பொது செய்தி

இந்தியா

யார் உண்மையான பக்தர்கள்?

Updated : ஜன 06, 2019 | Added : ஜன 05, 2019 | கருத்துகள் (86)
Share
Advertisement
சபரிமலை: சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம், சிலரது முகமூடியை கிழித்துக்கொண்டு இருக்கிறது. அதே நேரம் உண்மையான பக்தர்கள் யார் என்றும் உலகுக்கு காட்டுகிறது.யாருக்கு உண்மையான பக்தி:சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை காரணம் காட்டி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுப்ப கேரள மாநில ஆளும் மார்க்சிஸ்ட் அரசு எல்லா தகிடுதத்தங்களையும் செய்கிறது.
சபரிமலை, பிந்து, கனகதுர்கா, வெளிநாட்டினர், சதுரகிரி, பக்தர்கள்

சபரிமலை: சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம், சிலரது முகமூடியை கிழித்துக்கொண்டு இருக்கிறது. அதே நேரம் உண்மையான பக்தர்கள் யார் என்றும் உலகுக்கு காட்டுகிறது.


யாருக்கு உண்மையான பக்தி:

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை காரணம் காட்டி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுப்ப கேரள மாநில ஆளும் மார்க்சிஸ்ட் அரசு எல்லா தகிடுதத்தங்களையும் செய்கிறது. பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி, சமீபத்தில் பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்களையும் ரகசியமாக, போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ய வைத்தது.
அப்போது அந்த பெண்களின் நெற்றியில் விபூதியோ குங்கும பொட்டோ இல்லை. கடைசி வரைஅவர்கள் வெறும் நெற்றியுடன் தான் இருந்தனர். பிறகு, அவர்கள் கொடுத்த பேட்டியிலும், ‛‛நாங்கள் இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள். கடவுள் நம்பிக்கை இல்லை'' என வெளிப்படையாக கூறினர். இது நாடு முழுவதும் உள்ள இந்து மத்தினரையும் பக்தர்களையும் மனம் புண்பட செய்தது.


பக்தியுடன் வெளிநாட்டினர்:

அதே நேரம், நேற்று (ஜன.4) செக் குடியரசை சேர்ந்த 55 வெள்ளையர்கள், நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து பக்தி பரவசத்துடன் சதுரகிரி மலை ஏறி, மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர்.


யாருக்கு உண்மையான பக்தி:

‛‛இந்து முறைப்படி வெளிநாட்டினர் சுவாமி தரிசனம் செய்யும் அதே நேரத்தில் சில இந்தியர்களே, இந்து மத விரோதமாக நடந்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யாருக்கு உண்மையான பக்தி உள்ளது என்பதை தோலுரித்து காட்டி உள்ளதாக'' பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
metturaan - TEMA ,கானா
08-ஜன-201912:20:43 IST Report Abuse
metturaan வக்கிர புத்தி கொண்டவர்களால் .. ஆன்மிகம் அசைந்து விடாது .. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ..இறுதியில் தர்மமே வெல்லும்
Rate this:
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
09-ஜன-201911:09:24 IST Report Abuse
Sukumaran Sankaran Nairஆன்மிகம் இறைவனது அடையாளமாக தாயின் கருவிலிருக்கும்போதே உருவாகிறது .இறைவனைப்பற்றிய அறிவு மனிதனுக்கு அப்படி மர்மமாக உள்ளதோ அப்படித்தான் ஆன்மாவைப்பற்றிய அறிவும் மனிதனிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளதாக இன்றைய சகஸ்வரநாமங்க்ளுக்கு உரியவரான இறை ஜோதி பஹாவுல்லா தமது திருவெளிப்பாடுகளில் ஆன்மா குறித்த விளக்கமளித்துள்ளார். உடலும் ஆன்மாவும் சேர்ந்தது தான் உயிருள்ள மனிதனுக்கு .ஆன்மாவைப்பற்றியுள்ள முழுமையான அறிவு இவ்வுலகில் வழங்க மறுக்கப்பட்டாலும்,இவ்வுலகை விட்டு,ஆன்ம உலகில் நாம் பிரவேசிக்கும் போது, அங்கு பயன் படுத்தும் வகையில் மேலும் விளங்கிக் கொள்ளும் படியான ஆற்றல் நிறைவாக வழங்கப்படும் என்று வெளிப்படுத்துவதோடு ,ஐம்புலன்கள் வழியாக ,பார்த்தல்,கேட்டல், தொடுதல், நுகர்தல்,சுவைத்தல் மூலமாக அறிவைத் தேடுகிறோம்,உள்ளுணர்வுகளால் எண்ணங்களை பிரதிபலிக்கும் சிந்தனாசக்தி ,ஆராய்ந்து விளங்கிக்கொள்ளும் ஆற்றல்,ஞாபகப்படுத்துதல்,கனவில் காணும் நிகழ்வுகள் போன்ற ஆற்றல்களையும் அதன் உள்ளுறைத்தன்மையில் பெறும் பரிணாம வளர்ச்சிக்கேற்ப,அதன் வளர்ச்சியும் நம்மை தொடரும் என்று ஆன்மாவின் தன்மையை விளக்கியுள்ளார்,பஹாவுல்லா. நாம் அனைவருமே படைப்பின் நோக்கம் என்ன என்பதை அறிந்து, இறைவனின் கைகளில் கருவிகளாக செயல் படுவதற்காகவே, மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன.சமயங்கள் காலாவதியாகும் போது ,கிருஷ்ண பரமாத்மா ,கீதையில் மீண்டும் அவதரிப்பதான வாக்குறுதியை நாம் கடைப்பிடிக்க,ஒவ்வொரு தனிநபர்,குடும்பம்,சமூகமாக செயல்பட ஒன்றிணைந்த நிறுவனம் உலகெங்கும் அமைந்து வாழும் நெறியைக் கடைபிடிக்கும்போது,பிடிவாத சமய சடங்குகள்,சம்பிரதாயங்கள் நம்மை விட்டகலவே இந்த சிதைவுகள் தோன்றி, நமது மெய்யறிவு துலங்கவும் ,துடிப்பான சமூகமாக நாம் அனைவருமே தன்மை மாற்றம் எனும் ஆண்டவனின் புதிய உலகத்தின் விடியலைக் காண்போம்....
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
07-ஜன-201917:22:07 IST Report Abuse
ganapati sb சுய அறிவில் தோன்றிய பண்டை கலாச்சாரம் சிறந்து விளங்கும் இடங்களில் மிஷனரிகள் எங்கெல்லாம் பெரிய அளவில் மதமாற்றம் செய்ய முடியவில்லையோ அங்கெல்லாம் அரசியல் மூலம் கம்யூனிசத்தை வளர்த்து மக்களின் பண்டை நம்பிக்கையை சிதைத்து பின்னர் மதமாற்றம் செய்வது மிஷனரிகள் தந்திரம் ஜாதி மதம் மொழில் தேசம் என வேறுபாடு இல்லாமல் அனைவரும் அடுத்தவரை சாமி என அழைத்து சமத்துவமாக இருக்கும் அய்யப்பன் வழிபாடு விரைவான தென்னிந்திய மதமாற்றத்திற்கு இடையூறாக இருப்பதால் அதை கேரளாவில் ஏற்கனவே மதமரத்திற்கு உதவியாக இருந்து சாதித்த கம்யூனிஸ்டுகள் மூலம் மிஷனரிகள் செயல்படுத்துகிறார்கள். பல நாட்டின் சொந்த பண்பாடு அழித்து வெளிநாட்டு வியாபாரம் செய்ய இணைந்து செயல்படும் பன்னாட்டு அரசியலில் கம்யூனிஸ்ட்டுகளும் மத வியாபாரத்தில் கிறிஸ்தவர்களும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்ககங்கள் .
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஜன-201923:25:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உங்க அளவீடு வைத்து பார்த்தால் நித்தியானந்தா தான் உலகின் சிறந்த பக்திமான்..துள்ளி விளையாடுறான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X