சபரிமலை: காங்., எம்.பி.,க்கள் - சோனியா கருத்து வேறுபாடு

Updated : ஜன 05, 2019 | Added : ஜன 04, 2019 | கருத்துகள் (27)
Advertisement
சபரிமலை,காங்., எம்.பி.கள்,சோனியா, ராகுல்,கருத்து வேறுபாடுCongress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்

புதுடில்லி: சபரிமலை விவகாரத்தில் காங்., தலைவர் ராகுல், அவரது தாயார் சோனியாவுக்கும் கேரள காங்., எம்.பி.,க்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


மார்க்சிஸ்டுக்கு எதிர்ப்பு:

சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களுக்கு எதிராக போலீசார் எடுத்த நடவடிக்கை மற்றும் பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்ட முயற்சிகள் கேரளாவில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பெரும்பாலான மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில், சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு அம்மாநில காங்., கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பொதுமக்களுக்கு ஆதரவாக அம்மாநில காங்கிரசார் போராட விரும்புகின்றனர். இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


காங்., கவலை:

சபரிமலை விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தை பிரதிபலிப்பதால், பா.ஜ., பலனைடைந்து விடும் என்று காங்கிரசார் கவலைப்படுகின்றனர். இதனாலேயே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக போராட விரும்புகின்றனர். டில்லியிலும் பார்லிமென்டில் போராட அனுமதிக்க வேண்டும் என சோனியாவிடம் காங்., எம்.பி.,க்கள் கேட்டுள்ளனர்.

கேரளாவில் 7 காங்., எம்.பி.,க்கள் உள்ளனர். சபரிமலையில், பெண்கள் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து கறுப்பு தினமாக அனுசரிக்க இவர்கள் விரும்பினர். இதற்காக, பார்லிமென்டிற்கு கையில் கறுப்பு பட்டை அணிந்து வந்தனர்.

கையில் கறுப்பு பட்டை அணிவதை சோனியா தடுத்துள்ளார். அதற்கு காங்., எம்.பி.,க்கள், ''நமது எதிர்ப்பை டில்லியிலும் காட்ட வேண்டும். இல்லை என்றால், கேரள மக்களின் ஆதரவை இழந்துவிடுவோம்'' என எம்.பி.,க்கள் கூறி உள்ளனர். இதனையடுத்தே, காஙகிரஸ் எம்.பி.,க்கள் கறுப்பு பட்டை அணிய அனுமதிக்கப்பட்டனர். ராகுலுக்கு நெருக்கமான கேரள எம்.பி.,யான வேணுகோபாலும் கையில் கறுப்பு பட்டை அணிந்து வந்திருந்தார்.

மாநில காங்., தலைவர் ரமேஷ் சென்னிதாலா, சபரிமலை விவகாரத்தில் உண்ணாவிரதம் இருந்ததை தொடர்ந்தே, நாங்களும் போராட துவங்கினோம் என அவர்கள் சோனியாவிடம் கூறியுள்ளனர்.

அதற்கு சோனியா, ''மாநில காங்கிரசார், கேரளாவில் போராட்டத்தை தொடரலாம். ஆனால், தேசிய அளவில் என வரும் போது, ராகுல் மற்றும் எனது கருத்துடன் ஒத்து போக வேண்டும் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே கேரள காங்கிரசை, பா.ஜ.,வின் 'பி டீம்' என முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்து வருகிறார்.


ராகுல் ஒப்புதல்:

சில நாட்களுக்கு முன், சபரிமலைக்கு பெண்கள் செல்லும் விவகாரத்தில், தனது தனிப்பட்ட கருத்தும் கேரள காங்கிரசின் கருத்தும் வேறுபட்டு உள்ளதை ராகுல் ஒப்பு கொண்டார்.

சில நாட்களுக்கு முன் இது குறித்து ராகுல் கூறுகையில், அனைத்து ஆண்களும் பெண்களும் சமம். சபரிமலையில் அனைத்து பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனது கட்சி, கேரள மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் எனக் கூறியிருந்தார்.

கடந்த 2016ல், கன்னட நடிகையும், கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சருமான ஜெயமாலா, தனக்கு 27 வயதாகும் போது, சபரிமலை சன்னிதானத்தில் சென்று வழிபாடு நடத்தியதாக கூறினார். இது அப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்ததை அவர் வரவேற்றார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
05-ஜன-201910:12:23 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா மஞ்சளை பிடிச்சு வச்சு ஆவாஹனம் செய்தால், மஞ்சளில் விநாயகர் அங்கு இதுதானே ஹிந்துக்களின் வழிபாட்டு நம்பிக்கை?... இதுல லாஜிக் பார்க்க, மற்ற எவருக்கு உரிமை உள்ளது?... கடவுளர்களுக்கு உருவமும், குணாதிசயங்களும் பொருத்தி வழிபடுவது நம் நம்பிக்கை... ஏன்,... ஊட்டியில் உருவமில்லா கற்களிலேயே கடவுளை கண்டு வழிபடுகிறார்கள். அது அவர்கள் நம்பிக்கை, உரிமை... தெய்வங்களை “பள்ளி எழுந்தருளாயே,…” என திருப்பள்ளி எழுச்சி செய்வதின் சூட்சும பொருளை விட்டு, சாமானியாய் நோக்கும் பொழுது, முதல் நாள் பின்னிரவு நடை அடைத்து உறங்கச் செய்த தெய்வத்தை, மனிதர்களை எழுப்புவது போலவே, துயில் எழுப்புவதே ... சுடலை மாடனுக்கு பலிதான் தரணும். அம்பலப்புழா பால் பாயசம், குருவாயூர் குழந்தை கண்ணனுக்கு பிடிக்கும் என்பதாலே படைக்கப்படுகிறது.. ஆண் தெய்வங்களுக்கு ஆண் ஆடை அலங்காரங்களும், பெண் தெய்வங்களுக்கு பெண்களுக்கான ஆடை அணிவித்து வணங்குவதும், நம் தெய்வங்களின் குணாதிசயங்களுக்கு ஏற்பவே... தாயாருக்கு புடவைதான், சிவனுக்கு வேட்டிதான், பழனி முருகனுக்கு கோவணம்தான்... காரணம் நம்பிக்கைகள்... திருமணத்துக்கு விசேஷ ஸ்தலம்.. சந்தான பாக்கியத்துக்கு வேறு ஸ்தலம் தலைவிதியை திருத்த … பிரம்மா ஆரோக்கியத்துக்கு வைத்தியநாதசுவாமி, தன்வந்திரி ... செங்கன்னூர் பகவதிக்கும், அஸ்ஸாம் காமாக்யா தேவிக்கும், மாதவிலக்குகளும் உண்டு... நம் நம்பிக்கைகள் கடவுளர்களின் குணாதிசயங்களை சார்ந்து, ஒட்டியே உள்ளவை.... குழந்தை வடிவில் இருக்கும் கடவுளுக்கு ஒரு மாதிரியும், ராஜாவாக பரிபாலனம் செய்யும் ராமருக்கு இன்னொரு மாதிரியும், தாயாருக்கு வேறு மாதிரியும், நித்ய பிரம்மச்சாரி கடவுளுக்கு ப்ரத்யேகமாகவும், உக்கிர மூர்த்தியாக உள்ளவருக்கு தனியாகவும்,.. குணாதிசயங்கள் உள்ளதால் அதற்க்கேற்ப பூஜை வழிபாடுகள், நைவேத்தியங்கள், எல்லாமே தனித்தனிதான் ... கடவுள் மனித வடிவில் அவதாரம் செய்வது ஹிந்துமத நம்பிக்கைகளின் அடிநாதம் தானே?... ராமனாய் அவதரித்தவர், மனிதர்களின் அவஸ்தைகளை படவில்லையா? கடவுளர்களுக்கு திருமணமே செய்து வணங்கும் நம்பிக்கை முறைதானே ஹிந்துக்களது?... சீதாபிராட்டி, பிள்ளைகளை வயிற்றில் சுமந்த நிலையில் தங்கிய ஆஸ்ரமம் இன்னமும் உள்ளதே ஆலகால விஷம் வயிற்றில் இறங்கிவிடாமலிருக்க, ஒரு மனைவியாக உமையம்மை சிவனின் கழுத்தை அழுத்திப் பிடித்துத்தானே நீலகண்டனாக அருள்பாலித்தார்?... இதே போலத்தானே, சபரி மலையில், ஐயப்பனின் நித்ய பிரம்மச்சாரி கோலமும் அந்த பிரம்மச்சாரி தவத்தில் அமர்ந்த நிலையில், அவருடைய தவம் கலையாமல் இருக்க வயதுப் பெண்கள் வரத்தடை இருப்பது சரிதானே?.. அந்த தெய்வத்தின் தன்மைக்கேற்ப உள்ள விதிமுறைகளை மாற்ற எவருக்கு அதிகாரம் உள்ளது?... கோர்ட் இவ்வளவு ஹிந்துமத பார்வைகளையும், நம்பிக்கைகளையும் கணக்கில் கொண்டதா? ஏன் கொள்ளவில்லை?... இதில், தனி மனித உரிமை எங்கு வந்தது? அதிலும், பெண்ணுரிமை?... பெண்களுக்கு முழுவதுமாய் அனுமதி இல்லை என்று இருந்தாலே, அதுவும் நம்பிக்கை சார்ந்த விஷயமே... ஆனால், சபரி மலையில், அனைத்து பெண்களுக்கும் அனுமதி இல்லாமலில்லையே? ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும்தானே? இது எப்படி பெண்களின் சமத்துவம் பற்றிய சர்ச்சையாக காண முடியும்?.... மறு சீராய்விலாவது, இம்மாதிரி சரியான விவரங்களை, உச்ச நீதிமன்றத்தில் யாராவது கொண்டு சேர்த்து வாதாடினால், புண்ணியமாய்ப் போகும்.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
05-ஜன-201909:03:32 IST Report Abuse
Indhuindian பொம்மலாட்டம் கயிறு வாடிகனில் இருக்கும் சூத்ரதாரியின் கையில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். நம் மக்கள் இன்னும் மாக்களாக இருப்பது துரதிருஷ்டம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-ஜன-201908:15:02 IST Report Abuse
Srinivasan Kannaiya காங்கிரஸ் அங்கே உள்ள மக்களின் விருப்பத்திற்கு மாறாக இருந்தால் திருவோடு எப்பவுமே காலியாகத்தான் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X