சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Added : ஜன 07, 2019 | கருத்துகள் (18)
Advertisement
 கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

விருத்தாசலம்: ஏ.சித்துார் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் 93 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கக் கோரி, விருத்தாசலத்தில் கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேப்பூர் அடுத்த ஏ.சித்துார் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு 2016 - 17 மற்றும் 17 - 18ம் ஆண்டுகளுக்கான மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரைய தொகையை ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெற்றுத் தர வேண்டும். 23 மாதங்களாகியும் 1966 கரும்பு கட்டுப்பாடு சட்டத்தின் படி, கரும்பு வழங்கிய 14 நாட்களுக்குள் வழங்கவில்லை. எனவே, அந்த தொகைக்கு 15 சதவீத வட்டி வழங்க வேண்டும். 5 ஆண்டுகளாகியும் அரசு மற்றும் ஆலை நிர்வாகம் அறிவித்துள்ள கரும்பு பாக்கி தொகை 93 கோடியே 46 லட்சத்து 63 ஆயிரத்து 875 ரூபாயை உடன் வழங்க வேண்டும்.விவசாயிகளை ஏமாற்றி ஆலை நிர்வாகம் 40 கோடி ரூபாய் முறைகேடாக கடன் பெற்று, நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் வந்துள்ளதால், விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், பாலக்கரை அம்மா உணவகம் முன் நேற்று காலை 10:30 மணியளவில், போராட்டம் துவங்கியது. மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமை தாங்கினார். மாநில செயலர் சக்திவேல், நிர்வாகிகள் அண்ணாதுரை, வேல்முருகன், கவியரசன், பாலகிருஷ்ணன், பன்னீர், ராஜா உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது, ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகையை வழங்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்.எத்தனை நாட்களானாலும், இங்கேயே காத்திருப்போம் என விவசாயிகள் தெரிவித்து இரவும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
05-மார்-201913:33:53 IST Report Abuse
Ramshanmugam Iyappan சிலர் அரசாங்கம் பணம் தரவேண்டும் என கருத்தும், குறையும் கூறியுள்ளனர், இது தவறு, ஆரூரான் சர்க்கரை ஆலை தனியாருக்கு சொந்தமானது, தனியார் கொடுக்க வேண்டிய பண பாக்கியை எப்படி அரசாங்கம் கொடுக்கும்?..அரசாங்கம் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை நிர்பந்தித்து நிலுவை தொகையை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய உத்தரவிடவேண்டும். விவசாயிகளின் நெடுநாள் கோரிக்கையை இழப்பீட்டுடன் வழங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
25-பிப்-201911:47:55 IST Report Abuse
Needhiyin Pakkam Nil விவசாயிகளின் கரும்பை வாங்கி கொண்டு அவர்கள் பணம் 93 கோடியை திருப்பி கொடுக்க அரசிடம் பணம் இல்லையாம், ஆனால் குடும்ப அட்டைக்கு 2000 ருபாய் கொடுப்பதற்கு மட்டும் எங்கிருந்து பணம் வந்தது. சிந்திக்க தெரியாத மக்கள் இருக்கும் வரைக்கும் இந்த நாட்டில் ஏமாற்றுபவர்களுக்கு பொற்காலம் தான்............
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
02-மார்-201921:34:08 IST Report Abuse
Darmavanஅரசு ஏன் கரும்புக்கு பணம் தரவேண்டும்.அதை வாங்கிய கம்பெனியை கொடுக்க சொல்ல வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Chinniah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-பிப்-201918:54:12 IST Report Abuse
Selvaraj Chinniah போராடடம் எல்லாம் சரிதான். எங்கேயோ இடிக்குதே அதுதாங்க அய்யாக்கண்ணு?
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
01-மார்-201901:43:12 IST Report Abuse
Karthikஉங்களுக்கு எல்லாமே சந்தேகம் தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X