங்களில் உயிரோடு விலங்குகளை கொளுத்துவது இந்து பாரம்பரியமாக இருந்தது... பல நூறு ஆண்டுகளாக கணவனை இழந்த இளம் பெண்களை உடன்கட்டை ஏறுதல் என்ற பெயரில் உயிரோடு கொளுத்துவது தான் இந்து பாரம்பரியமாக இருந்தது.. பல நூறு ஆண்டுகளாக கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டையடித்து வெள்ளை உடையில் முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பது தான் இந்து பாரம்பரியமாக இருந்தது.. பல நூறு ஆண்டுகளாக குழந்தைத் திருமணங்களும், பெண் சிறுமிகளை அதிக வயதுடைய அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் இந்து மரபாக இருந்தது.. பல நூறு ஆண்டுகளாக பெண்களை பொட்டு கட்டுதல் என்ற பெயரில் இந்து கோயில்களில் தேவதாசிகளாக, அங்கே இருக்கும் பிராமணர்கள் மற்றும் பணக்காரர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவதாசிகளாக நேர்ந்து விடும் பழக்கம் இந்து பாரம்பரியமாக இருந்தது.. பல நூறு ஆண்டுகளாக இந்துக்களில் பெரும்பான்மையோருக்கு கல்வி மறுக்கப்படுவதுதான் பாரம்பரியமாக இருந்து.. பல நூறு ஆண்டுகளாக இந்துக்களில் பெரும்பான்மையோருக்கு தாய்மொழியான தமிழ் மொழியை, நீச பாஷை என முத்திரையிடப்பட்டு கோவிலிலிருந்து வெளியே தள்ளுவது தான் இந்து மரபாக இருந்தது.. இப்படி எண்ணற்ற பழமைவாத செயல்களும் கருத்துக்களும் இங்கே ஹிந்து மரபாக சனாதான பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.. இவற்றையெல்லாம் ஒரே நாளில் யாரும் மாற்றிவிடவில்லை.. 100 ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சியான போராட்டங்கள், விழிப்புணர்வு மூலமாகத்தான் முற்போக்குவாதிகள், பகுத்தறிவுவாதிகள் உங்கள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், சட்டத்தின் துணையோடு, ஆட்சியாளர்களின் துணையோடு மாற்றிக் காட்டினார்கள்.. இத்தகைய மாற்றங்கள், இந்து மதத்தில் மட்டுமல்ல கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற அனைத்து மதங்களிலும் பழங்கால பழக்க வழக்கங்களும் மரபுகளும் காலப்போக்கில் மாறிக்கொண்டே தான் வருகின்றது.. சபரிமலை விவகாரத்தில் அவிழும் உண்மைகள் : 1969 வரை பெண்கள் செல்ல எந்த தடையும் இல்லாமல் இருந்தது. 1995 பெண்கள் பதினெட்டாம் படி வழியாக செல்ல மட்டுமே தடை விதிக்கப்பட்டது. மாற்று வழியில் அனுமதிக்கப்பட்டார்கள்.. 1991 வரை மாதத்தின் முதல் 5 நாட்கள் இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதன்முறையாக உணவு அளிக்கும் "அன்னபிரசன்னம்" விழாவுக்கு அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர். ராஜ குடும்பத்து விழாக்கள் சபரிமலை சந்நிதானத்தில் நடந்தன.., அந்த விழாக்களில், ராஜ குடும்பத்து பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.. எனவே காலகாலமாக மரபு என்பது உண்மையில்லை.. அதனால் பல நூறு ஆண்டுனு சமூக கேடுகளை ஆதரிக்காதீர்கள்.. நாங்க குரல் கொடுப்பது உங்கள் இந்து தாய்மார்கள் சகோதரிகள் மகள்கள் பேத்திகளுக்கும் சேர்த்து தான் என்பதை நினைவில் வைங்க..
Rate this:
Cancel
04-ஜன-201916:12:24 IST Report Abuse
சிவராமன் Hindu நாட்டிலேயே ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை. தைரியம் இருந்தால் அரபு நாடுகளுக்கு சென்று போராட்டம் நடத்துங்கள் . கம்யுனிஸ்ட் உலக மக்களுக்கு செய்த கொடுமைகள் ஏராளம். பஞ்சம் , பட்டினி , பேரழிவு , உயிர் பலி ஆகியவைதான் அதனுடைய சாதனை என்பது ரஷ்யாவின் ஸ்டாலின் சரித்திரத்தை படித்தவர்களுக்கு தெரியும் .
Rate this:
Cancel
Gideon Jebamani - Yonkers,யூ.எஸ்.ஏ
04-ஜன-201915:42:26 IST Report Abuse
Gideon Jebamani Any religion needs to be reformed and d in its usage and applicable. When we adopted to use every modern gadgets and equipments why not we can change ourselves.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X