சபரிமலைக்கு கள்ளப் பயணம் சென்ற பெண்களின் பேட்டி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சபரிமலைக்கு கள்ளப் பயணம் சென்ற பெண்களின் பேட்டி

Updated : ஜன 07, 2019 | Added : ஜன 06, 2019 | கருத்துகள் (93)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சபரிமலை, பெண்கள், கேரள அரசு, கம்யூனிஸ்ட், என்டி டிவி

திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு கள்ளத்தனமாக சென்ற 2 பெண்கள், அது தொடர்பாக என்டி டிவி.,க்கு பேட்டி அளித்துள்ளனர்.

ஆங்கில செய்தி சேனலான என்டி டிவி பொதுவாக இடதுசாரி கொள்கைகள் மற்றும் மோடி எதிர்ப்புகளுக்கு ஆதரவான தகவல்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கள்ளத்தனமாக சபரிமலை கோயிலுக்கு சென்ற 2 பெண்களிடம் பேட்டி வாங்கி, அதனை ஒளிபரப்பி வருகிறது.
சபரிமலைக்கு எரிபொருள் ஏற்றி சென்ற டேங்கர் லாரியில், டிரைவர் இருக்கைக்கு அருகே மறைந்தபடி பிந்து, கனக துர்கா என்ற 40 வயதுடைய பெண்களை ஏற்றி கேரள அரசே அனுப்பி வைத்துள்ளது. அங்கிருந்து சீருடை அணியாத போலீசார், பக்தர்கள் யாரும் கவனிக்காத சமயத்தில் மாற்று பாதை வழியாக அப்பெண்களை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் என்டி டிவி.,க்கு அளித்த பேட்டியில், எங்கள் உயிருக்கு இப்போதும் ஆபத்து உள்ளது என தெரியும். ஆனாலும் கோயிலுக்கு செல்ல விரும்பினோம். பாலின சமநிலை மற்றும் உரிமையை காட்டுவதற்காகவே சென்றோம்.

எங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். இதை சிலர் அரசியலாக்க நினைக்கிறார்கள். நாங்கள் சபரிமலை செல்வதற்கு எங்கள் வீட்டினரே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கேரள கம்யூனிஸ்ட் அரசு தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து எங்களை அழைத்து சென்றனர் என தெரிவித்துள்ளனர்.



கம்யூனிஸ்டுகளே காரணம்

கம்யூனிஸ்டுகளுக்கு எப்போதுமே கடவுள் நம்பிக்கை கிடையாது. சபரிமலைக்கு கள்ளத்தனமாக சென்ற வந்த 2 பெண்களும் இடதுசாரி கொள்கை உடையவர்கள். வெறும் வெற்று விளம்பரத்திற்காகவும், தாங்கள் தான் முதலில் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்ற பிடிவாதத்தினாலுமே இவர்கள் சபரிமலைக்கு சென்றுள்ளனர் என அய்யப்ப பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - chennai,இந்தியா
12-ஜன-201907:24:23 IST Report Abuse
oce சிவனுக்கு தன் கண்ணை பிடுங்கி வைத்தவன் கண்ணப்பன் சிவ பக்தனா. பினராயின் பக்தி ஐயப்பன் மீது செலுத்தும் கண்ணப்பன் பக்தி போன்றது.
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
12-ஜன-201907:19:08 IST Report Abuse
oce இவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஐயப்பன் கோயில் தந்திரிகளை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
12-ஜன-201907:17:17 IST Report Abuse
oce பக்திக்கு வெளி வேஷம் தேவை இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X