பொது செய்தி

தமிழ்நாடு

செங்கோட்டையனிடம் விளையாட்டு துறை

Updated : ஜன 08, 2019 | Added : ஜன 07, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரிடமிருந்த, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, அமைச்சர், செங்கோட்டையனிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வெளியானதும், பாலகிருஷ்ணா ரெட்டி, முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். அதன்பின், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன்,
செங்கோட்டையன்,விளையாட்டு துறை

சென்னை: நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரிடமிருந்த, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, அமைச்சர், செங்கோட்டையனிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வெளியானதும், பாலகிருஷ்ணா ரெட்டி, முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். அதன்பின், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் மற்றும் மூத்த அமைச்சர்கள், முதல்வர் வீட்டிற்கு சென்றனர். அங்கு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

'குற்ற வழக்குகளில், இரண்டு ஆண்டுகளுக்கு மேல், சிறை தண்டனை பெற்றால், அவரின் பதவி தானாக பறிபோய் விடும்' என, அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ண ரெட்டி, தன் அமைச்சர் பதவியை, ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதம், கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாலகிருஷ்ண ரெட்டியிடமிருந்த, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கி, கவர்னர் உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜன-201906:06:52 IST Report Abuse
kulandhai Kannan Sengottaiyan is the right choice
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜன-201922:40:47 IST Report Abuse
Tamilan இது ஒரு துறை. அதற்க்கு பொறுப்பேற்க ஒரு ஆளோ அமைச்சரோ தேவையா ?
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜன-201922:40:14 IST Report Abuse
Tamilan இது ஒரு துறை. அதற்க்கு பொறுப்பேற்க ஒரு ஆளோ அமைச்சரோ தேவையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X