சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழக்கடை ஊழியரிடம் ரூ.3.80 லட்சம் கொள்ளை

Added : ஜன 07, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் பைபாசில் ,பழக்கடை ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 3.80 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் மூவரை, போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், மோ.வன்னஞ்சூரைச் சேர்ந்தவர் சிதம்பரம்,33. கள்ளக்குறிச்சியில் பழமண்டியில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம், உளுந்துார்பேட்டை, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பழக்கடைகளில் வசூல் செய்த, 3.80 லட்சத்துடன், பைக்கில் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டார்.இரவு, 10:00 மணி அளவில், தியாகதுருகம் பைபாசில் மலையம்மன் கோவில் அருகே வந்தபோது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், சிதம்பரத்தை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, 3.80 லட்ம் ரூபாய் பணம், மொபைல் போன் மற்றும் பைக் சாவியை பறித்து தப்பிச் சென்றனர்.தகவலறிந்த தியாகதுருகம் போலீசார், நேரில் விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, கொள்ளையர் மூவரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X