'விளக்கமளிக்க வேண்டியது பிரதமர் அல்ல': நிர்மலா

Updated : ஜன 07, 2019 | Added : ஜன 07, 2019 | கருத்துகள் (53)
Share
Advertisement
BJP,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்

புதுடில்லி : 'எதிர் கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டியது துறை சார்ந்த அமைச்சர்களே தவிர பிரதமர் அல்ல' என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து சி.என்.என்., தொலைக்காட்சிக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி: மத்தியில் காங்., தலைமையிலான ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிற்கு எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு (ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமி.,) ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது. பா.ஜ., தலைமையிலான அரசு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிற்கு எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளோம்.


ராகுலுக்கு பயம்:

பார்லியில் எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் விளக்கம் அளிக்க தொடங்கினால், எதிர்கட்சிகள் உடனே 'பிரதமரை கூப்பிடுங்கள்' என அமளியில் ஈடுபடுகின்றனர். கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டியது துறை சார்ந்த அமைச்சர்களே தவிர பிரதமர் அல்ல. அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமளிக்க தயாராக உள்ளோம். ஆனால் எதிர்கட்சியினர் அதை கேட்க விரும்பவில்லை. உண்மையை கண்டு ராகுல் பயப்படுகிறார்.

பார்லி.,யில் தங்களுக்கு தரப்படும் பேப்பர்களில் எதிர்கட்சி எம்.பி.,க்கள் ராக்கெட் விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஊழலில் திளைத்தவர்கள் அடுத்தவர்கள் மீது குற்றங்களை சுமத்துவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு நிர்மலா தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
09-ஜன-201912:39:35 IST Report Abuse
ganapati sb உண்மை ஒரு துறை பற்றிய சந்தேகங்களுக்கு அந்த துறை பற்றிய அமைச்சர் விளக்கம் அளித்தால் போதுமானது எதிர்க்கட்சி அந்தஸ்தே இல்லாத கட்சிகள் எதற்கெடுத்தாலும் பிரதமரை அழைப்பது தனக்கு விளமபரம் தேடி கொள்ளவே
Rate this:
Cancel
Naga Rajan -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜன-201907:58:25 IST Report Abuse
Naga Rajan என்ன சொன்னாலும் அவன் குறை தான் பொய்தான் சொல்லப் போகிறான் அவர் பாட்டுக்கு அவர் வேலையை பார்த்துக் கொண்டே இருக்கிறார் அவர் இவனை மதிக்கவே இல்லை..
Rate this:
Cancel
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜன-201906:16:38 IST Report Abuse
Ivan He he theeka, teamuka, fraud pathiri groups ku bjp nu sonna tamil unarvu varum aana nirmala seetharaman na vera ethavathu kathai Sola vendi yathu. Unga polambal athigam agitey poguthu pa.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X