பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் கருவி;
ஜன.,12க்குள் பொருத்த உத்தரவு

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும், 'பயோமெட்ரிக்' கருவி வினியோகிக்கப்பட்டு வருவதால், 12ம் தேதிக்குள், அவற்றை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு,பயோமெட்ரிக்,கருவி,உத்தரவு


அரசாணை:


வருகைப்பதிவு முறையை ஒழுங்குப்படுத்தும் வகையில், பள்ளி, கல்வித்துறை அலுவலகங்களில், பயோமெட்ரிக் கருவி பொருத்த, கடந்த அக்., மாதம் அரசாணை

வெளியிடப்பட்டது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள, 7,726 அரசு, அரசு உதவிபெறும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, ஆதாருடன் இணைந்த, தலா, இரண்டு பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்படவுள்ளன.

தமிழகத்தில், 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், 120 மாவட்ட கல்வி அலுவலகங்கள், 413 வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களுக்கும், தலா, ஒரு கருவி வீதம், 978 பயோமெட்ரிக் கருவிகள் வழங்கும் பணிகள் நடக்கின்றன.முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, இயக்குனர் ராமேஸ்வர முருகன், இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கூரியர் :


அதில் கூறியிருப்பதாவது: பயோமெட்ரிக் கருவி, 'கூரியர்' மூலம் பள்ளிகளுக்கு

Advertisement

அனுப்பப்படுகிறது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, 11ம் தேதிக்குள், வட்டார வாரியாக பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் பொருத்தி, இதுகுறித்த அறிக்கையை, வரும், 12ம் தேதிக்குள், முதன்மை கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
07-ஜன-201911:40:49 IST Report Abuse

pattikkaattaan இந்த கருவி மாணவர்களுக்கா, ஆசிரியர்களுக்கா ?.. படத்தை பார்த்தால் மாணவர்களுக்கு போல தெரிகிறது ... அப்ப வழக்கம்போல ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வரமாட்டார்கள் ... அட போங்கப்பு

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-ஜன-201908:35:14 IST Report Abuse

Srinivasan Kannaiyaஏதாவது பிள்ளைகள் கழட்டி கொண்டு போய் விட போகிறது

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
07-ஜன-201908:28:52 IST Report Abuse

Bhaskaranஆசிரியர்களும் தங்கள் வருகையை பதிவுசெய்யனும் எல்லா அரசு அலுவலகங்களிலும் இதனைப் பொருத்தணும் தாமதமாக வந்தால் ஊதியம் பிடிக்கப்படணும்

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X