சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊர்க்காவல் படை பெண் வீரர் மரணத்தில் கணவர் மீது புகார்

Added : ஜன 07, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சேலம்: ஊர்க்காவல் படை பெண் வீரர், துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு, துாக்கில் தொங்க விடப்பட்டுள்ளதாக புகார் எழுந்து உள்ளது.சேலம் மாவட்டம், தலைவாசல், காமக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவன் கவியரசு, 30; ஊர்க்காவல் படை முன்னாள் வீரர். தற்போது, பால் வாகனம் ஓட்டி வருகிறான்.இவனது மனைவி செல்வமீனா, 26; ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன், காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு, 6 வயதில் மகள் உள்ளார்.ஆண் வாரிசு இல்லையே என, கவியரசு, போதையில் மனைவியை திட்டுவதும், அடிப்பதுமாக இருந்துள்ளான். இரண்டு மாதங்களுக்கு முன், செல்வமீனா கர்ப்பமடைந்தார். எதிர்பாராத விதமாக, இரண்டு நாட்களுக்கு முன், கர்ப்பம் கலைந்து விட்டது. இது குறித்து, நேற்று முன்தினம் இரவு, தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, செல்வமீனாவை, கவியரசு தாக்கியுள்ளான். சிறிது நேரத்தில், செல்வமீனா துாக்கில் சடலமாக தொங்கினார்.'செல்வமீனாவின் மரணம் தற்கொலை இல்லை; கொலை செய்யப்பட்டு, துாக்கில் தொங்க விடப்பட்டுள்ளார்' என, அவரது, 75 வயது பாட்டி, தலைவாசல் போலீசில் நேற்று புகார் அளித்தார். கவியரசு மற்றும் அவனது உறவினர்களிடம் விசாரித்து வரும் போலீசார், பிரேத பரிசோதனை முடிவை பொறுத்து, நடவடிக்கை எடுக்க முடிவு செய்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-ஜன-201905:32:12 IST Report Abuse
Bhaskaran இவன் காதலித்து கல்யாணம் வேறு செய்துள்ளான் அயோக்கியன் ,மேலும் ஆண்வாரிசு பெறுவது பெண்ணிடமாவுள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X