பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
விவசாய கடன் தள்ளுபடி
வங்கி துறையை பாதிக்கும்;
ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை

மும்பை : '' நாட்டின் அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்தால், அது வங்கித் துறையின் கடன் கலாசாரத்தில் எதிர்மறை பாதிப்பை உண்டாகும்,'' என, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் எச்சரித்துள்ளார்.

Governor,RBI,Reserve Bank,ஆளுநர்,கவர்னர்,ரிசர்வ் வங்கி,விவசாய கடன்,தள்ளுபடி,வங்கி துறை,பாதிக்கும்


அவர், நேற்று மும்பையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரதிநிதிகளை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசியதாவது: நம் அரசியல் சாசன சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கு, நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும் உரிமையை வழங்கியுள்ளது. ஆனால், ஒவ்வொரு மாநில அரசும், விவசாய கடன் தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கும் முன், அவற்றின் நிதியாதாரத்தை அவசியம் ஆராய வேண்டும். மாநில அரசுகள், கடன் தள்ளுபடி அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான நிதியை வங்கிகளுக்கு உடனடியாக ஒதுக்க முடியுமா என்பதை பரிசீலிக்க வேண்டும்.

கண்காணிப்பு:


அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டால், அது, கடன் கலாசாரம் மற்றும் கடன் வழங்குவோரின் எதிர்கால

நிலைப்பாட்டில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். ரிசர்வ் வங்கி, நாட்டின் பணப்புழக்க நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது. பணப்புழக்கத்தில் நெருக்கடி ஏற்பட இடம் கொடுக்க மாட்டோம். அவ்வாறு ஏற்பட்டால், உடனடியாக சரி செய்யப்படும். அதேசமயம், அளவிற்கு அதிகமான பணப்புழக்கச் சூழலையும் ரிசர்வ் வங்கி அனுமதிக்காது.

வங்கி சாரா நிதி நிறுவன பிரதிநிதிகளை, செவ்வாயன்று சந்திக்க உள்ளேன். அப்போது, அத்துறை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடி பிரச்னை குறித்து விவாதிக்கப்படும். ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு இடைக்கால, 'டிவிடெண்டு' வழங்க உள்ளதாக ஊடகங்கள்தான் கூறுகின்றன. அது போன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டால், தாமதமின்றி உடனடியாக முதலில் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்.

கடன் மறுசீரமைப்பு:


குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், 25 கோடி ரூபாய் வரையிலான வாராக் கடனுக்கு, ஒரு முறை தீர்வாக, கடன் மறுசீரமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, இத்துறையின் வளர்ச்சிக்கு உதவும். பொதுத் துறை வங்கிகளின் நிதிவளம் சீராக, ரிசர்வ் வங்கி முக்கியத்துவம் அளிக்கும். வங்கிகளின் வாராக் கடன் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வளர்ச்சி திட்டங்கள்:

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுகள், 1.47 லட்சம் கோடி ரூபாய்க்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளன. ஆனால், அதற்கான நிதியாதாரம் போதிய அளவிற்கு இல்லாததால், அம்மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


மத்திய அரசுக்கு ரூ.40,000 கோடி, 'டிவிடெண்டு'

ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் இடைக்கால, 'டிவிடெண்டு' வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டில், மத்திய அரசு, நிதிப் பற்றாக்குறை இலக்கை, 3.3 சதவீதமாக நிர்ணயித்து உள்ளது. இது, பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனையில் தாமதம், வரி வருவாய் குறைவு போன்றவற்றால், அதிகரிக்கும் என, தெரிகிறது. இதனால், 1 லட்சம் கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதை சமாளிக்க, ரிசர்வ் வங்கியின் டிவிடெண்டு ஓரளவு துணை புரியும்.


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜன-201922:24:34 IST Report Abuse

Partha Mannaiஎன்று இந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை மாறும்போது விவசாயிகள் வாழ்வாதாரம் மாறும்.

Rate this:
123 - Nellai,இந்தியா
08-ஜன-201920:32:46 IST Report Abuse

1233000 கோடிக்கு சிலை வச்சதெல்லாம் பொருளாதாரத்தை பாதிக்காதா?

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
08-ஜன-201917:44:56 IST Report Abuse

r.sundaramயாருக்கும் எதுவும் இலவசமாய் வராது. அதை புரிந்து கொள்ள வேண்டும். இன்று விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தால், நாளை இதே அரசு வீடு வரியை கூட்டும், வருமான வரியை கூட்டும். நீங்கள் வாங்கும் கடன் தள்ளுபடியை உங்கள் வேளையில் இருக்கும் உங்கள் மகன் அரசுக்கு கட்டப்போகிறார். இதுதான் உண்மையே தவிர வேறு ஒன்றும் இல்லை. இலவசம் என்பது இல்லை. இன்று நீங்கள் கட்டத்தை கடனை நாளை உங்கள் மகன் வேறு வழியில் செலுத்துவார்.

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X