அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழகத்திற்கு எதிரான திட்டம் என்றால்
மத்திய அரசை எதிர்ப்போம்: முதல்வர்

சென்னை : ''தமிழகத்திற்கு நன்மை தரும் திட்டமாக இருந்தால், மத்திய அரசுக்கு துணை நிற்போம். எதிரான திட்டம் வந்தால், எதிர்ப்போம்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்திற்கு,எதிரான திட்டம்,மத்திய அரசை,எதிர்ப்போம்,முதல்வர்


சட்டசபையில் நடந்த விவாதம்:


எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின்: கவர்னர் உரையில், மென்மையான வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இது, மத்திய அரசை கெஞ்சுவதுபோல் உள்ளது. மத்திய அரசு, நம் உரிமைகளை தர மறுக்கிறபோது, கடுமை காட்ட வேண்டும். போர் முரசு கொட்ட வேண்டிய நேரத்தில், புல்லாங்குழல் வாசிக்கக் கூடாது.

தட்டி கேட்க வேண்டியதை, தட்டி கேட்க வேண்டும். ஆனால், குட்ட குட்ட குனியும் அரசாக உள்ளது. காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடகா

அறிக்கை தயாரிக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது; இதை கண்டிக்கவில்லை.

முதல்வர் பழனிசாமி: மேகதாதுவில், அணை கட்டக் கூடாது என்பது தான், ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணம். அதை சுட்டிக்காட்டி, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், பார்லிமென்டில் குரல் எழுப்பி உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில், அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நடந்து கொள்ளுமாறு, மத்திய அரசையும், கர்நாடக அரசையும் வலியுறுத்தி வருகிறோம்.

2007ல், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்தது. அப்போது, மத்தியில், காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அதில், தி.மு.க., இடம் பெற்றிருந்தது. தமிழகத்திலும், தி.மு.க., ஆட்சி நடந்தது. அந்த நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் வழங்கப்பட்ட உரிமையை, நிலைநாட்ட தவறி விட்டீர்கள். அந்த காலகட்டத்தில், 60 நாட்கள் அவகாசம் இருந்தது. அப்போது, மத்திய அரசிதழில் வெளியிட்டிருந்தால், 11 ஆண்டுகள், நமக்கு கிடைத்திருக்க வேண்டிய தண்ணீர் கிடைத்திருக்கும்.

நீங்கள் செய்யாததால், அவர்கள், நீதிமன்றம் சென்றனர். விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் நன்மை கிடைக்கிறது என்றால், அதற்கு எத்தனை பிரச்னைகள் வந்தாலும், சந்திக்க பயப்பட மாட்டோம். தமிழகத்திற்கு நன்மை கிடைக்கக்கூடிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும்,

Advertisement

மத்திய அரசுக்கு, துணை நிற்போம். எதிராக, எந்த திட்டம் வந்தாலும் எதிர்ப்போம்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர், துரைமுருகன்: காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, அரசிதழில் வெளியிடுவதற்கு முன், குறைகள் இருந்தால், நடுவர் மன்றத்தில் தெரிவிக்க, ஓராண்டு அவகாசம் உண்டு. அதற்குள், ஆட்சி மாற்றம் வந்து விட்டது.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்ததும், அதை அரசிதழில் வெளியிட்டிருந்தால், பிரச்னை வந்திருக்காது என்பதை தான், முதல்வர் எடுத்துரைத்தார். நீங்கள் செய்யாததால், ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசை வலியுறுத்தினார்; செய்யவில்லை. நீதிமன்றம் சென்று, அரசிதழில் வெளியிட செய்தார். இவ்வாறு விவாதம் நடந்தது.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pandi - Katumandu,நேபாளம்
08-ஜன-201920:48:49 IST Report Abuse

PandiSaami, onnu Mattum purichikonga unga ooota pasaka vaarirum.

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
08-ஜன-201916:44:16 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்என்னங்க புகழ் பாஜகவை மதவாத கட்சி என சொல்லலாம், பாட்டாளி மக்கள் கட்சியை ஜாதி கட்சி என கூறலாம்,அஇஅதிமுகவை அடிமை கட்சி என சொல்லலாம்.........அவர்களின் தொண்டர்கள் யாரும் இவ்வளவு கோபம் கொள்வதில்லையே.............எனவே இன்னும் சொல்கிறேன் கட்டிங் காங்கிரஸ், மதவாத முஸ்லிம்லீக்,ஜாதிகட்சி......இவைகள் ஊழல் திமுக கூட்டணியில் உள்ளதே.......

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
08-ஜன-201913:33:34 IST Report Abuse

sahayadhasபரவா இல்லை தைரியம் உள்ளது வாழ்த்துகள்

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X