பதிவு செய்த நாள் :
'நிர்மலா வெளியிட்ட பட்டியல் பொய்'
காங்., தலைவர் ராகுல் மீண்டும் பாய்ச்சல்

புதுடில்லி : ''ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள் கொடுத்துள்ளதாக, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்டியல் முழுவதும் பொய்,'' என, காங்கிரஸ் தலைவர், ராகுல் கூறியுள்ளார்.

Nirmala,Nirmala Sitharaman,Rahul,Rahul Gandhi, காங்கிரஸ்,நிர்மலா,நிர்மலா சீதாராமன்,ராகுல்,ராகுல் காந்தி


ஐரோப்பிய நாடான, பிரான்சிடம் இருந்து, ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் மோசடி நடந்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல், தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இந்தப் பிரச்னை குறித்து, பார்லி.,யிலும், வெளியிலும், மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

'ரபேல் போர் விமானம் தயாரிப்பது தொடர்பாக, உள்நாட்டு ஒப்பந்தத்தை, பொதுத் துறை நிறுவனமான, எச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கவில்லை. 'அதற்கு பதிலாக, அனில் அம்பானியின், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது' என, ராகுல் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், சம்பளம் வழங்கவும், பிற செலவுகளுக்காகவும், எச்.ஏ.எல்., 1,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக, சமீபத்தில் செய்தி வெளியானது. இது தொடர்பாகவும், ராகுல் கேள்வி எழுப்பியிருந்தார். எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு, மத்திய அரசு ஒப்பந்தம் வழங்காதது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.

பட்டியல்:


பார்லி.,யில் இந்தப் பிரச்னை எழுந்தபோது, 'எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள் வழங்கப்பட்டுள்ளன' என, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். 'எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு பணிகள் வழங்கியதாக பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பட்டியலை வெளியிடுங்கள் அல்லது பதவி விலகுங்கள்' என, ராகுல் சவால் விடுத்திருந்தார்.

லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தின்போது, எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பணிகள் குறித்த பட்டியலை, நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அப்போது, அவர் கூறியதாவது: கடந்த, 2014 - 2018 காலத்தில், எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு, 26 ஆயிரத்து, 570 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, 73 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் அளிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த விவகாரத்தில், பார்லி.,யில் நான் கூறியது உண்மை தான். இந்த விவகாரத்தில், காங்கிரஸ் தேவையில்லாமல், முதலைக் கண்ணீர் வடிக்கிறது. பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஒப்பந்தங்கள்:


இதற்கு பதிலளித்து, பார்லிமென்ட் வளாகத்தில், நிருபர்களிடம், ராகுல் கூறியதாவது: எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு, 26 ஆயித்து, 570 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ஆய்வு நடக்கும் திட்டங்களை எல்லாம், எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு அளித்துள்ளதாக எப்படி கூற முடியும்... ராணுவ அமைச்சர், பார்லி.,யில் பொய்யான தகவலை அளித்துள்ளார்; இது நேரடியாக கூறப்பட்டுள்ள பொய்.

Advertisement



ரபேல் போர் விமானம் வாங்க, அதை தயாரிக்கும், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்துக்கு, ஒப்பந்தம் செய்த உடனேயே, ஒரு விமானம் கூட கைக்கு வராத நிலையில், 20 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்துள்ளது.

நிதி நெருக்கடி:


ஆனால், எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு, 15 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை தர முடியவில்லை. இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி மற்றும் ராணுவ அமைச்சருக்கு என் கேள்வி என்னவெனில், ரபேல் ஒப்பந்தம் செய்யும்போது, அதற்கு, ராணுவ அமைச்சகம் அல்லது விமானப் படை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனரா என்பது தான். இதற்கு அவர்கள் பதில்அளிக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, சமூகதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராகுல் கூறியுள்ள தாவது: சம்பளம் கொடுக்க முடியாமல், எச்.ஏ.எல்., நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது ஆச்சரியமான விஷயமல்ல. அது தான், அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்டதே. அம்பானிக்கு தற்போது, திறமையான ஆட்கள் தேவை. சம்பளம் கிடைக்காத, எச்.ஏ.எல்., இன்ஜினியர்கள், அம்பானியின் நிறுவனத்துக்கு செல்வதற்கு வற்புறுத்தப்படுவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - chennai,இந்தியா
13-ஜன-201910:57:02 IST Report Abuse

oceமருத்துவ மனை நோயாளி எப்படி இருப்பார் என்பதை அறிய நீ முதலில் அங்கு சென்று அட்மிட்டாகி பார். அப்போது தெரியும். நீ என்ன அமிர்தத்தில் உருவானாயா.

Rate this:
oce - chennai,இந்தியா
13-ஜன-201910:51:57 IST Report Abuse

oceநிர்மலா அம்மையார் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறார் இதில் கவன ஈர்ப்பு தீர்மானம் உரிமை மீறல் என ஏதும் வராது.

Rate this:
oce - chennai,இந்தியா
13-ஜன-201910:49:05 IST Report Abuse

oceமோடி இல்லாத இந்தியா வரவேண்டுமென்று சொல்லிவிட்டு அதென்னடா கூட இன்ஷா அல்லாஹ்.

Rate this:
மேலும் 127 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X