சோதனை ஓட்டம் வெற்றி; 27ல், 'தேஜஸ்' ரயில் இயக்கம்? Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சோதனை ஓட்டம் வெற்றி;
27ல், 'தேஜஸ்' ரயில் இயக்கம்?

சென்னை : மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் இயங்கக் கூடிய, 'தேஜஸ்' ரயில் சோதனை ஓட்டம், வெற்றிகரமாக நடந்ததையடுத்து, வரும், 27ம் தேதி, முறைப்படி இயக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

சோதனை ஓட்டம்,வெற்றி,தேஜஸ்,ரயில் இயக்கம்?


சென்னை, எழும்பூர் - மதுரை இடையே, அதி நவீன, தேஜஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலுக்காக, ஐ.சி.எப்., பில், தயாரிக்கப்பட்ட, ரயில் பெட்டிகள், ரயில்வே பணிமனையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ரயில் சேவை :


இந்த ரயில் சேவை, டிசம்பரில் இயக்கப்படும் என, தகவல் பரவியது; ஆனால், ரயில் சேவை

துவக்கப்படவில்லை. இந்நிலையில், தேஜஸ் ரயிலின் சோதனை ஓட்டம், நேற்று முன்தினம் நடந்தது.

சென்னை சென்ட்ரலில் இருந்து, காலை, 10:00 மணிக்கு புறப்பட்டு, பேசின் பிரிட்ஜ், கடற்கரை, எழும்பூர் ரயில் நிலையம் வழியாக பகல், 1:00 மணிக்கு, விழுப்புரம் சென்றடைந்தது. அங்கிருந்து, பகல், 1:45 மணிக்கு புறப்பட்டு, மாலை, 5:15 மணிக்கு, சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது.

இதுகுறித்து, ரயில் இயக்கப்பிரிவு அதிகாரி கூறியதாவது: தேஜஸ் ரயில், 130 கி.மீ., வேகத்தில் இயங்கக்கூடியது. தற்போதைய நிலையில், சென்னை - மதுரை ரயில் பாதையில், 110 கி.மீ., வேகம் வரை தான் இயக்க வேண்டும் என, கட்டுப்பாடு உள்ளது.

இதனால், இந்த ரயிலும், 110 கி.மீ., வேகத்தில் இயக்கி, சோதனை செய்யப் பட்டது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இவ்வாறு அதிகாரி கூறினார்.

Advertisement

பிரதமர் மோடி


சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, ரயில் சேவையை துவக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடி, 27ம் தேதி, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்காக, மதுரை வர உள்ளார்.

அன்று, 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவும், அத்துடன், தேஜஸ் ரயில் சேவை துவக்க விழாவையும் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
07-ஜன-201913:15:55 IST Report Abuse

T M S GOVINDARAJANதேஜஸ் என்றால் ஒளி என்று சங்கிமங்கிகளுக்கு தெரியாது தமிழக அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டு பெற வேண்டிய திட்டத்தை அவர்கள் தற்போது கொண்டு வந்தால் குறை சொல்லியே ஏதையும் கிடைக்காமல் செய்து விட்டு சீக்கிரம் போய் இலவசமாக கிடைக்கும் ஆயிரம் ரூபாய், பொங்கல் பரிசு பொருட்கள் வாங்கி ஆனந்தம் ஆக இரு .எல்லாம் உண்மையான தமிழனின் தலைவிதி.

Rate this:
07-ஜன-201922:05:46 IST Report Abuse

சிந்திக்கும் வடிவேலுஅய்யா ....தமிழ் நாட்டில் தமிழ் பெயர் வைக்க என்ன உங்களுக்கு அவ்வளவு கஷ்டம். இலவசம், ஜால்ரா, அடிமை தமிழர்கள் தவறுதான். அதற்காக தமிழில் பெயர் வைக்காமல் புரியாத வடமொழியில் பெயர் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஹிந்திக்கு நாம் எதிரி அல்ல. ஹிந்தி திணிப்புதான் தேவையில்லை. வீட்டில் ஆங்கிலம் பேசி நம்மை தமிழரை குறை சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

Rate this:
Manian - Chennai,இந்தியா
09-ஜன-201914:27:58 IST Report Abuse

Manianமொதல்லே வீட்டிலே, ஊரிலே எல்லோரும் தமிழிலே பேசுங்க....

Rate this:
tamil - coonoor,இந்தியா
07-ஜன-201908:37:37 IST Report Abuse

tamilமோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து பெயர்களும் இந்தியிலேயே சூட்டப்படுகிறது, அந்த காலத்தில் வைகை எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது, இதை மதுரை எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டினால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள், கேட்பதற்கு நாதி இல்லை,

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-ஜன-201908:36:04 IST Report Abuse

Srinivasan Kannaiyaதேஜஸ் என்றால் என்ன சாமி

Rate this:
Manian - Chennai,இந்தியா
09-ஜன-201914:23:35 IST Report Abuse

Manianஅட அவரு முகத்திலே ஒரு தேஜஸ் சித்ததே- ஒளி அதுதான்....

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X