பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விருப்ப ஓய்வு பெற ஆர்வம் காட்டும் போலீசார்
பின்னணி என்ன?

மதுரை:தமிழக போலீஸ் துறையில் இருந்து உடல்நிலையை காரணம் காட்டி விருப்ப ஓய்வு பெற போலீசார் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தாண்டு மட்டும் 49 பேர் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், இந்தாண்டு இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விருப்ப ஓய்வு,ஆர்வம், போலீசார்




போலீஸ் பணியில் சேர்ந்து படிப்படியாக ஏட்டு, சிறப்பு எஸ்.ஐ., என போலீசார் பதவி உயர்வு பெற்று வருகின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் பெரும்பாலனோர் பணிச்சுமை, மனஅழுத்தம், நேரத்திற்கு நேரம் சாப்பிடாமை போன்ற பல்வேறு காரணங்களால் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இறந்தும்

போகின்றனர். கையில் இருக்கும் அனைத்து விடுமுறை சலுகைகளையும் எடுத்த பிறகும் உடல்நலத்தை காக்க முடியாததால் வேறு வழியின்றி விருப்ப ஓய்வை தேர்ந்தெடுக்கின்றனர்.


விருப்ப ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஒருவர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு, பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டேன். பணிச்சுமையால் ஏற்பட்ட டென்ஷன்தான் காரணம். தினமும் மன அழுத்தத்தால் 'பிபி' எகிறி பல பிரச்னைக்கு காரணமானது. இனியும் இந்த வேலையில் இருந்தால் பணியின்போதே இறந்துடுவேன் என குடும்பத்தினர் அஞ்சினர். அதனால் விருப்ப ஓய்வு பெற்று, அதில் கிடைத்த தொகையில் கடை ஒன்றை ஆரம்பித்து இப்போது எந்த டென்ஷனும் இல்லாமல் நடத்தி வருகிறேன், என்றார்.


விருப்ப ஓய்வுக்குவிண்ணப்பித்துள்ள எஸ்.ஐ., ஒருவர் கூறியதாவது: எனக்கு இன்னும் நாலரை ஆண்டு சர்வீஸ் உள்ளது. ஆனால் உடல்நிலை ஒத்துக்கொள்ளவில்லை. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என ஏகப்பட்ட பிரச்னை இருக்கிறது. இன்னும் இந்த வேலையில் தொடர்ந்தால் மனஅழுத்தம் அதிகமாகி மாரடைப்பு வந்துவிடும்

Advertisement

என பயமாக உள்ளது. குடும்பத்தையும் பார்க்க வேண்டியிருப்பதால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளேன், என்றார்.


கடந்தாண்டு உடல்நலத்தை காரணம்காட்டி தமிழக அளவில் 49 பேர் விருப்ப ஓய்வு பெற்றனர். இந்தாண்டு லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணி இருப்பதால், அதற்குள் விருப்ப ஓய்வு பெற்றவிட வேண்டும் என சில போலீசார் ஆர்வம் காட்டி விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் கடந்தாண்டைவிட இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-ஜன-201922:22:45 IST Report Abuse

Natarajan Ramanathanகைநிறைய நல்ல சம்பளம் வாங்கினாலும் லஞ்சமும் ஓசியிலேயே சகலமும் பெறுவதால் அனைவரின் வயிற்றெரிச்சல் இவர்களை நிம்மதியாக வாழவே விடாது. எனது நண்பர் சாலையோர தள்ளுவண்டியில் பஜ்ஜி போண்டா கடை நடத்துகிறார். ஒருநாள் வருமானமே சுமார் ஆயிரம் இருக்கும். ஆனால் தினமும் சட்டம் ஒழுங்கு, டிராபிக் இருவருக்கும் தலா நூறு கொடுக்க வேண்டும். மேலும் இலவசமாகவே அனைத்தும் கிடைப்பதால் அவர்கள் திண்பதும் மிகமிக அதிகம்.

Rate this:
rajan. - kerala,இந்தியா
08-ஜன-201921:32:48 IST Report Abuse

rajan.  அரசு வேலை என்பது ஒரு காலத்தில் மிகவும் மதிப்பு மிக்க நேர்மை சார்ந்த பப்ளிக் சரவென்ட் எனும் தர்மம் சார்ந்ததாக இருந்தது. ஆனால் இன்றய திராவிட ஆட்சியாளர்களால் அந்த தொழில் தர்மம் சீரழிக்க பட்டு அரசு வேலை என்றால் சீ என்றாகி விட்டதை தான் இது காட்டுகிறது. மேலதிகாரிகளுக்கு ஊழல் சேவை பண்ணினால் தான் பதவி உயர்வு என்றாகி விட்டது. எல்லாம் அந்த அரசியல்வாதிகள் வடை சுட்ட கதை தான்.

Rate this:
rajan. - kerala,இந்தியா
08-ஜன-201921:28:13 IST Report Abuse

rajan.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X