சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வினரை விரட்டியடித்த குமரி எஸ்.ஐ.,க்கு சன்மானம்

Added : ஜன 06, 2019 | கருத்துகள் (38)
Advertisement
 பா.ஜ.,வினரை விரட்டியடித்த குமரி எஸ்.ஐ.,க்கு சன்மானம்

நாகர்கோவில்:கேரள அரசு பஸ்சை தாக்க முயன்ற, பா.ஜ.,வினரை எச்சரித்து, பஸ்சை காப்பாற்றிய களியக்காவிளை, எஸ்.ஐ., மோகன் அய்யருக்கு, பாராட்டுகள் குவிகின்றன.

சபரிமலை அய்யப்பன் கோவிலில், 1-ம் தேதி நள்ளிரவில், இரண்டு பெண்கள் தரிசனம் செய்தனர்.இதைக் கண்டித்து, 2ம் தேதி, அம்மாநிலத்தில், பா.ஜ.,வினர் போராட்டங்களில் இறங்கினர். 2ம் தேதி, கேரள எல்லையான, குமரி மாவட்டம், களியக்காவிளையில், 150க்கும் மேற்பட்ட, பா.ஜ.,வினர் திரண்டனர்.

அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட களியக்காவிளை, எஸ்.ஐ., மோகன் அய்யர், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கலைந்து செல்லுமாறு கூறினார். சிறிது நேரத்தில், போராட்டக்காரர்கள்கலைந்து சென்றனர்.அவர்களில் ஒரு சிலர், அந்த வழியாக வந்த கேரள அரசு பஸ்சை தடுத்து, பஸ் டிரைவர், பயணியரை கீழே இறங்கி சொல்லி, தாக்க முயன்றனர். இதை பார்த்த, எஸ்.ஐ., மோகன் அய்யர், சிங்கம் சூர்யா ஸ்டைலில், 'தைரியமான ஆம்பளையா இருந்தா, பஸ்சை தொட்டுப் பாருங்க' என, ஆக்ரோஷமாக மிரட்டினார்.

வெலவெலத்து போன, பா.ஜ.,வினர் பஸ்சை விடுவித்து, கலைந்து சென்றனர். இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின. கேரள அரசு பஸ்சை காப்பாற்றிய, எஸ்.ஐ., மோகன் அய்யரை, கேரள அரசுப் போக்குவரத்துக் கழக எம்.டி., டோமின் ஜெ தச்சங்கரி போனில் பாராட்டி, 1,000 ரூபாய் ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்குவதாக கூறினார்.

எஸ்.ஐ., மோகன் அய்யர்கூறுகையில், ''பல மூத்த அதிகாரிகள், இதை விட துணிச்சலான செயல் களை செய்துள்ளனர். ''இது என் கடமை. வீடியோவை பதிவு செய்தது யார் என தெரியாது. இது போன்ற நிலைமையை சமாளிக்க, அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதே சிறந்த வழி. இதற்காக, வேறு இடத்துக்கு மாறுதல் செய்யப்பட்டாலும் கவலை இல்லை,'' என்றார்.மோகன் அய்யர், 2011ல், எஸ்.ஐ., பணியில் சேர்ந்தார். இதுவரை, எட்டு முறை பணியிட மாறுதலுக்கு ஆளானவர்.

Advertisement


வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivakumar - Qin Huang Dao,சீனா
12-ஜன-201916:34:07 IST Report Abuse
sivakumar 2011 முதல் 2018 வரை 7 ஆண்டுகள், 8 பணியிட மாற்றங்கள் . நேர்ம்மையான அதிகாரி போல் தெரிகிறது . பிழைக்க தெரியாத மனுஷன்
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
12-ஜன-201912:09:06 IST Report Abuse
bal அது பாஜக ஆட்கள் என்று எப்படி தெரியும்...சும்மானாச்சுக்கும்.
Rate this:
Share this comment
Cancel
kandasamy sundaresan - bangalore ,இந்தியா
11-ஜன-201923:58:26 IST Report Abuse
kandasamy sundaresan அப்படி போடு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X