மதுரை, 'எய்ம்ஸ்' குறித்து பார்லி.,யில் அரசு தகவல் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மதுரை, 'எய்ம்ஸ்' குறித்து
பார்லி.,யில் அரசு தகவல்

'மதுரையில் அமையவுள்ள, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில், 750 படுக்கைகள், 11 ஸ்பெஷாலிட்டி மற்றும் 15 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ பிரிவு வசதிகள் இருக்கும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

AIIMS,எய்ம்ஸ்,எய்ம்ஸ் மருத்துவமனை,மதுரை,பார்லி.,அரசு தகவல்


லோக்சபாவில் நேற்று, அ.தி.மு.க., - எம்.பி. வேணுகோபால், எழுப்பியிருந்த கேள்விக்கு, மத்திய அமைச்சர் அஸ்வின் குமார் சவுபே, அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதில் இருந்து, 45 மாதங்கள் காலக் கெடுவுக்குள், மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

இதற்காக, 1,264 கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில், 750 படுக்கைகள், 11 ஸ்பெஷாலிட்டி மற்றும் 15 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ பிரிவு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான படுக்கைகளும் அமைக்கப்படும். இதுதவிர, 100 எம்.பி.பி.எஸ்., மருத்துவ இடங்களும், 60 பி.எஸ்.சி., நர்சிங் இடங்களும் கூடிய மருத்துவக் கல்லுாரியும் அமையும்.

ஆயுஷ்பிளாக், ஆடிட்டோரியம், இரவில் தங்குமிடம், விருந்தினர் இல்லம், விடுதிகள், குடியிருப்பு வசதிகள் என, அனைத்து அம்சங்களும் இடம்பெறும். இந்த எய்ம்ஸ்

Advertisement

மருத்துவமனைக்கு என்றே, இயக்குனர் அந்தஸ்துடன் கூடிய பதவி உருவாக்கப்படுவதற்கும், ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை, முழுவீச்சில் இயங்கத் துவங்கினால், தினமும், 1,500 புற நோயாளிகளும், மாதம் தோறும், 1,000 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறும் நிலை உருவாகும். இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
11-ஜன-201918:32:26 IST Report Abuse

ரத்தினம்நேர்மறையா சிந்திப்பவர்களே இல்லையோ . எல்லாம் த்ராவிஷங்கள் தமிழகத்தை கொள்ளை அடித்து ஆண்டதை காலம் காலமாக கண்டதால் வந்த வினை.

Rate this:
08-ஜன-201912:01:30 IST Report Abuse

ஆப்புஇதே மாதிரிதான் பட்டி தொட்டியெல்லாம் IIT, IIM நு ஆரமிச்சு இப்போ அதுக்கெல்லாம் மதிப்பே இல்லாம போயிடுச்சு. எய்ம்ஸும் ஊரு ஊரா அரம்பிச்சு கடைசியில் சர்க்கார் தர்ம ஆஸ்பத்திரி போல் சமூக நீதி தழைத்தோங்கும். இப்போ இருக்கிற கெவர்மெண்ட் ஆஸ்பத்திரிகளை தரம் உயர்த்தலாம்...ஆனா அதுலே துட்டு அடிக்க முடியாதே...

Rate this:
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
08-ஜன-201910:30:04 IST Report Abuse

T M S GOVINDARAJANஏம்பா எய்ம்ஸ் எப்போது வரும் என்று கூவுகிறீர்களே சுமார்4ஆண்டுகள் இடம் தேடி வந்த தமிழக அரசை கேளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த அரசு.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X