தாகா: வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக இன்று (ஜன.,07) பதவியேற்றார்.
அண்டை நாடான வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா(71) தலைமையில் இயங்கும், அவாமி லீக் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, தொடர்ந்து மூன்றாம் முறையாக, ஷேக் ஹசீனா, பிரதமராக பதவியேற்றார். வங்கதேச தலைநகர் தாகாவில் அவரது பதவியேற்பு விழா நடந்தது.
இவர் மீண்டும் வங்கதேச பிரதமர் ஆனது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக கருதப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement