பொது செய்தி

தமிழ்நாடு

கம்யூனிஸ்ட்டுக்கு ஓட்டு இல்லை: தமிழக மக்கள் குமுறல்

Updated : ஜன 04, 2019 | Added : ஜன 04, 2019 | கருத்துகள் (102)
Share
Advertisement
சென்னை: பிரம்மச்சாரி கோலம் பூண்டு சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனை காண பத்து வயதுக்கு உட்பட்ட 50 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே செல்ல வேண்டும் என்பது ஐதீகம். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கேரள முதல்வர் பினராயி விஜயன், ஐயப்பன் கோயில் விவகாரத்தில் மட்டும் எப்பாடு பட்டாவது ஐயப்பன் கோயிலுக்குள் இளம் பெண்களை நுழைய வைக்க வேண்டும்.
சபரிமலை, கம்யூனிஸ்ட், மக்கள் குமுறல்

சென்னை: பிரம்மச்சாரி கோலம் பூண்டு சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனை காண பத்து வயதுக்கு உட்பட்ட 50 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே செல்ல வேண்டும் என்பது ஐதீகம். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கேரள முதல்வர் பினராயி விஜயன், ஐயப்பன் கோயில் விவகாரத்தில் மட்டும் எப்பாடு பட்டாவது ஐயப்பன் கோயிலுக்குள் இளம் பெண்களை நுழைய வைக்க வேண்டும். தனது சித்தாந்தத்தை ஹிந்துக்களிடம் வலுகட்டாயமாக திணிக்க வேண்டும், என பிடிவாதமாக இருந்தார்.

இதனால் இளம் பெண்கள் இருவரை மாறுவேடம் அணிய வைத்து திருட்டுத்தனமாக நள்ளிரவு ரகசியமாக போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று கோயிலுக்குள் நுழைய வைத்துள்ளார். வரும் தேர்தலில் மார்க்சிஸ்ட் அணிக்கு ஓட்டுப் போடாமல் வேட்டு வைப்போம்,' என ஐயப்ப பக்தர்கள் கொதிப்படைந்தனர்.

அவர்கள் கூறுவது என்ன..


பெண்கள் காத்திருக்கின்றனர்


ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு நியதி பாரம்பரியமாக பாதுகாக்கப்படுகிறது. இந்து மதப் புனிதத்தை கட்டிக்காக்கும் கோயிலாக சபரி மலை ஐயப்பன் கோயில் உள்ளது. காரணம் இல்லாமல் முன்னோர் தடைகள் விதிக்கவில்லை. பத்து வயதிற்கு மேல் 50 வயதிற்குட்பட்ட பெண்களுக்குத்தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து இந்துக்களும் கடைபிடித்து வரும் நிலையில், வம்பாக பெண்களை ஐயப்பன் கோயிலுக்கு அழைத்து செல்லும் கேரள அரசை வன்மையாக கண்டிக்கிறோம். ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அதற்காக எத்தனையோ ஆயிரம் பெண்கள் காத்திருக்கின்றனர். இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயலுக்கு துணை போகும் மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு இனி இந்துக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள்.
வி.தேவி
ராமநாதபுரம்.


அரசியலில் ஈடுபட முடியாது


சபரிமலை தர்மசாஸ்தா உட்பட ஐந்து சாஸ்தா கோயில்களையும், பரசுராமர் பிரதிஷ்டை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதில் சபரிமலைக்கு செல்வோர் பிரம்மச்சரிய விரதம் இருந்து ஆச்சார, அனுஷ்டானங்களுடன் செல்கின்றனர். மேலும் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் மட்டுமே இங்குஅனுமதியில்லை என்ற போதிலும், மற்ற நான்கு நிலைகளில் உள்ள ஐயப்பனை தரிசிக்க அனைத்து பெண்களும் சென்று வருகின்றனர்.தற்போது கேரள மார்க்சிஸ்ட் அரசு சபரிமலைக்கும் அனைத்து பெண்களும் செல்லலாம், எனக் கூறுகிறது. வரும் காலங்களில் நிச்சயமாக எந்த பகுதியிலும் இவர்கள் அரசியலில் ஈடுபட முடியாது. மேலும், பெண்ணுரிமைக்கும், வழிபாட்டிற்கும் எந்த சம்பந்தமும்கிடையாது. ஆகவே பல நுாறு ஆண்டுகளாக கானகத்தில் அருள்புரியும் தர்மசாஸ்தாவை பிரம்மச்சரிய விரதம் இருந்து பதினெட்டு படிகளில் ஏறிச்சென்று வழிபடுவதை அனைத்து பெண்களும் ஒப்புக்கொண்ட ஒன்றாகும். ஆகவே வரும் காலங்களிலும் இது போல் பெண்கள் வழிபாட்டிற்கு செல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள
முடியாது.
பி.எம்.பிரசன்னதேவி
பரமக்குடி, ராமநாதபுரம்


பாரம்பரியத்தை சீரழித்த மார்க்சிஸ்ட்


கேரளாவில் நடக்கும் கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் அறவழி போராட்டத்தை அவமதிக்கும் வகையில் புனிதமான ஐயப்பன் சன்னதியில் பெண்களை அனுமதித்து, இந்துக்கள் மனதை கேரளா அரசு புண்படுத்தி உள்ளது. பாரம்பரியமிக்க புனித தலத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி சீரழிக்க கேரளா அரசு திட்டமிட்டு உள்ளது. மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளிக்காத மார்க்சிஸ்ட் கட்சிக்கு, வரும் எம்.பி., தேர்தலில் கூட்டணி அமைக்கும் கட்சிக்கும் ஓட்டு போடாமல் பதிலடி கொடுக்க வேண்டும்.
எஸ்.பாலரமேஷ்,
பட்டதாரி இளைஞர்
ராமேஸ்வரம்


அழிவுப்பாதையில் கேரள அரசு


இந்துமதத்தின் நம்பிக்கைகளையும், ஐ தீகத்தையும் அழிக்க கம்யூனிஸ்ட் கட்சியும், கேரள அரசும் செயல்பட்டு அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்துக்கள் மாத்திரமே மத சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். எனவே தான் இந்து சமய நம்பிக்கைகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார். தைரியமிருந்தால் மற்ற மதங்களின் மதநம்பிக்கைகளில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை நுழைக்க தைரியம் உண்டா, மதநம்பிக்கையற்ற பெண்களை திருட்டுத்தனமாக கோயிலுக்குள் காவல்துறையின் துணைகொண்டு அனுப்பிய, இந்துமதநம்பிக்கையை இழிவுபடுத்திய பினராயி விஜயனின் சர்வாதிகரத்தை பெண்கள் சமுதாயம் புறக்கணிக்கும்.
-ஷகீலா,
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்.


தெய்வம் நின்று கொல்லும்


இந்த கொடூர செயலை கேரள மார்க்சிஸ்ட் அரசு திட்டமிட்டு சதி செய்து நக்சலைட் பெண்களை கோயிலுக்கு அனுப்பி உள்ளது. இது இந்துக்கள் மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. பெண்ணியவாதிகள் என சொல்லிக்கொள்பவர்கள் பிறமதங்களின் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளார்கள். எது எப்படி ஆயினும் காலம் பதில் சொல்லும். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கேற்ப, இந்த சதி செயல்களுக்கு காரணமானவர்கள், அதற்கு உறுதுணையாக இருப்பவர்களை அய்யன் கேட்டே தீருவார். இதுபோன்ற இந்துவிரோத கட்சிகளையும், அமைப்புகளையும் இந்துக்கள் புறக்கணிக்கவேண்டும்.
-பொன்னையா,
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்.


கோயில் மரபை மீறி விட்டார் பினராயி


சபரிமலை கோயிலுக்கு வயது பெண்கள் செல்லக்கூடாது என்பது மரபு. கேரளா பகவதியம்மன் கோயிலுக்கு பெண்கள் மட்டுமே செல்கின்றனர் இதுவும் மரபு. மரபுகளை மீறக்கூடாது. அரசியலில் கூட நேரு பிரதமர் ஆனவுடன் சுயமாக தொழில் செய்யக்கூடாது என மரபு கூறியதால் தந்தையார் செய்து வந்த பல தொழில்களை கைவிட்டார். எம்.ஜி.ஆர்., முதல்வராக ஆன பின் நடிக்க கூடாது என மரபு குறுக்கிட்டதால் நடிப்பதை கைவிட்டார்.இதுபோன்றுதான் கோயில் மரபு, ஜதீகங்களை அனைவரும் மதிக்க வேண்டும். மரபும் சட்டம் போன்றது தான். கேரளாவில் ஆட்சி செய்யும் முதல்வர் பினராயிவிஜயன் தலைமையிலான அரசு, கோயில் மரபை மீறி பெண்களை சபரிமலையில் வழிபட அனுமதித்தது கண்டிக்கதக்கது.இதன் பலனை அவர் அனுபவிப்பார். இந்து மத பெண்கள் யாரும் 50 வயது முன்பாக சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள். முறைப்படி 48 நாள் விரதமிருந்து 50 வயதிற்கு மேல்தான் கோயிலுக்கு சென்று ஐயப்பன்சுவாமியை வழிபடுகின்றனர்.
உமா மகேஷ்வரி,
குடும்பத்தலைவி, சாத்தூர், விருதுநகர்


உணர்வுகளை புண்படுத்திய பினராயி


முல்லைப்பெரியாறு உள்ளிட்ட தீர்ப்புகளுக்கு எல்லாம் வித்தியாசமான விளக்கம் கொடுத்து வரும் கேரள பினராயி விஜயன், இந்து ஆன்மிக உணர்வுகளை புண் படுத்தி விட்டார். மத உணர்வுள்ள பெண்கள் தங்கள் ஐதீகத்தை காத்து நின்ற வேளையில் ,வரிந்து கொண்டு போலீசாரை கையில் வைத்து இதை செய்துள்ளார். ஆண்டாண்டு காலமாக காத்து வந்த புனித தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளார். மற்ற மதத்திற்கு ஒரு பார்வை இந்து மதத்திற்கு ஒரு பார்வை என வைத்து தீர்க்க முடியாத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இதற்கான விலையை ஐயப்பன் விரைவில் அருள வேண்டும்.
சந்திரன்,
ஐயப்ப பக்தர்,ராஜபாளையம், விருதுநகர்.

தேர்தலில் பதில் அளிப்பர்
மார்க்சிஸ்ட் அரசு, ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை கொச்சை படுத்துவதில் தீவிரமாக இருந்ததுடன், முடிவில் குள்ளநரித்தனத்தை காட்டி விட்டது. யாரை திருப்தி படுத்த இந்த அநீதியை செய்துள்ளனர் என தெரியவில்லை. தவறான நபர்களிடம் அதிகாரம் கிடைத்தால் என்னவாகும் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. உச்ச நீதி மன்ற தீர்ப்பை கைகாட்டி செயல்படுத்த முனைப்பெடுத்த தீவிரத்தை மற்ற வழக்குகளிலும் காட்ட அருகதை அற்ற மத விரோத செயலை, பக்தர்கள் தேர்தலில் பதில் அளிப்பர்.
சரவணக்கண்ணன்,
குருசாமி,ராஜபாளையம், விருதுநகர்.சாபம் சும்மா விடாது


இரு பெண்களை ரகசியமாக சபரிமலை சன்னிதானத்திற்கு அழைத்துச் சென்றது கண்டிக்கத்தக்கது. இந்து மதக் கோட்பாடுகளை உடைத்தெறிய வெளிநாட்டு சக்திகள் செய்யும் சதிவலையில் கேரள
மார்க்சிஸ்ட் பினராயி விஜயன் அரசு கைகோர்த்துள்ளது. இந்து மதக்கட்டமைப்புகளை தகர்க்க நினைக்கும் எதிரிகளின் சதியை முறியடிப்போம். இளம் வயது பெண்கள் சபரிமலை செல்ல அனுமதிக்க மாட்டோம். ஐதீகத்தைபாதுகாக்க ரோட்டில் இறங்கி போராட பெண்கள் தயா ராக உள்ளோம். சபரிமலை விஷயத்தில் பினராயி தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்துக்களின் சாபம் சும்மா விடாது.
மீனாட்சியம்மாள்.
முதலக்கம்பட்டி, தேனி.


வழக்கு பதிய வேண்டும்


சபரிமலை சன்னிதானத்தில் இளம் பெண்களை தரிசிக்க வைத்தது இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது. வி.ஐ.பி.,கள் மட்டும் செல்லக்கூடிய பாதையில் அவர்களை அழைத்து சென்றது திட்டமிட்ட சதியாகும். அப்பெண்கள் நெற்றியில் பொட்டு, சந்தனம் இன்றியும் சென்றது வேடிக்கையான விஷயம். இது பிரச்னையை ஏற்படுத்தும் செயல். இதில் ஈடுபட்ட கேரள முதல்வர், போலீசாரை கண்டிப்பதோடு, தரிசிக்க சென்ற பெண்கள் யார், எந்த அமைப்பை சேர்ந்தவர்கள்,யாருடைய துாண்டுதலில் அவ்வாறு செய்தனர் என்பது குறித்து மத்திய உளவுத்துறை விசாரிக்க வேண்டும். இரு பெண்கள் மீதும் மத அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
மாரிமுத்து,
ஐயப்ப பக்தசபை குருசாமி,போடி, தேனி.


போராட்டம் வெடிக்கும்


கலாசாரம் மிக்க சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் மட்டும் செல்லக்கூடாது என்ற நியதி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதற்காக பெண்களே செல்லக்கூடாது எனக்கூறவில்லை. கட்டுப்பாட்டை மீறி உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் போலீசார் பாதுகாப்புடன் இரு பெண்களை அங்கு ரகசியமாக அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்தது எங்களைப்போன்றவர்களின் மனதை கடுமையாக பாதித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணைப்பிரச்னைக்கு கூடலுார் பெண்கள் வெகுண்டு எழுந்தது போல், இப்பிரச்னைக்கும் போராட்டம் வெடிக்கும்.
என். அனுசுயா
கூடலூர், தேனி.


பாவத்தை சம்பாதிக்காதீர்கள்


கேரளாவில் இருக்கும் பிற ஐயப்ப சாமி கோவிலுக்கு பெண்ளை அனுமதிக்கத்தானே செய்கின்றனர். ஐயப்பனை தரிசிக்க நினைக்கும் பெண்கள் அங்கு செல்லலாம். சபரிமலைக்குத் தான் செல்வேன் என்றால் 55 வயது வரை காத்திருக்கத்தான் வேண்டும். கேரள அரசு ஹிந்துக்களின் கலாசாரத்தில் விளையாடுகிறது. சபரிமலைக்கு சென்ற அந்த 2 பெண்களும் சக பக்தர்களின் அனுமதியோடு சென்றோம் என்கின்றனர். ஆனால் பக்தர்கள் போல் செல்லாமல் முகத்தை மூடிக்கொண்டு திருடன் போல் சென்றுள்ளனர். சபரிமலை புனிதத்தை கெடுக்க சில தீய சக்திகள் செய்யும் சதித் திட்டம் இது. இனியும் பெண்களை அனுமதித்தால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இனி ஒரு போதும் கேரளாவில் மார்க்சிஸ்ட் ஆட்சி அமைக்க முடியாது. சபரிமலைக்கு செல்ல பிடிவாதமாக இருக்கும் பெண்களே, பாவத்தை சம்பாதிக்காதீர்கள்.
- ஆர்.விஜயா,
திண்டுக்கல்.


நம்பிக்கையை சீர்குலைத்த முதல்வர்


ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமுதாயத்தில் சமஉரிமை வேண்டும் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. இருப்பினும் சபரிமலை ஐயப்பன்கோயிலில் பெண்கள் திருட்டுத்தனமாக வழிபாடு செய்துள்ளது கண்டனத்திற்குரியது. எனது கணவரும் ஐயப்ப பக்தர்தான். ஒவ்வொரு மதத்திலும் கட்டுப்பாடுகள், வழிபாட்டு முறைகளை தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகின்றனர். அந்தவகையில் சபரிமலையில் குறிப்பிட்ட வயதுள்ள பெண்களை அனுமதிப்பது இல்லை. இது ஒரு மதம்சார்ந்த, ஆன்மிகவாதிகள், ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கை. ஆனால், இந்துக்களின் மதநம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக கேரள அரசு செயல்படுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாத பெண்களை சபரிமலைக்கு திருட்டுத்தனமாக அனுப்பி, சாதித்துவிட்டதாக முதல்வர் பினராயி விஜயன் நினைக்கிறார். சபரிமலையின் புனிதத்தை கெடுக்க முயற்சி செய்யும் அவருக்கும் கேரள மக்கள் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவர்.
--கே. லதா, பழநி.


மார்க்சிஸ்டை புறக்கணிப்போம்


கேரள மார்க்சிஸ்ட் அரசு ஆதரவுடன் சபரிமலைக்கு இரவு நேரத்தில் இரு பெண்கள் சென்றது ஐயப்ப பக்தர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. அச்சங்கோயில், ஆரியங்காவு, குளத்துபுழை, பந்தளம் என மற்ற ஐயப்பன் கோயில்களுக்கு பெண்கள் இருமுடி கட்டிச் செல்லலாம். பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற கோயில்களும் நாட்டில் உள்ளன. சபரிமலையில் மட்டும் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதியில்லை என்ற ஐதீகம் கடைபிடிப்பதில் என்ன தவறு உள்ளது. கேரள மார்க்சிஸ்ட் அரசு அரசியல் சுயலாபத்திற்காகவே இவ்வாறான செயல்களை அரங்கேற்றுகிறது. நாங்கள் ஐம்பது வயது வரை செல்ல மாட்டோம். எங்களை பிள்ளைகளிடமும் அதைச் சொல்லி வளர்ப்போம். மார்க்சிஸ்ட் கட்சியையும், அது பங்கேற்கும் கூட்டணியையும் மக்களும், பக்தர்களும் புறக்கணிக்க வேண்டும்.
--கே.வேல்ராணி,
வடமதுரை, திண்டுக்கல்.


முரண்பாடான மார்க்சிஸ்ட் அரசு


இளம் பெண்கள் தரிசனம் செய்திருப்பது முறையாக விரதம் இருந்து செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களையும், இந்து மதத்தினரையும் புண்படுத்துவதாக உள்ளது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்க்கும் கேரள மார்க்சிஸ்ட் அரசு சபரிமலை விஷயத்தில் ஏன் தீவிரம் காட்ட வேண்டும். கலவரத்தை துாண்டும் விதத்தில் அரசின் போக்கு சென்று கொண்டிருக்கிறது. சபரிமலை ஆச்சாரத்தை கெடுத்த பெண்கள் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். கம்யூனிச வாதிகளின் துாண்டுதலின் பேரிலேயே இந்த செயல் நடந்துள்ளது. குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு உள்ளது. 10 வயதுக்குள், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யாத்திரை சென்று கொண்டுதான் உள்ளனர். இவ்வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
-என்.தனபால்,
சாணார்பட்டி, திண்டுக்கல்.


ஹிந்து விரோதிகள் சதி'அரசன் அன்று கேட்பான்; தெய்வம் நின்று கேட்கும்,' என்பது சான்றோர் வாக்கு. கருவறைக்குள் பிறர் நுழையக்கூடாது என்பது ஐதீகம். இதை மீறி அப்படித்தான் நுழைவோம், என வீம்பு செய்வது கண்டித்தக்கது. இறைவன் வசிக்கும் இடம் புனிதமானது. மன அமைதியை தேடி இறைவனிடம் செல்கிறோம். அவ்விடத்தை வன்முறை களமாக மாற்றுவது கேரள அரசுக்கு அழகல்ல. உண்மையான ஐயப்ப பக்தர்கள் சான்றோர் சொல் மீறமாட்டார்கள். ஆனால், சபரிமலை செல்ல துடிக்கும் இளம் பெண்கள் உண்மையான பக்தர்கள் அல்ல. இதில் ஹிந்து விரோதிகளின் சதி இருக்கலாம், என எண்ணத்தோன்றுகிறது.
தேவி,
குடும்ப தலைவி, மதுரை


'நோட்டா'வுக்கு ஓட்டு


ஹிந்து விரோத கொள்கை என கட்சியினர் இரட்டை வேடம் போடுகின்றனர். ஆனால் ஹிந்துக்களின் ஓட்டுகள் மட்டும் வேண்டும் என்கின்றனர். ஹிந்துக்களுக்கு யாரும் ஆதரவு தர வேண்டாம். ஹிந்து மத கொள்கைகளில் நீங்கள் மூக்கை நுழைக்காமல் இருந்தால் போதும். ஐயப்பன் கோயிலை விட்டு விடுங்கள். அதன் புனிதத்தை எங்களை போன்ற உண்மையான பெண் பக்தர்கள் உயிரை கொடுத்தும் காப்போம். இந்த தேர்தலில் நோட்டாவுக்கு கூட ஓட்டு போடுவோமே தவிர மறந்தும் கூட மார்க்சிஸ்ட் மற்றும் அதனுடன் கூட்டணி அமைக்கும் கட்சிக்கு ஓட்டு போட மாட்டோம்.
அன்னமயில்,
குடும்ப தலைவி
மதுரை


பெண்ணுரிமை பேசும் இடமில்லை

சபரிமலைக்கு பெண்கள் போகவே வேண்டாம் என்று கூறவில்லை; குறிப்பிட்ட வயது பெண்கள் மட்டும் போகலாம் என்று தான் கூறுகிறார்கள். நேற்று முன்தினம் சபரிமலையில் ௨ பெண்கள் நுழைந்து பெண்ணுரிமைக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறார்கள்.பெண்ணுரிமை பேச பல இடங்கள் இருக்கும் போது கோயிலில் மல்லுக்கட்டுவது சரியல்ல. ஆண்களை விட பெண்களிடம் பல திறமைகள் உள்ளது அதை வெளிப்படுத்தி முன்னேற வேண்டுமே தவிர இப்படி தவறான பாதையில் செல்லக் கூடாது. வீட்டில் ஆண்கள் மாலை அணிந்த நாட்களில், மாதவிடாய் வந்தால் பெண்கள் உறவினர் வீட்டுக்கு சென்று தங்குவர்.
புனிதம் கெடுக்க நினைக்கும் பெண்கள் மீது கோபம் தான் வருகிறது.
ஆர்.பாரதி மீனா,
சமூக ஆர்வலர்,
மதுரை

Advertisement
வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
San - Madurai ,இந்தியா
08-ஜன-201919:38:52 IST Report Abuse
San Hindus should think and vote for BJP in the coming elections by proove that we(Hindus) are united
Rate this:
Cancel
yila - Nellai,இந்தியா
06-ஜன-201917:08:50 IST Report Abuse
yila பிரச்சாரம் ஆரம்பிச்சாச்சா?
Rate this:
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
05-ஜன-201918:02:19 IST Report Abuse
THENNAVAN அப்படியே காஷ்மீர் சியாச்சின் மாலைக்குள் விஜயனை ஏற்பாடு செய்துகொண்டு இந்த பெண்களை அங்கெ அனுப்புங்கள் பாகிஸ்தான் ராணுவம் சந்தோசப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X