தவறான தகவல் தரும் ராகுல் பதவி விலக தயாரா? ஆதாரத்துடன் நிர்மலா பதிலடி| Dinamalar

தவறான தகவல் தரும் ராகுல் பதவி விலக தயாரா? ஆதாரத்துடன் நிர்மலா பதிலடி

Updated : ஜன 07, 2019 | Added : ஜன 06, 2019 | கருத்துகள் (135+ 89)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
BJP,Congress,Nirmala,Nirmala Sitharaman,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,நிர்மலா,நிர்மலா சீதாராமன்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி : காங்., தலைவர் ராகுல் கருத்து தெரிவிப்பதற்கு முன் ஏ,பி,சியிலிருந்து முழு ஆவணத்தையும் வாசிக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் நாட்டிற்கு தவறான தகவலை தரும் ராகுல் தலைமை பொறுப்பில் விலக தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர்.

எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஆர்டர்கள் தந்ததாக பார்லி.,யில் பொய் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதுகுறித்த ஆவணங்களை நாளை பார்லியில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்., தலைவர் ராகுல் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.


தவறாக வழிகாட்டும் தலைவர்ராகுலின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா ஆதாரத்துடன் பதிலடி தந்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: ராகுல் ஏ,பி,சியிலிருந்து வாசிக்க துவங்க வேண்டும். ராகுலை போல் பொதுமக்களை தவறாக வழிநடத்துபவர்கள், வாசிக்க தொடங்கும் முன்பே ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டுவார்கள்.

காங்., தலைவராக இருந்து கொண்டு பொய் தகவல்களை பரப்புவதும், மக்களை தவறாக வழிநடத்துவதும் பெரும் அவமானம். இதற்காக பார்லி.,யில் மன்னிப்பு கேட்டுவிட்டு ராகுல் பதவி விலக தயாரா? இவ்வாறு அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் எச்.ஏ.எல்லுக்கு எந்த தொகைக்கு கையெழுத்திடப்பட்டது, இன்னும் எத்தனை ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்பதையும் அவர் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். இது லோக்சபா ஆவணத்தின் படி என்றும் அவர் கூறியுள்ளார்.


ஆதாரத்துடன் விளக்கிய நிர்மலா:


Advertisement
வாசகர் கருத்து (135+ 89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Muthukrishnan - COIMBATORE,இந்தியா
12-ஜன-201907:58:27 IST Report Abuse
Narayanan Muthukrishnan China is a great threat for India. China is supplying Arms to Pakistan also.
Rate this:
Share this comment
Cancel
Kumaran - West Bengal,இந்தியா
08-ஜன-201911:03:16 IST Report Abuse
Kumaran பாப்புவெல்லாம் ஒரு ஆளு, இவன் இந்தியர்களை மடையர்களாக நினைக்கிறான். எல்லா ஊடகத்தையும் இவன் வசம் வைத்துக்கொண்டு மக்களை முட்டாள்களாக்கிக்கிட்டு இருக்கான். நமது ஆயுத ரகசியங்களை சீனாவுக்கு விற்றுவிட்டான், அதற்காகத்தான் இப்படி புளிக்கிகிட்டு இருக்கான்.
Rate this:
Share this comment
Cancel
Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
07-ஜன-201918:07:50 IST Report Abuse
Rahim Gani பேரு வச்சியே சோறு வச்சியா என்ற கதைதான் நிம்மியம்மா கதை , ஒரு ரூபாய் கூட எங்களுக்கு தரவில்லை என்று HAL நிறுவனம் பாஜக ஆட்சியாளர்கள் மூஞ்சியில் கரியை பூசிவிட்டது. 27 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தை கொடுத்து விட்டு ,ஒரு லட்சம் கோடி கு ஒப்பந்தம் கொடுத்துள்ளோம் என பொய்யய் சொன்னது நீங்கள் ,ராகுல் அவர்கள் அதிலும் கிடுக்கி பிடி போட்டு எங்கே ஆதாரத்தை காட்டுங்கள் என கேட்ட பின்பு ,27 ஆயிரம்கோடி கு கொடுத்தாயிற்று மீதி 73 ஆயிரம் கோடிக்கு பேச்சு வார்த்தை நடப்பதாக மழுப்புவது மகா பிராடுத்தனம் அல்லவா ? பேசும் போதே கொடுத்தது கொடுக்கப்போவது என பிரித்து சொல்ல கூட தெரியாத என்ன ? பின்பு ஏன் HAL சம்பளம் கொடுக்க திணறுகிறது ? கடந்த நான்கு ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனமான HAL கு வெறும் 27 ஆயிரம் கோடி ஒப்பந்தம் அதிலும் ஒரு பைசா கூட நகரவில்லை ஆனால் தனியாரான அம்பானிக்கு ஒரே காண்டிராக்டில் பல ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் சபாஷ் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X