பதிவு செய்த நாள் :
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு
பொதுப் பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு

புதுடில்லி : கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா, பார்லிமென்ட்டில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

பொருளாதாரத்தில்,பின்தங்கியோருக்கு,பொதுப் பிரிவில்,10 சதவீதம், இடஒதுக்கீடு


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அதில், பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பதவிக்காலம்

முடிவடைய உள்ளதால், விரைவில் லோக்சபாவுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்பில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு, 8 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருவாய், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம், சிறு நகர் பகுதிகளில், 1,000 சதுர அடிக்கு குறைவாக வீடு, நகராட்சிகளில், 900 சதுர அடிக்கு குறைவாக வீடு உள்ளோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு பெறுவதற்கு தகுதி பெறுகின்றனர்.

'அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோரையும், அந்தப் பிரிவில் சேர்க்க வேண்டும்' என, பல்வேறு தரப்பினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தில், மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் செய்தது; இது, முற்பட்ட பிரிவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Advertisement

சமீபத்தில், நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், இது எதிரொலித்தது. இதையடுத்து, முற்பட்ட பிரிவினருக்கு, இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான மசோதா பார்லியில் குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

ராஜ்யசபா நீட்டிப்பு!

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் இன்றுடன் முடிகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றும் வகையில், ராஜ்யசபா அலுவல் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் நாடகம்!

நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது, பிரதமர் மோடி தலைமையிலான அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. தற்போது தேர்தல் நெருங்குவதால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ளது. இது தேர்தலை மனதில் வைத்து ஆடும் நாடகம்.

-அபிஷேக் சிங்வி, காங்., செய்தி தொடர்பாளர்


Advertisement

வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Eswaren - Coimbatore,இந்தியா
08-ஜன-201918:15:37 IST Report Abuse

Eswarenமண்டல் கமிஷனின் 27% இட ஒதுக்கீடு அமல்படுத்தி இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. மத்திய அரசு வேலைகளில் OBC க்கான 27% இட ஒதுக்கீட்டில், கிட்டத்தட்ட 12% தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, ஒரு RTI தகவல் அறிக்கை கூறுகிறது. National Commission for Backward Classes (NCBC) க்கு NCSC (National Commission for Scheduled e) க்கு உள்ளது போல அரசியலமைப்பு அதிகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. OC க்கு 10% இட ஒதுக்கீட்டிற்கு காட்டும் அவசரம் ஓபிசி க்கு 27% நடைமுறைப்படுத்துவதில் காட்டலாமே?

Rate this:
Parusuram Parivar - Chennai,இந்தியா
08-ஜன-201920:11:48 IST Report Abuse

Parusuram Parivar, மத்தவனா பார்த்து வயிறு எரியாத, திறமை இருந்தும் எத்தனையோ பேர் படிக்க முடியாம இருக்கான் ...

Rate this:

உண்மையான சமூகநீதிமோடிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே.

Rate this:

உண்மையான சமூகநீதிமோடிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே.

Rate this:
மேலும் 66 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X