புதுடில்லி : 2019 லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்து வெளியேற்றுவதற்காக காங்., உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி.
இந்நிலையில் கக்ரோலா பகுதியில் நடந்த விழா ஒன்றில் பேசிய கெஜ்ரிவால், மக்கள் யாரும் பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கக் கூடாது. அப்படி பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தால், எனது கட்சியை சேர்ந்த 7 எம்.பி.,க்களும் டில்லியின் வளர்ச்சிக்காக ஏதும் செய்ய மாட்டார்கள். காங்.,க்கு எதிராக ஓட்டளித்தால் அது மோடிக்கு பலமாக அமைந்து விடும். அதனால் உங்களின் ஓட்டுக்களை வீணடிக்காமல் அளித்து, ஆம்ஆத்மி எம்.பி.,க்கள் 7 பேரையும் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களை மிரட்டும் தொணியில் கெஜ்ரிவாலின் பேசிய உள்ளது டில்லி அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவரே மக்களை மிரட்டும் வகையில் பேசியவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த தகவலை காங் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் மறுத்துள்ளன.