பதிவு செய்த நாள் :
'மன்னிப்பு கடிதம் எழுதி தர முடியாது'
அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பிடிவாதம்

'மன்னிப்பு கடிதம் எழுதித் தர வேண்டுமென்ற அவசியம் இல்லை. மேகதாது பிரச்னைக்காக உரிமைக்குரல் எழுப்பினோமே தவிர, வேறெந்த உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை' என, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் உறுதியாக உள்ளனர். இதனால், அவர்களது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கையில் முட்டுக்கட்டை தொடர்கிறது.

மன்னிப்பு கடிதம்,தர முடியாது,அ.தி.மு.க.,எம்.பி.க்கள் ,பிடிவாதம்


காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து, சுற்றுச் சூழல் ஆய்வு நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்லி., குளிர்கால கூட்டத் தொடரில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதுகுறித்து எந்தவொரு பதிலும் தர, அரசு தரப்பு தயாராக இல்லாத நிலையில், அதிருப்தியின் உச்சகட்டமாக, லோக்சபாவில், அ.தி.மு.க., -எம்.பி.,க்கள் சிலர், ஆவேசத்துடன் அமளியில் இறங்கினர்.

சில, எம்.பி.,க்கள் சபைக்குள், காகிதங்களை கிழித்து, வீசியெறிந்து ரகளையில் இறங்கியதும், மேஜை மீது ஏறி கூச்சலிட முயன்றதையும் அடுத்து, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கோபமடைந்தார். அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், 31 பேரை, சமீபத்தில், 'சஸ்பெண்ட்' செய்தார். இந்த நடவடிக்கையை ஏற்க முடியாதென்றும், அவர்களை மன்னித்து, சபைக்குள் வர அனுமதிக்கும்படியும், துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் வைத்தார்.

இந்நிலையில், நேற்று லோக்சபா கூடியதும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், வேணுகோபால், கே.என்.ராமச்சந்திரன், கோபால் ஆகியோர், மேகதாது பிரச்னைக்காக குரல் கொடுத்தபடி, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதையடுத்து, இவர்கள் மூன்று பேரையும், சபாநாயகர், 'சஸ்பெண்ட்' செய்தார்.

பின், சபையில், தம்பிதுரை பேசியதாவது: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த அனுமதி வழங்கி தவறு செய்தது, மத்திய அரசு தான். தமிழக, எம்.பி.,க்கள், தங்கள் உரிமைக்காகவே குரல் எழுப்பினர். மத்திய அரசு உரிய முறையில் தலையிட்டு இருந்தால், இவர்கள் அமளியில் இறங்கியிருக்கவே மாட்டார்கள். தமிழக நலன் சார்ந்த உரிமைக்காக குரல் கொடுக்கும் இவர்களுக்கு, வேறெந்த உள்நோக்கமும் இல்லை. எனவே, 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை ரத்து செய்து, மீண்டும் சபைக்குள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்த, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ''இது பற்றி, உரிய முறையில் பேசி தீர்க்கலாம்,'' எனக் கூறி, அலுவல்களை தொடர்ந்தார்.

இது குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும், தாங்கள் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டு தனித்தனியே கடிதம் எழுதி தர வேண்டுமென்று சபாநாயகர் கேட்கிறார். இதை ஏற்க முடியாது. வருத்தம் தெரிவிப்பது வேறு. கடிதம் தருவது வேறு. செய்த செயல் தவறு என்றால், மேகதாது உரிமைக்குரலை தவறு என, ஒப்புக் கொள்வது போலாகிவிடும்.

சபைக்குள் ஒழுங்கற்ற வகையில் செயல்பட்டதற்கு வேண்டுமானால் வருத்தம் தெரிவிக்கலாமே தவிர, கடிதம் தருவதெல்லாம் அவசியமில்லை என, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த பிரச்னை குறித்து, இருதரப்பும் உரிய முறையில பேசி, சுமுக தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement


'நான் ஆணையிட்டால்!' பார்லி.,யில் எம்.ஜி.ஆர்.,

மன்னிப்பு கடிதம்,தர முடியாது,அ.தி.மு.க.,எம்.பி.க்கள் ,பிடிவாதம்

லோக்சபா நேற்று காலை கூடியதும், தெலுங்குதேசம், எம்.பி., சிவபிரசாத், முன்வரிசை இருக்கையில், ஒரு ஸ்பீக்கரை வைத்தார். தமிழக முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., போல வேடமணிந்து வந்திருந்த அவர், எம்.ஜி.ஆரைப் போல கழுத்தில் துண்டு, கை சட்டைக்கு மேல், 'வாட்ச்' அணிந்திருந்தார். அவரது கையில், ஒரு சவுக்கும் இருந்தது. சபாநாயகர், அலுவல்களை துவங்கிய அடுத்த நிமிடமே, சிவபிரசாத்தும் ஸ்பீக்கரை ஆன் செய்தார். 'நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்... இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்' என, எங்கள் வீட்டு பிள்ளை திரைப்பட பாடல் ஒலித்தது. சபாநாயகர் இருக்கை முன் போய் நின்ற, சிவபிரசாத், தன் கைகளில் இருந்த சவுக்கை தன் மீதே அடித்தபடி, எம்.ஜி.ஆர்., போலவே நடனமாடினார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டும், சக, எம்.பி.,க்களை, 'சஸ்பெண்ட்' செய்ததை கண்டித்தும், அவர் பேசியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால், உடனடியாக சபை ஒத்தி வைக்கப்பட்டது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர வலியுறுத்தி, சிவபிரசாத், தினமும், பார்லிமென்ட் வளாகத்தில், வித்தியாசமான வேடமணிந்து, போராட்டம் நடத்தி வருகிறார்.


- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
08-ஜன-201914:13:19 IST Report Abuse

R chandarWhy Mps of admk give apologies letter they demand as per supreme court order only to show their voice against construction of megadhadhu dam , central government should act accordingly and be neutral to both side of the state on rivers pass through other states. Central rulers should understand that tamilnadu is also part of India and paying all taxes directed by central government and stands as second largest states in contributing in GST collection. If at all karnataka wants to build dam it should be at the cost and maintenance of central government and the water should be shared to tamilnadu on periodical basis to the tune of 205 TMC stipulated by supreme court for which all karnataka ,central government should sign the accord in consent with Tamilnadu.

Rate this:
Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
08-ஜன-201911:12:54 IST Report Abuse

Rahim Ganiஒரு மாநிலத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை சஸ்பெண்ட் செய்வதென்பது மிகவும் தவறு ,மக்களவை என்று பெயரை வைத்துக்கொண்டு மக்கள் பிரச்சினை பற்றி குரல் கொடுக்க கூடாதா ????

Rate this:
rajan. - kerala,இந்தியா
08-ஜன-201911:02:59 IST Report Abuse

rajan.  இவனுங்க என்னிக்கு தான் ஒழுங்கா இருந்திருக்கிறாங்க இனிமேலா ஒழுங்கா இருக்க போவுறானுங்க. அயோக்கியனுங்க கூடமாச்சே. எல்லாம் கூலிப்படை கூட்டம்.

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X