சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டல் ஊழியரிடம் ரூ.8 லட்சம் ஏமாற்றிய உரிமையாளர் கைது

Added : ஜன 07, 2019
Advertisement

கடலுார்: கடலுாரில் ஓட்டல் ஊழியரிடம், வீடு வாங்கித் தருவதாக கூறி 8 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிய ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.கடலுார், கோண்டூர், மூப்பனார் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 42; இவர் கடலுார் - நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள கிளாசிக் என்ற ஓட்டல் உரிமையாளர். இவரது ஓட்டலில் பரியாணி மாஸ்டராக பணிபுரியும் புதுச்சேரி மாநிலம், குருவிநத்தம், மாஞ்சோலை தெருவைச் சேர்ந்த முருகன், 37; தனக்கு வீடு வாங்கிக் கொடுக்கும்படி, கார்த்திகேயனிடம் தவணை முறையில் 8 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், கார்த்திகேயன் வீடு வாங்கிக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.இதனால் அச்சமடைந்த முருகன் நேற்று கார்த்திகேயனிடம், கொடுத்த பணத்தையாவது திருப்பித் தரும்படி கேட்டார். ஆத்திரமடைந்த கார்த்திகேயன், முருகனை ஆபாசமாக திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இது குறித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திகேயனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X