உளவுத்துறை, 'ரிப்போர்ட்'; அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அதிர்ச்சியில் அ.தி.மு.க.,

பா.ஜ., தவிர, மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், திருவாரூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், தள்ளி வைக்கப்படலாம் என, தெரிகிறது. இது தொடர்பான முடிவை, தேர்தல் கமிஷன் இன்று அறிவிக்கும் என, அரசியல் கட்சிகள் எதிர்பார்த்துள்ளன.

திருவாரூர்,இடைத்தேர்தல்,நடக்குமா?, A.D.M.K,ADMK,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்


முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் காலியான, திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு, 28ல், இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. தி.மு.க., சார்பில், கலைவாணன், தினகரனின், அ.ம.மு.க., சார்பில், காமராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., வேட்பாளர் யார் என்பது, இன்று அறிவிக்கப்படும் என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், 'கஜா புயல் தாக்குதலில், திருவாரூர் மாவட்டம், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை, மக்கள் இழந்துள்ளனர். 'எனவே, திருவாரூரில் இயல்பு நிலை திரும்பும் வரை, இடைத்தேர்தல் வேண்டாம்' என, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர், ராஜா, டில்லியில், தேர்தல் கமிஷனில் மனு அளித்தார்.



அந்த மனு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டது. பின், திருவாரூர் மாவட்ட கலெக்டர் வாயிலாக, அனைத்து கட்சி பிரமுகர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அந்த அறிக்கை, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, திருவாரூர் தேர்தலுக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றத்திலும், ராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். அவரைப் போல, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, பி.மாரிமுத்து, ரத்தினகுமார் ஆகியோரும், மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மூன்று மனுக்களும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதி, எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு முன், இன்று விசாரணைக்கு வருகின்றன.


திருவாரூரில் கலெக்டர் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளில், பா.ஜ.,வினர் தவிர, மற்ற கட்சிகளைசேர்ந்தவர்கள், 'தற்போது தேர்தல் வேண்டாம்' என, வலியுறுத்தி உள்ளனர். அதனால், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தாகியுள்ளது.

Advertisement



உளவுத்துறை, 'ரிப்போர்ட்'; அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட, திருவாரூர் தொகுதியில், ஆளுங்கட்சியினர் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க.,வினரை விட, நிவாரண பணிகளை மேற்கொள்வதில், தினகரனின், அ.ம.மு.க.,வினர் தீவிர அக்கறை காட்டியுள்ளனர். அப்போதே, திருவாரூர் தொகுதியில், தேர்தல் பணிகளை துவக்கி உள்ளனர். மேலும், ஆளுங்கட்சிக்கு இணையாக, பணத்தை செலவு செய்யவும் தயாராக உள்ளனர். மேலும், 'அ.ம.மு.க.,வுக்கு, தொகுதி மக்களிடம் ஆதரவு அதிகரித்துள்ளது; பா.ஜ., எதிர்ப்பு ஓட்டுகள் என்ற அடிப்படையில், கள்ளர் ஜாதியினர் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் பெரும்பாலான ஓட்டுகள், அக்கட்சிக்கு கிடைக்கும்' என, உளவுத்துறை அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yila - Nellai,இந்தியா
11-ஜன-201911:41:46 IST Report Abuse

yilaஅப்போ, பிஜேபி க்கு நிறுத்துறதுக்கு வேட்பாளர் கிடைக்காததால்தான் தேர்தல் நின்னுபோச்சுன்னு பேச்சு அடிபடுதே, அது?

Rate this:
skv - Bangalore,இந்தியா
09-ஜன-201920:21:16 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>எல்லாம் இழந்து அநியாயமான ஏழைகள் ஆக்கப்பட்ட மனிதர்களின் நிலைமை யோசிச்சானுகளா எவனாச்சும் ???????????????????எரியுறவீட்டுலே புடுங்கினது லாபம் என்று தினகரன் அண்ட் திமுக வெறியாயிருக்கானுக இதுதான் உண்மை சுடாலின் மட்டும்தான் குதிக்குறாரு மரராகஸ்ச்சிகளுக்கு நிசசயமா தெரியும் முகவின்மீது பாசம்னு வோட்டு விழும் திமுக வுக்கே என்று ப்ளீஸ் மக்களே வேண்டாம் இந்த தேர்தல் அருகே நகர்லே நடந்த அசிங்கம் காலே தான் அரங்கேறும்

Rate this:
Pandi - Katumandu,நேபாளம்
09-ஜன-201916:36:11 IST Report Abuse

PandiHaha here.. BAYANTHANKOOLINGALA

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X