பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ரயிலில் ஊருக்கு செல்பவரா நீங்கள்?
20 நிமிடத்துக்கு முன் வர வேண்டும்

புதுடில்லி : விமான நிலையங்களில் பின்பற்றப்படும் நடைமுறையை போல், ரயில்வே ஸ்டேஷன்களிலும், 15 - 20 நிமிடங்களுக்கு முன், பயணியர் வந்து, பாதுகாப்பு சோதனை நடைமுறைகளை முடிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன் பின் வருவோர், ரயிலில் ஏற அனுமதிக்கப்பட மாட்டர்கள்.

ரயிலில்,ஊருக்கு செல்பவரா,நீங்கள்?,20 நிமிடத்துக்கு முன்,வர வேண்டும்


விமான பயணம் செல்வோர், தங்கள் விமானம் புறப்படுவதற்கு, ஒரு மணி நேரம் முன் வந்து, பாதுகாப்பு சோதனைகளை முடித்து விட வேண்டும். தாமதமாக வருவோர், விமான பயணத்தை இழக்க வேண்டி இருக்கும். இதை போன்ற நடைமுறையை, ரயில் பயணத்துக்கும் ஏற்ஸபடுத்த, ரயில்வே பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர், அருண் குமார், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நீண்ட துார ரயில் பயணம் செய்வோர், தங்கள் ரயில் புறப்படும் நேரத்துக்கு, 15 - 20 நிமிடங்கள் முன், ஸ்டேஷனுக்கு வந்து விட வேண்டும்.

தேவையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின், ரயில்களில் அமர அனுமதிக்கப்படுவர். அதற்கு பின், வருவோர், அந்த ரயில்களில் ஏற முடியாத வகையில், சம்பந்தப்பட்ட, 'பிளாட்பார்ம்'களுக்கான, வழி மூடப்படும். இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. உ.பி.,யில், பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் கும்பமேளாவுக்கு, ஏராளமானோர், ரயில்களில் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பிரயாக்ராஜ் ரயில்வே ஸ்டேஷனில், புதிய பாதுகாப்பு நடைமுறை அமலில் உள்ளது. கர்நாடகாவில், ஹூப்ளி ரயில்வே ஸ்டேஷனிலும், இந்த திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், 202 ரயில்வே ஸ்டேஷன்களிலும், புதிய பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ரயில் புறப்படும் நேரத்துக்கு, குறிப்பிட்ட நேரத்துக்கு முன், அதற்கான பிளாட்பாரத்துக்கு செல்லும் பாதைகளை மூடுவதற்கு, தக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 'இந்த திட்டம், புறநகர் ரயில் சேவைக்கு பொருந்தாது' என, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
07-ஜன-201922:12:09 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்அட விஞ்ஞான அறிவாளிகளே நீண்ட தூரம் செல்லும் ரயிலுகளில் மட்டும்..............முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளில் சோதனை இல்லை.......காரணம் அதில் யாரும் நீண்டதூரம் செல்லமாட்டார்கள்.........நீண்ட தூரம் சமார் 1000 கிமீக்கு மேல் இருக்கும்....

Rate this:
Rajathiraja - Coimbatore,இந்தியா
07-ஜன-201920:02:31 IST Report Abuse

Rajathirajaசாத்தியமில்லாதது

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஜன-201919:45:02 IST Report Abuse

Pugazh Vகுழப்பாச்சாரிகளின் அரசு.. ஹா ஹா ஹா ஹா..ஒரு எக்ஸ்பிரஸில் 4 அன்ரிஸர்வ்டு(4× 150) + 12 ஸ்லீப்பர் (12×72)4 ஏசி (50) = 1594 பயணிகள். ஒருத்தருக்கு அரை நிமிடம் என்றால் கூட 700 நிமிடம் வேண்டும். ஹா ஹா ஹா ஹா. பாஜக வாசகர்கள் ரெண்டு நாள் லீவ் போடுங்க.. அதான் பெட்டர் .

Rate this:
Raajaram Krishnamoorthy - Chennai,இந்தியா
07-ஜன-201923:01:10 IST Report Abuse

Raajaram Krishnamoorthyஒரே ஒருவர் 1594 பேரையும் சோதிப்பார் என்று நினைத்து விட்டீர் போலும் "பாஜக வாசகர்கள்" ஏன்? சோதனை பயணிகளுக்கன்றோ? ...

Rate this:
Gopi - Chennai,இந்தியா
08-ஜன-201918:08:50 IST Report Abuse

Gopiபுகழ், லீவு லாம் கொடுக்காதீங்க. உங்கள் வரவு முன்னரே இருந்தால் தான் உங்கள் பயணம் இனிதாகும். மவுன ராகம் படத்தில் வருவது போல ரயில் கிளம்பி பின்னர் ஓடி சென்றி அபாய சங்கிலி இழுப்பது போன்ற நினைவுகளோடே இருப்பதை விட்டு விடவேண்டும். குறைந்தது அரைமணிநேரம் முன்னர் வரவேண்டும், அதிக பட்சம் 2 மணிநேரம் முன்னர் வரை வர அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் நம்மவர்கள் சாயங்கால வண்டிக்கு காலையிலேயே பயனியர்களுக்கு வழங்கப்பட்ட இடங்களில் படுத்து உறங்கி பின்னர் சாவகாசமாக வண்டி இருக்கின்றனர். மெட்ரோ ரயில்களில் ஸ்டேஷன்களில் டிக்கெட் எடுத்தவுடன் இத்துணை நிமிடத்திற்குள் வண்டி ஏறி பிரயாணம் செய்ய துவங்க இருக்கவேண்டும் என்ற விதி உள்ளது. . புறநகர் டிக்கெட்டிலும் இதுபோன்று அச்சடிக்கப்பட்டிருக்கும். மெட்ரோ ஸ்டேஷனில் கொடுக்கப்பட்ட காலத்தை தாண்டி நீங்கள் அங்கு புழங்கினால் அபராதம் விதிக்கப்படும். இதை திடிரென்று தொலைதூர ரயில் நிலையங்களில் முறைப்படுத்தும் போது கண்டிப்பாக நடைமுறை சிக்கல் வரும். பொதுமக்களின் குறைகளை கேட்டு இதை சீர்செய்யவேண்டும். வேண்டுமெனில் அடுத்த தொடர் வண்டி ஏறவேண்டிய நபர்களுக்கு எவ்வாறு பிளாட்பாரத்தில் நுழைய முன்னுரிமை கொடுக்கலாம் அவர்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் வண்டி என்ற வழிவகை செய்யலாம் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் ...

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X